[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS காஷ்மீருக்கு இன்று சென்று பார்வையிட ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் திட்டம். கட்டுப்பாடுகளை மீறி வர வேண்டாம் என ஜம்மு காஷ்மீர் அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

தமிழ், தெலுங்கில் டாப் கியரில் கீர்த்தி சுரேஷ்!

who-is-tamil-cinema-s-top-heroine

தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்கான ஆயுள் குறைவுதான். மற்ற மொழிகளில் அதிகமா என்றால், அங்கும் இப்படித்தான். அதற்குள் நிலை த்து நின்று வாய்ப்புகளைப் பிடித்து முன்னேறுவது திக், திகில் போராட்டம்! படங்களின் வெற்றிதான் இங்கு எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. அந்த வகையில் இன்றைய தேதியில் ஹீரோயின்களின் டாப் லிஸ்டில் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்!

‘கீர்த்தி தமிழ்ல அறிமுகமானப்ப, அவருக்கு பெரிய வரவேற்பு இல்லை. அவர் நடிச்சு முதல்ல வெளியான, ’இது என்ன மாயம்’ பெருசா போக லை. ’ரஜினிமுருகன்’ கவனிக்க வச்சுது. ரசிகர்கள்ட்ட கீர்த்தியை கொண்டு போனதும் இந்தப் படம்தான். ’தொடரி’ கீர்த்திக்கு பெரிய வாய்ப் பை கொடுக்கலை. அப்புறம் ’ரெமோ’ படம், தமிழ்லயும் தமிழ் ரசிகர்கள்ட்டயும் கீர்த்திக்கு நிலையான இடத்தைத் தேடிக் கொடுத்தது. அந்த இட ம், ’பைரவா’ படத்துல ஏறி, இறங்குச்சு. சமீபத்துல வந்த ’நடிகையர் திலகம்’ ஹிட்டால, தமிழ், தெலுங்குல கீர்த்தி மார்க்கெட் ஜிவ் வுன்னு ஏறியி ருக்கு’ என்கிறார் நீண்ட நாட்களாக, தமிழ் சினிமாவை கவனிக்கும் விமர்சகர் ஒருவர். 

ஒவ்வொரு காலகட்டத்திலும் இரண்டு நடிகைகள் போட்டியில் இருப்பார்கள். ஒரு பக்கம் அசின் என்றால், இன்னொரு பக்கம் நயன்தாரா. அசின் இந்திக்கு சென்ற பின், நயன்தாராவுக்கு போட்டியாளர் ஆனார் த்ரிஷா. வாய்ப்பைத் தட்டிப்பறிப்பதில் இருவருக்கும் கடும் போட்டி நடந்ததாகக் கூட சொல்வார்கள். பிறகு நயன்தாராவும் த்ரிஷாவும் உயிர்த் தோழிகளானது தனிக் கதை! 

இவர்களை அடுத்து தமன்னா வந்தார். அடுத்த சில வருடங்களிலேயே அவருக்கு போட்டியாளர் ஆனார் காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு இரண்டிலும் இருவருக்கும் பெரும் போட்டி. இதற்கிடையே அனுஷ்கா, சமந்தா!

டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா இவர்கள்தான் மாறி மாறி நடித்துக்கொண்டிருந் தனர். இவர்களை அடுத்து ஸ்ருதிஹாசன், ஹன்சிகா உட்பட சில நடிகைகள் வந்தனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நடித் தாலும் நயன்தாரா போல சூப்பர்  ஸ்டார் அந்தஸ்து கிடைக்கவில்லை ஸ்ருதிக்கு. அதற்காகப் போராடுகிறார் அவர். 

ஸ்ருதிக்கு அடுத்த ஆப்ஷனாக சமந்தாவையோ, சமந்தா இல்லையென்றால் ஸ்ருதியையோ புக் செய்தார்கள் தயாரிப்பாளர்கள். இப்போது, சம ந்தாவுக்கு திருமணமாகிவிட்டது. நயன்தாரா, அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் சீனியர் ஹீரோயின்களாகிவிட்டனர். நயன்தாரா ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் இப்போதைய மோஸ்ட் வான்டட் ஹீரோயினாக ஆகியிருக்கி றார் கீர்த்தி சுரேஷ்! அனைத்து பெரிய ஹீரோக்களும் தயாரிப்பாளர்களும் அவரையே டிக் செய்கிறார்களாம் தங்கள் படங்களுக்கு. 

‘ஒரு கேரக்டருக்கு கீர்த்தி சுரேஷை இயக்குனர் முடிவு செய்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் கால்ஷீட் கிடைக்கவில்லை என்றால் அடுத்த ஆப்ஷனுக்கு சிறப்பாக நடிக்கக் கூடிய நடிகை இல்லை. நடிப்பு, லுக், ரசிகர்களின் விருப்பம் மூன்றுமே கீர்த்தியிடம் இருக்கிறது. அதோடு தெலுங்கு மார்க்கெட்டும் பலம். அதனால் அவர் கால்ஷீட்டுக்கு காத்திருக்கலாம்’ என்கிறார் மானேஜர் ஒருவர்.

இந்த டிமாண்டை வைத்து சம்பளத்தை ஒரு கோடியாக கீர்த்தி உயர்த்தி விட்டார் என்கிறார்கள். இப்போது விக்ரமுடன், ’சாமி 2’, விஷாலின் ’சண்டக்கோழி 2’, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம், அட்லீ இயக்கும் படம் என நீள்கிறது கீர்த்தியின் பட லிஸ்ட்!

‘நம்பர் ஒன், டாப் லிஸ்ட்.. இப்படின்னு எந்த நடிகையை பற்றியும் மீடியா எழுதலாம். ஆனா, நிஜம் வேற. நாளைக்கே வேறு நடிகைகள் நடிச்சு ரெண்டு படங்கள் ஓடினா, அதுல நடிச்ச ஹீரோயின்களுக்கும் மார்க்கெட் ஏறிடும். சினிமாவுல இதெல்லாம் சகஜம் பாஸூ’ என்கிறார் ஆர்ட்டி ஸ்ட் மானேஜர் ஒருவர்!

அதையும் மறுப்பதற்கில்லை!

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close