[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...
  • BREAKING-NEWS வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு

பாறைகளுக்கு நடுவில் பாயுமா நீர்? - வறண்ட மலைக் கிராமத்தில் தவிக்கும் மக்கள்

moongil-palam-village-near-kodaikanal-people-struggle-for-water

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல் மலையில், மன்னவனூர் ஊராட்சிக்குட்பட்ட மூங்கில் பள்ளம் என்ற கிராமம் உள்ளது. அழகிய மலைப்பள்ளத்தாக்கு வனப்பகுதிக்கு நடுவே அமைந்திருக்கும் இந்தக் கிராமத்திற்கு சாலை வசதி இல்லை. சுமார் 10 கிலோமீட்டர் வனப்பகுதிகளுக்குள் நடந்து சென்று, தலைகீழாக அமைந்திருக்கும் பள்ளத்தாக்கிற்குள் சிரமப்பட்டு, ஆபத்தான ஐந்து ஏணிகளின் வழியே இந்தக் கிராமத்திற்கு செல்ல வேண்டும். அந்தக் கிராம மக்கள்,  கும்பூர் என்ற துணை கிராமத்திற்கு வந்து அரிசி பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்களை தலையில் சுமந்தபடி எடுத்து செல்வது, அவல நிலையாக கருதப்படுகிறது. 

மூங்கில் பள்ளம் கிராமத்தில் இரண்டு இடங்களில் மக்கள் வசிக்கின்றனர். நுழைவு பகுதியில் நான்கு குடும்பங்களும், கிராமத்தின் கடைசி பகுதியில் சுமார் 20 குடும்பங்களும் வசிக்கின்றனர். கிராமத்தின் நுழைவு பகுதியில் வசிக்கும் நான்கு குடும்பங்களுக்கு வீடுகள் இல்லாமல் அந்தப் பகுதியில் உள்ள குகைக்குள் குழந்தைகளுடன் வசிப்பதாக வேதனையுடன் கூறுகின்றனர். 

 மேலும் கிராமத்திற்கு குடிநீர் வசதி இல்லாமல், அருவி ஓடும் பள்ளத்தாக்கிற்குள், சுமார் 2 கிலோ மீட்டர் இறங்கி சென்று ஒரு குடம் குடிநீர் எடுப்பதாக கூறுகின்றனர். ஒரு குடம் குடிநீர் எடுக்க 2 மணி நேரம் பயணப்பட வேண்டியதாக வேதனைப்படுகின்றனர்.  கிராமத்தின் கடைசி பகுதியில் வசிக்கும் 20 குடும்பங்களுக்கும் இதே நிலைதான். மின்சாரம் இல்லாமல் அவதியுற்ற இவர்களின் நிலையை நமது புதிய தலைமுறையில் செய்தியாக வெளியிட்டு, அரசும் சுழற்சங்கமும் இணைந்து சூரிய சக்தி மூலம் அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதியை ஏற்படுத்தி தந்தது. குடிநீர் பிரச்னையை தீர்க்க அருவியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு குழாய் இணைப்பு கொடுத்து, கிரமத்தில் குடிநீர் தொட்டி அமைத்து நீர் எடுக்க உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 

தற்பொழுது கிராமத்திற்கு கீழான வயல் என்ற பகுதியில் இருந்து தண்ணீர் குழாய் வருகிறது. அந்தக் குழாய்களில் வறட்சி நேரத்தில் தண்ணீர் வருவதில்லை. கீழான வயல் விவசாயிகள் தண்ணீரை விவசாயத்திற்கு எடுப்பதாலும் தண்ணீர் வருவதில்லை. எனவே அருவியில் இருந்து நீரை எடுப்பது ஒன்றுதான் நிரந்தர தீர்வு. இந்தக் கடினமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு கிராமத்திற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தவும், வீடில்லாதவர்களுக்கு தகரம், உள்ளிட்ட துணை பொருட்கள் வழங்க. அரசுக்கு அந்தக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மூங்கில் பள்ளம் கிராம மக்களின் கடினமான வாழ்க்கை சூழலையும், சாலை இல்லாத நிலை,  குடிநீர் பிரச்சனை, வன விலங்கு பிரச்சனை, குகைகளில் வாழும் அவல நிலை உள்ளிட்ட அனைத்து விசயத்தையும் கோட்டாட்சியர் மோகன் கவனத்திற்கு நாம் கொண்டு சென்றபொழுது, அந்தக் கிராமத்தின் குடிநீர் மற்றும் குடியிருப்பு விசயத்தை உடனடியாக போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close