[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

“காங்கிரசுடன் கூட்டணி இல்லை என திமுக சொல்லட்டும்... பார்ப்போம்!” திருநாவுக்கரசர்

tamil-nadu-congress-president-thirunavukkarasar-exclusive-interview-in-puthiyathalaimurai

எனக்கு முதல்வராகும் ஆசை இருக்கு’என்கிறார் காங் தலைவர் திருநாவுக்கரசர். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் இவ்வளவு‘தில்’ஆக பேசுவது இதுவே முதன்முறை. ஆந்திர முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு சூடாக நடந்து முடிந்திருக்கும் நிலையில் இவரது பேச்சு அனலை அள்ளுகிறது. காங், திமுக கூட்டணியில் இருக்கிறதா? இல்லையா? அப்படி இருக்கிறது என்றால் அந்தக் கூட்டணிக்கு ஸ்டாலின் முதல்வரா? அல்லது திருநாவுக்கரசர் முதல்வரா? இந்த மூன்று வரியை படிப்பதற்குள் உங்களுக்கு மூச்சு முட்டுகிறது இல்லையா? அதே நிலைமைதான் நமக்கும். அவரிடமே இதற்கான விளக்கத்தைக் கேட்டோம். சென்னை ஏர்போர்ட் செல்லும் வேகத்தில் ‘ஷாட் அண்ட் ஸ்வீட்’ ஆக பதில் கொடுத்தார் திரு. புதிய தலைமுறை இணையதளத்திற்கு அவரளித்த பேட்டி இது. 


திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு பற்றி உங்கள் கருத்து என்ன? அது மூன்றாவது அணிக்கான அட்சாரமா? 

 

“பொதுவாக அரசியல் தலைவர்கள் சந்திப்பதோ, அப்படி சந்திக்கும் போது அரசியல் பற்றி பேசிக்கொள்வதோ ஒரு வழக்கமான நடைமுறைதான். இந்திய அளவில் பாஜகவிற்கு மாற்று என்பதை காங்கிரசால் மட்டுமே தர முடியும். பிரதமர் மோடிக்கு மாற்றாக ராகுல் காந்தியால்தான் இருக்க முடியும். மமதா, சந்திரசேகர ராவ் போன்ற தலைவர்களை சந்திப்பதுகூட மாநில கட்சிகள் ஒன்றாக சேர்ந்து மதவாதக் கட்சியான பாஜகவை வீழ்த்துவதற்கான முயற்சியே. தேசிய அளவில் காங்கிரஸ் இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. பாஜகவை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேர்தலுக்கு பிறகு கூட சில கட்சிகள் எங்களோடு கூட்டணி வைக்கலாம். சந்திரசேகர ராவ், மம்தா ஆகியோருக்கு தமிழ்நாட்டில் வாக்கு வங்கி இல்லை. அதனால் திமுகவிடம் அவர்கள் கூட்டணி வைப்பதால் இங்கு ஒன்றுமே நடக்கப்போவதும் இல்லை.” 

அவ்வப்போது இந்தச் சந்திப்பு தொடரும் என ஸ்டாலின் கூறியுள்ளாரே..?

“திமுகவை பொருத்தவரை இதுவரை நாங்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என வெளிப்படையாக சொல்லவில்லை. வெளிப்படையாக திமுக சொல்லாதவரை நாங்கள் யூகங்களின் அடிப்படையில் பதில் அளிப்பது சரியாக இருக்காது”

எஸ்.சி.,எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டம் விவகாரம் தொடர்பாக, வள்ளுவர் கோட்டத்தில் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நீங்கள் பங்கெடுக்காதது உங்களிடையே பனிப்போர் ஆரம்பமாகி விட்டதாக கூறப்படுகிறதே...?

“அன்றைய தினம் நான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி சென்றதால் என்னால் பங்கேற்க முடியவில்லை. எனக்கு பதிலாக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராமசாமி கலந்து கொண்டார். மற்றபடி எங்களுக்குள் எந்தச் சண்டையும் இல்லை.”

சமீபத்தில் ராகுல் காந்தியை சந்தித்தீர்கள்... அப்போது ஸ்டாலின் மூன்றாவது அணிக்கு ஆதரவு தெரிவித்தது பற்றி பேசினீர்களா..?

“அப்படி இதுவரை எதுவும் நடந்து விடவில்லை. அரசியல் தலைவர்கள் சந்திப்பது என்பது வழக்கமான ஒன்றுதான். இதுவரை திமுக தரப்பில் நாங்கள் தனி அணியாக போவதாகவோ, மூன்றாவது அணி அமைப்பதாகவோ அவர் பேசவில்லை. தேர்தல் நேரத்தில் நாடு முழுவதும் காங்கிரசை முன் நிறுத்தி ஒரு கூட்டணி அமையும். அப்போதுதான் அதில் யார் யாரெல்லாம் வருகிறார்கள், வரவில்லை என்பது தெரியும். மேற்கு வங்கத்தை பொருத்தவரை மம்தாவும், கம்யூனிஸ்ட்டும் எப்படி ஒன்று சேர முடியும்..? இப்போதைய நிலையில் பாஜக வரக்கூடாது என நினைக்கின்ற கட்சிகள் சந்தித்து பேசி வருகிறார்கள். அது இதுவரை முழுமை அடையவில்லை... அணிக்கு யார் தலைவர் என்பது தெரியவில்லை... அது பேச்சு வார்த்தை அளவிலேயேதான் இருக்கிறது. ஆகவே பிறகு பார்ப்போம்.”

இரண்டு வாரம் முன்பு ‘எனக்கும் முதல்வர் ஆகும் ஆசை இருக்கிறது’ என பேசி இருந்தீர்கள்.. தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்து பயணிக்க தயாராகி விட்டதா..?


“தமிழ்நாட்டை பொருத்த வரை ஐம்பதிற்கும் மேற்பட்ட முதலமைச்சர் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். எல்லோரும் தன்னை முதலமைச்சர் என்றுதான் சொல்லி வருகிறார்கள். அது ஆரம்பித்தக் கட்சியாக இருந்தாலும் சரி, இனி ஆரம்பிக்க போகின்ற கட்சியாக இருந்தாலும் சரி, ஏன் சின்னச்சின்ன கட்சிகள் கூட சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அப்போது காங்கிரஸ் மட்டும் ஏன் சொல்லக் கூடாது..? காங்கிரசும் வரும் தேர்தலில் இல்லையென்றாலும் வருங்காலத்தில் அந்த நிலையை எட்டும். அப்போது நானோ? அல்லது காங்கிரஸ் தொண்டன் வேறு யாரோ அந்தப் பொறுப்புக்கு வரலாம். அல்லது வருவார்கள். காங்கிரஸ் கட்சியின் இலக்கு தமிழ்நாட்டை ஒருநாள் ஆள வேண்டும் என்பதுதான். ஆதலால் நான் அப்படி சொன்னதில் எந்தத் தவறு இல்லை”

ரஜினி, கமல் அரசியல் பற்றி உங்களுடைய பார்வை என்ன..?

 


“இருவரின் அரசியலையும் நான் வரவேற்கிறேன். கமல் கட்சி ஆரம்பித்து பயணிக்க ஆரம்பித்துவிட்டார். ரஜினி கட்டமைப்பை எற்படுத்தி வருகிறார். அவர் இனிமேல்தான் கட்சி ஆரம்பிக்கவே போகிறார். யாருக்கு என்ன பலம் என்பது தேர்தலில் நின்று வெற்றி பெறுக்கின்றபோதுதான் தெரியும். அப்போதுதான் அவர்களின் இடத்தை நம்மால் கணிக்க முடியும்.”


இந்த இருவரில் வருகிற தேர்தலில் யாருடைய தாக்கம் அதிகம் இருக்கும் என நினைகிறீர்கள்..?


“அதை இப்போதே எடைப் போட முடியாது. இருவரும் கட்சி தொடங்கி மக்களிடம் போகட்டும். மக்களுடைய முடிவுதான் அதை தீர்மானிக்கும்.” 


ரஜினிக்கு பாஜக சார்பு இருப்பதா பேசிக் கொள்கிறார்களே?

 

 

“நான் அப்படி நினைக்கவில்லை. ரஜினி பாஜக பக்கம் போவார் என்றோ அல்லது அவரை பாஜக இயக்குகிறது என்றோ நான் நினைக்கவில்லை. அவர் பாஜக பக்கம் சென்றால் தலித் வாக்குகள், சிறுபான்மை வாக்குகள் அவருக்கு கிடைக்காது என்பது அவருக்கும் நன்றாக தெரியும். அதனால் அவர் பாஜக பக்கம் செல்லமாட்டர்.” அடித்து சொல்கிறார் திருநாவுக்கரசர். ரஜினியின் நீண்டகால நண்பர் இவர். விவரம் தெரியாமல் இதை சொல்வாரா?   

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close