[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
  • BREAKING-NEWS 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

சினிமாவும்.. அம்மாவும்.. நெஞ்சை உருக்கும் வரிகள்..!

mothers-song-in-tamil-cinema

வார்த்தைக்குள் அடக்க முடியாத அன்பு ‘அம்மா’. அதனால்தான் அம்மாவை பற்றி பேசும்போதெல்லாம் நம்மையறியாமல் நமது உணர்ச்சிகளின் வேகம் அதிகரிக்கும். அம்மா இல்லாமல் இந்த உலகும் அமையாது. அப்படிப்பட்ட தாயை கொண்டாட அன்னையர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படும் நிலையில் பலரும் தங்களது அம்மாக்களுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அம்மாவின் பாசத்தை தொடர்புபடுத்தி எழுதப்பட்ட சினிமா பாடல்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

1.தாய் இல்லாமல் நான் இல்லை

“தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்”

அடிமைப் பெண் படத்தில் வரும் இப்பாடலில் எம்ஜிஆர் நடித்திருப்பார். அதிமுக தொடர்பான ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் தவறாமல் இப்பாடல் இடம்பெற்றிருக்கும் 

2.அன்னையை போலொரு தெய்வமில்லை

“அன்னையை போலொரு தெய்வமில்லை
அவள் அடி தொழ மறுப்பவர் மனிதரில்லை
மண்ணில் மனிதரில்லை!!”

சிவாஜி கணேசன் நடித்திருந்த இப்பாடல் தாயின் உன்னதத்தை உலகிற்கு உணர்த்தும் விதமாக அமைந்த பாடல்.

3.அம்மா என்றழைக்காத உயிரில்லையே 

“அம்மா என்றழைக்காத உயிரில்லையே 
அம்மாவை வணங்காது உயர்வில்லையே 
நேரில் நின்று பேசும் தெய்வம் 
பெற்ற தாயன்றி வேரொன்று ஏது”

மன்னம் படத்தில் இடம்பெற்ற இப்பாடலை வாலி எழுதியிருந்தார். இப்பாடலில் ரஜினி தான் வருவார். இப்பாடல் ரஜினிக்கு தாய்மார்கள் மத்தியில் தனி அந்தஸ்தையே பெற்றுத் தந்தது என கூறலாம்.

4. என்ன முள்ளுதைக்க விடல நீயே

“கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்(னை)ன கல்லோடச்சு வளத்த நீயே
முள்ளுக்காட்டில் முளைச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே”

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த தென்மேற்கு பருவக்காற்றில் இடம்பெற்றிருந்த கள்ளிக்காட்டில் இப்பாடல் பாடல் கல் உள்ளம் படைத்தவர்களின் நெஞ்சையும் கரைக்கும் விதமான பாட்டு. இப்பாடலை வைரமுத்து எழுதியிருந்தார்.

5.உந்தன் கண்ணில் ஏன் தான் ஈரம்?

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ நம் சொந்தங்கள் யார்யாரோ?
உந்தன் கண்ணில் ஏன் தான் ஈரம்?

தளபதி பாடலில் இடம்பெற்ற இப்பாடலை கேட்கும்போதெல்லாம் பலருக்கும் கண்கள் கலங்கும்.

6. வண்ணம் நீயே ..வானும் நீயே

கண்கள் நீயே..காற்றும் நீயே 
தூணும் நீ ..துரும்பில் நீ 
வண்ணம் நீயே ..வானும் நீயே 
ஊணும்நீ ..உயிரும் நீ

முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் இடம்பெற்ற இப்பாடலை தாமரை எழுதியிருந்தார்.

7. நீ தந்த அன்பு கிடைத்திடுமா

நூறு சாமிகள் இருந்தாலும்
அம்மா உன்னை போல் ஆகிடுமா
கோடி கோடியை கொடுத்தாலும்
நீ தந்த அன்பு கிடைத்திடுமா

பிச்சைக்காரன் படத்தில் இடம்பெற்றிருந்த இப்பாடலை பாடலாசிரியர் ஏக்நாத் எழுதியிருந்தார்.

8. தேடிப்பாத்தேனே காணோம் ஒன்ன

அம்மா அம்மா நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா
தேடிப்பாத்தேனே காணோம் ஒன்ன
கண்ணாமூச்சி ஏன் வா நீ வெளியே
தாயே உயிர் பிரிந்தாயே

வேலையில்லா பட்டதாரி படத்தில் இடம்பெற்றிருந்த இப்பாடலை நடிகர் தனுஷ் எழுதியிருந்தார்.

9. ஆராரிராரோ நான் இங்கு பாட

“ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து” 

ராம் படத்தில் இடம்பெற்றிருந்த இப்பாடலை சிநேகன் எழுதியிருந்தார்.

10. தாய் போல தாங்க முடியுமா?

“ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவை வாங்க முடியுமா நீயும்?
அம்மாவை வாங்க முடியுமா நீயும்?
ஆயிரம் உறவு வந்து உன்னை தேடி வந்து நின்னாலும்
தாய் போல தாங்க முடியுமா?”

வியாபாரி படத்தில் இடம்பெற்றிருந்த இப்பாடலில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருப்பார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close