[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS 4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு
  • BREAKING-NEWS பொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக

'பெண் ஹிட்லரா' அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தலைவர் ?

gina-haspel-sworn-in-as-first-woman-cia-director-despite-torture-claims

அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.,வுக்கு முதல் முறையாக பெண் ஒருவர் தலைவராக நியமனம் செய்யப்பட்டு இன்று பதவியேற்றார். ஆம் அவர்தான் கினா ஹெஸ்பெல். இந்த விவரத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். மேலும், அதில் கினா ஹெஸ்பெல் எதற்காகவும், எப்போதும் வளைந்து கொடுக்காதவர் எடுத்துக்கொண்ட விஷயத்தில் இருந்து பின் வாங்கமாட்டார் என்று ட்ரம்ப் பெருமையாக குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் குறிப்பிடுவது போல செயல்படுபவர்தான் 61 வயதான கினா ஹெஸ்பெல், தன் நாட்டுக்காக எந்தக் கட்டத்துக்கும் செல்லும் விசுவாசி. ஆனால், இந்தப் பெண்ணின் மனதில் துளிக் கூட மனிதம் கிடையாது என மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கினா ஹெஸ்பெல் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விதவிதமாக சித்ரவதை செய்வதில் கில்லி என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கினா ஹெஸ்பெல் மீது வண்டி வண்டியாக மனித உரிமை மீறல் புகார்கள், இப்போதே படையெடுக்க தொடங்கியிருக்கிறது. இவர் அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ.வில் 30 ஆண்டுகளாக நுண்ணறிவு பிரிவில் வேலை பார்த்து வந்தார். கினா ஹெஸ்பெல் எதுமாதிரியான "ட்ரீட்மெண்ட்"களை குற்றஞ்சாட்டுபவர்களிடம் கையாள்வார் என தெரியுமா ? 

விசாரணைக்கு அழைத்து வருபவர்களை தண்ணிக்குள் மூழ்கடித்து மூச்சு திணறவைக்கு கொல்வது, பிரிட்ஜுக்குள் குளிர வைத்து சாகடிப்பது. உடம்பின் முக்கிய உயிர் நரம்புகளை குறி வைத்து அடித்தே கொல்வது என்றெல்லாம் கினா ஹெஸ்பெல் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை வைத்து விளாசியுள்ளார். இதோடு மட்டுமல்லாமல் ஒரு கர்ப்பிணி பெண்ணை  வயிற்றில் எட்டி உதைத்தே அவருடைய கருவைக் கலைத்திருக்கிறார். இதெல்லாம் உலக மனித உரிமை அமைப்புகள் வைக்கும் குற்றச்சாட்டுகள். அதோடு ஈராக்கில் பாக்தாத் சிறைச்சாலையில் நடந்த கொடூரங்கள் புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் வெளியானபோது அங்கேயிருந்த வீடியோ ஆவணங்களையும், சி.ஐ.ஏ. வசமிருந்த வீடியோ ஆவணங்களையும் இவர்தான் அழித்தார் என்கிறது அமென்ஸ்டி அமைப்பின் அறிக்கை. ஈராக்கில் சிஐஏ அதிகாரிகளால் கொடூரமாக துன்புறுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கு மருத்துவம் பார்த்த கப்பல் படை மருத்துவர் சோன்ட்ரா கோர்ஸ்பி "என் வாழ்நாளில் இப்படியொரு கொடூரமான விசாரணை செய்யும் அதிகாரியை பார்த்ததில்லை" என கினா ஹெஸ்பெல் குறித்து விவரிக்கிறார்.

டொனால்டு டிரம்ப் இவரை நியமித்தபோதே கடும் எதிர்ப்புகள் கிளம்பினாலும், செனட் சபையில் 45 எதிர்ப்பு ஓட்டுக்களும், 54 ஆதரவு ஓட்டுக்களும் கிடைத்ததினால் கினா ஹெஸ்பெல் இன்று கெத்தாக பதவியேற்றார். சவால்களை பற்றிஸ கவலைப்படாதவர் குற்றவாளிகளின் சிம்மசொப்பனம், ஆனால் மனிதமே இல்லாத பெண் என்று தொடர்ந்து ஊடகங்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறது. ஆனால், இதனை குறித்து துளிக் கூட கவலைப்படாமல் அமெரிக்க அதிபரிடம் விசுவாசமாக இருப்பதற்கான அனைத்து காரியங்களையும் செய்து வருகிறார் கினா ஹெஸ்பெல். இப்போது முழு அதிகாரம் கையில் இருப்பதால் இன்னும் எப்படியெல்லாம் குற்றவாளிகளிடம் கொடூரங்களை நிறைவேற்றலாம் என எண்ணி தனது பணியை தொடங்கியுள்ளார் கினா ஹெஸ்பெல்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close