[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு
  • BREAKING-NEWS மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS கேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு
  • BREAKING-NEWS சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
  • BREAKING-NEWS பிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம்

சீண்டிய ரசிகர்கள்...சீறிய சிஎஸ்கே வீரர்கள் !

chennai-super-kings-senior-players-rocks-once-again

இரண்டாண்டு இடைவெளிக்கு பிறகு களம் காண இருந்த சென்னை அணிக்கு எக்குத்தப்பான எதிர்ப்பார்ப்பு இருந்தது உண்மை. 100 ஹீரோக்கள் இருக்கும் இடத்தில் ஒரு “சூப்பர் ஹீரோ” வந்தால் எப்படி இருக்கும்? அப்படிதான் வந்து நின்றது சென்னை அணி. தோனியை மீண்டும் சென்னை எடுத்து விட வேண்டும் என ரசிகர்கள் ஆர்வம் கரைபுரண்டது. தலா ஒவ்வொரு அணியும் ஏற்கனவே விளையாடிய மூன்று வீரர்களை அப்படியே வைத்துக் கொள்ளலாம் என்றநிலை வந்தபோது தோனி, ரெய்னா, ஜடேஜா மூவரையும் தேர்வு செய்தது சென்னை அணி. 

ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிஜமானது. நினைத்த மாதிரியே வந்து நின்றார் தோனி.  தோனி, ரெய்னா ‘பிரெண்ட்ஷிப்’உலகம் அறிந்தது. மைதானத்தில் இந்த இருவரும் இறங்கி நின்றால் அலப்பறை அள்ளும். இந்தக் கூட்டணி மீண்டும் கிடைத்ததில் சென்னை ரசிகர்களுக்கு பெருத்த மகிழ்ச்சி. ஆனால் இவை எல்லாம் ஏலம் எடுக்கும் நிகழ்ச்சிக்கு முன்பு வரைதான். ஏலம் முடிந்த அன்று மாலையிலிருந்து சென்னை அணி பற்றி சமூகவலைத்தளத்தில் வசை பாடினார்கள் ரசிகர்கள். சென்னை அணி ரசிகர்களும் அதில் கூட்டணியில் குதித்து குஷி அடைந்தார்கள். இந்த வெறுப்புக்கு காரணம், வயசு. கிரிக்கெட் உலகில் ‘படையப்பா’ படத்தில் வரும் ‘வயசானாலும் அழகும் ஸ்டைலும் உங்கள விட்டு இன்னும் போல’ என டயலாக் பேச முடியாது. கிரிக்கெட் ரசிகர்களிடம் ‘மொக்கை’ என்று பல்ப் வாங்க வேண்டிருக்கும். ‘அட்டு பீசு’ என்று நம் வாயை அடைத்துவிடுவார்கள் அவர்கள். ஐபிஎல் என்பது இளசுகளுக்கான இடம். இளைஞர்கள் உள்ள அணிதான் துடிப்பாக செயல்படும். அந்தக் கருத்தை பலமாக நம்புகிறது இளைய பட்டாளம். விவகாரம் இப்படி இருக்க, நம்ம ப்ளையர் எல்லாம் தொந்தியும் தொப்பையுமாக களத்தில் குதித்தால் கைத்தட்டுவார்களா என்ன? 20/20 கிரிக்கெட் உலகில் முப்பது ப்ளஸ் என்பது முடிந்து போனக் கதை. 

வெளிநாட்டு வீரர்களின் தேர்வும் கூட நம்ம விஷயத்தில் ரெம்ப ரெம்ப சுமார்தான். சொல்லி கொள்ளும் படி ஒரு ஸ்டார் ப்ளையர் கூட இல்லை என தங்களின் வருத்தங்களை கொட்டித் தீர்த்தனர் ரசிகர்கள். போதாக்குறைக்கு சென்னை அணி தவிர்த்து மற்ற அணிகளில் பல அதிரடி வெளிநாட்டு வீரர்கள் அணிவகுத்து நின்றார்கள். சில முன்னாள் வீரர்களும் கூட சென்னை அணி பொருத்தவரை  இந்த வருடம் சுமாரான அணிதான் என சான்றிதழ் அளித்தார்கள். இத்தனை விமர்சனங்களையும் தாண்டி  ஐபிஎல் தொடங்கியது. அத்துணை விமர்சனங்களும் சுக்கு நூறாக நொறுங்கியது..“பழைய ஒயினுக்குதன் ருசி அதிகம்” 2017 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆட்ட நாயகன் விருது வாங்கிய தோனி உதிர்த்த இந்த வார்த்தையை லேசில் மறக்க முடியாது.அதை மீண்டும் மெய்பிக்கிறார் தோனி. 

இதுவரை 8 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை அணி 6 போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உசந்து உட்காந்திருக்கிறது. அதிக ரன் குவித்தவர்கள் பத்து பேர் பட்டியலில், சென்னை வீரர்கள் மொத்தம் மூன்று பேர். சிலமுறை தட்டுதடுமாறி ஃப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் சென்னை அணி, இந்த முறை இன்னும் இரண்டு, மூன்று போட்டிகளில் வென்றாலே போதும். ‘எக்ஸ்ஃபியர் டீம்’என சொல்லியவர்களுக்கு இப்படி பல சாதனை மூலம்  பதில் சொல்லி வருகிறார்கள் நம் சென்னை வீரர்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் இளம் வீரர்களை விட மூத்த வீரர்களின் செயல்பாடு தாறுமாறாக இருக்கிறது.

அம்பத்தி ராயிடு

2018 ஐபிஎல் சீசனில் சர்ப்ரைஸ் பேக்கேஜ் அம்பத்தி ராயிடு! 32 வயதான இவர், 2013 ஆம் ஆண்டு ஜிம்பாபே அணிக்கு எதிராக இந்திய அணியில் களம் கண்டார். இதுவரை இந்திய அணிக்காக 30 இன்னிங்சில் விளையாடி உள்ள ராயிடு 1055 ரன்களுடன் சராசரி 50.24 வைத்து இருகிறார். ஆனாலும் இந்திய அணியில் இதுவரை நிலையான இடம் கிடைக்கவில்லை. ஐபிஎல் போட்டியில்  இதுவரை மும்பை அணிக்காக விளையாடி வந்த ராயிடு நடுவரிசை வீரராக களம் கண்டார். அவ்வப்போது அணியின் வெற்றிக்கு உதவினாலும், பெரிய அளவிற்கு சோபிக்கவில்லை. ஆனால் இந்த ஐபிஎல்லில் அம்பத்தி ராயிடுயின்  இந்த விஸ்வரூபதை யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். தொடக்க வீரராக களம் இறங்கும் ராயிடு 2018 ஆண்டின் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கிறார். இதுவரை 8 இன்னிங்சில் விளையாடி உள்ள அவர், இரண்டு அரைசதம் உட்பட 370 ரன்கள் குவித்து உள்ளார். அணியின் தேவைக்கு ஏற்ப நடுவரிசை வீரராகவும் களம் இறங்கும் இவர், அதிரடியால் மிரட்டிவது அணியின் மிக பெரிய பலம்!

சுரேஷ் ரெய்னா

31 வயதான ரெய்னா ‘மிஸ்டர் ஐபிஎல்’! ‘சூரியவம்சம்’ படத்தில் வரும் ‘சனி, ஞாயிறு வந்தாலே சின்னராசை கையால் பிடிக்க முடியாது’ என்ற வசனத்திற்கு ஏற்றவர் ரெய்னா. தேசிய அணியில் எப்படி விளையாடுகிறார், முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் எப்படி விளையாடுகிறார் என்பது முக்கியமில்லை. ஆனால் ஐபிஎல் மேட்ச் விளையாட வந்துவிட்டால் ரெய்னாதான் ‘கிங்’. 2010 ஐபிஎல் தொடர் தவிர்த்து மற்ற அனைத்து ஐபிஎல் தொடரிலும் 400 ரன்கள் கடந்த ஒரே வீரர். இதுவரை 168 போட்டியில் விளையாடி உள்ள இவர் 4745 ரன்களுடன் ஐபிஎல் தொடர்களில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். கடந்த முறை குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட இவர், இந்த ஐபிஎல் பொருத்தவரை பெரிய அளவிற்கான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனாலும் அவர்தான் இப்போதும் சிஎஸ்கே அணியின் தூண். தனிப்பட்ட சாதனைக்காக விளையாடாத இவர், மிக சிறந்த பீல்டர் என்பதை தனியாக சொல்ல வேண்டாம். 2018 ஐபிஎல் சீசனில் இரண்டு போட்டியில் விளையாடாத ரெய்னா இரண்டு அரை சதங்களுடன் 205 ரன்கள் சேர்த்துள்ளார். வரும் ஆட்டங்களில் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினால் சிஎஸ்கே பேட்டிங் மாஸ்தான்!

ஷேன் வாட்சன்

ஆஸ்திரேலிய அணி கண்டெடுத்த முக்கிய ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஷேன் வாட்சனுக்கும் நிச்சியம் இடம் உண்டு. கடந்த சில ஆண்டுகளாகவே ஃபார்ம் இன்றி தவித்து வருகிறார். ஏன் அவர் ஆஸ்திரேலிய அணியில் இருந்து விடை பெற்றத்திற்குகூட அவருடைய ஃபார்ம்தான் காரணமாக சொல்லப்பட்டது. சென்னை அணி இவரை ஏலம் எடுத்த போது இவரையெல்லாம் ஏன் எடுத்தார்கள் என்று ரசிகர்கள் வினவினர். அவர்களுக்கு  தன்னுடைய பேட்டிங் மூலம் பதில் சொல்லி இருகிறார் வாட்சன். சில மாதங்களுக்கு முன் பாகிஸ்தானில் நடைபெற்ற பிசிஎல் போட்டியில் ஃபார்முக்கு திரும்பியவர்,  இந்த சீசனில் ஒரு போட்டியில் அதிக ரன் குவித்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 57 பந்துகளில் 106 ரன்கள் குவித்து, தான் யார் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். பந்து வீச்சாளராகவும் கைகொடுக்கும் இவருக்கு வயது 36.

டுவைன் பிராவோ

ஏலம் முடிந்த அன்று சென்னை அணியின் ரசிகர்களின் ஆறுதல் பிராவோதான்! பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சமமாக கலக்கும் இவர் சென்னை அணியின் துருப்புச் சீட்டு! இந்த சீசனில் சென்னை அணி வெற்றி கணக்கை தொடங்க காரணமே இவர்தான். முதல் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக பேட்டிங்கில் தடுமாறிய சென்னை அணி தோற்கும் என்றுதான் எல்லோருமே நம்பிக் கொண்டு இருந்தனர். ஆனால் 7-வது வீரராக களம் கண்ட இவர் 30 பந்துகளில் 68 ரன்கள் குவித்து சென்னை அணிக்கு வித்திட்டார். ஆனாலும் அதற்கு பிறகு அவருக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு அவ்வளவாக கிடைக்கவில்லை என்றாலும் சென்னை அணியின் கடைசிகட்ட ஒவர் இவர் இல்லாமல் நிறைவு பெறாது. தோனியின் நம்பிக்கைக்குரிய பந்து வீச்சாளரான இவர், கடைசிகட்ட ஓவர்களில் சிறந்த பந்து வீச்சாளர்கள் கூட அவ்வளவு சிறப்பாய் செய்ய முடியாத ‘ஸ்லோ பால்’ விஷயத்தில் வல்லவர்.  வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து கிட்டதட்ட விலகியேவிட்ட இவர், உலகம் முழுவதும் விளையாடும் டி20 போட்டியின் மோஸ்ட் வாண்டெட் ப்ளேயர். 

மகேந்திரசிங் தோனி

தாதாவுக்கு எல்லாம் தாதா என்பதைபோல  இவர் கேப்டனுக்கு எல்லாம் கேப்டன். நீ எந்த வீரரை வேண்டுமானாலும் கொடு; அவனை வெற்றி வீரனா மாற்றிக்காட்ட வேண்டியது என்னுடைய வேலை என்பது போலதான் ‘தல’ தோனி. சார், நீங்க எப்போ சார் ரிட்டயர்ட் ஆக போறீங்க என்ற கேள்வி அவரை தொடர்ந்து துளைத்துக்கொண்டே வந்தது. அதற்கெல்லாம் இப்போது கேளுங்கடா பார்ப்போம் என்கிற மாதிரி இருகிறது அவருடைய இந்த வருட ஐபிஎல் ஃபார்ம். 5வது வீரராக களம் இறங்கினாலும் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் 6வது இடத்தில் இருகிறார். 8 போட்டியில் விளையாடி உள்ள தோனி மூன்று அரை சதங்களுடன் 286 ரன்கள் குவித்து இருக்கிறார். மூன்றாவது போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக சென்னை அணி தோற்றாலும் முதுகு வலியோடு விளையாடிய தோனியின் பேட்டில் பட்ட பந்துகள் எல்லாம் தெரித்தன.. 36 வயதான தோனி யாருக்கும் நிரூபித்து காட்ட வேண்டிய இடத்தில் இல்லை என்றாலும், ஒவ்வொரு போட்டியிலும் மெருக்கேற்றிக் கொண்டே இருக்கிறார். சென்னை அணியை அதிகமுறை இறுதிபோட்டிக்கு கொண்டு சென்றுள்ள இந்த “சாம்பியன்”. 

சென்னை சூப்பர் கிங்ஸூக்கு பெரிய விசில் அடிங்க.. எங்க தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க..எல்லோ போடு! விசில் போடு!

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close