[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்
  • BREAKING-NEWS டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது
  • BREAKING-NEWS புதிய தலைமைச்செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்திருந்தால் லஞ்ச ஒழிப்புதுறை விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கலாமே?- உயர்நீதிமன்றம்

நீங்கள் வாங்கும் தங்க நகை போலியானதா, உண்மையானதா ?

are-you-buying-gold-fake-or-real

அட்சைய திருதியை தினம் வருகிறது அன்றைய நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெரும் என்று பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையின் மீதான விவாதம் தனி என்றாலும், இந்த நம்பிக்கையை பயன்படுத்தி, BIS (இந்திய தர நிர்ணயம்) என்ற  உரிய அங்கீராரம் இல்லாத நகைக்கடைகள், ஹால்மார்க் நகைகள் என்ற பெயரில் தரக்குறைவான நகைகளை விற்பனை செய்து வருவதாக இந்திய தர நிர்ணய அமைப்பே தெரிவிக்கின்றது. 

அங்கீராம் பெற்ற நகைக்கடையை கண்டறிவது எப்படி, ஹால்மார்க் நகையை சோதித்து பார்ப்பது எப்படி ? 

ஹால்மார்க் என்றால் என்ன ? ஹால்மார்க் முத்திரையின் நோக்கம் என்ன ? 

தங்க நகைகள் வாங்கும் அனைவருக்கும் பரிட்சயமான சொல் ஹால்மார்க்.தங்கத்தின் சுத்தத்தன்மையை அளவிடுதற்கான அதிகாரப்பூர்வ முத்திரை தான் ஹால்மார்க். இது இந்திய தர நிர்ணய அமைப்பால் 2000 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஹால்மார்க் முத்திரை, நுகர்வோர்கள் தரக்குறைவான தங்க நகைகள் வாங்கி ஏமாற்றம் அடைவதை தவிர்த்து நுகர்வோர்களை பாதுகாப்பதற்காக உதவுகிறது.

பொதுமக்கள் கவனிக்க வேண்டிய 4 முத்திரைகள் :

ஹால்மார்க் முத்திரை என்பது மொத்தம் 4 முத்திரைகளை உள்ளடக்கியது ஆகும். பி.ஐ.எஸ் முத்திரை, நேர்த்திதன்மை முத்திரை, அஸேயிங் மற்றும் ஹால்மார்க் மையத்தின் முத்திரை, நகை விற்பனையாளர் முத்திரை, என்பது தான் அந்த நான்கு முத்திரைகள் ஆகும். ஒவ்வொரு நகையிலும் இந்த நான்கு முத்திரைகளும் இருந்தால் அது ஹால்மார்க் தங்க நகை எனப்படும். ஹால்மார்க் நகை என்று கூறி நகைக்கடையில் ஒரு நகையை விற்றால்  அந்த  ஒவ்வொரு நகையிலும் இந்த நான்கு முத்திரைகளும் இடம் பெற்றிருக்க வேண்டும். நான்கில் ஒரு முத்திரை இல்லாவிட்டாலும் அதை ஹால்மார்க் முத்திரை பதித்த நகை என்று கூற முடியாது. நாம் வாங்கும் நகை சிறிய மோதிரமாக இருந்தாலும் சரி, பெரிய ஆபரணமாக இருந்தாலும் சரி அந்த நகையின் அளவை பொறுத்து சிறியதாகவும் பெரியதாகவும் இந்த நான்கு முத்திரைகளும் இடம் பெற்றிருக்கும். BIS யிடம் அங்கீகாரம் பெற்ற நகைக் கடைகள் அனைத்திலும் பூதக்கண்ணாடி இருக்கும், இதை கொண்டு நாம் வாங்கும் நகை ஹால்மார்க் முத்திரை பதித்த நகையா என்று மக்கள் சோதித்து பார்த்து கொள்ளலாம்.

முக்கியமாக இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டியது , ஹால்மார்க் முத்திரை திட்டம் என்பது கட்டாயமாக்கப்பட்டதல்ல. தாமாக முன்வந்து கேட்கும் நகை வியாபாரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அப்படி இருக்கயில், பொதுமக்கள் தங்க நகைகள் வாங்கும் போது ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை மட்டுமே வாங்குவது என்பது, தாம் வாங்கும் தங்கத்தின் சுத்தத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு முத்திரையாகும்.

நகை வியாபாரிகள் அஸேயிங் மையத்தில் சென்று ஒரு நகைக்கு (எவ்வளவு எடையானாலும்)ஹால்மார்க் முத்திரை வாங்க வெறும் 18 ருபாய் மட்டுமே செலவு செய்கிறார்கள். எனவே, ஹால்மார்க் முத்திரை பதித்த நகைகள் அதிக விலை என்ற கூற்றும் பொய்யானதே.

நாம் வாங்கும் தங்கம் சுத்ததன்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்போர் செய்ய வேண்டியது  2 விஷயங்களைதான்.

1.   அங்கீகாரம் பெற்ற நகைக்கடைகளுக்கு செல்ல வேண்டும்.

2.   ஹால்மார்க் முத்திரை  உள்ள நகையா என்று சோதித்து பார்த்து வாங்க வேண்டும்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Goldதங்க நகை
Advertisement:
Advertisement:
[X] Close