[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பரவும் தொண்டை அடைப்பான் நோய்
  • BREAKING-NEWS பேருந்தும் மினி வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து - 9 பேர் உயிரிழப்பு..!
  • BREAKING-NEWS மணீஷ் பாண்டே, குணால் பாண்ட்யா மிரட்டல்: இந்திய ஏ அணி அசத்தல்
  • BREAKING-NEWS ஸ்ரீவைகுண்டம் அருகே அதிகாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

ஐ.பி.எல். Vs காவிரி : ஜெயிக்கப்போவது எது ? 

cauvery-issue-will-be-over-taken-by-ipl-in-coming-days

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்புச் சிக்கல் என தமிழகம் கொந்தளிப்பான சூழ்நிலையில் இருக்கிறது. மத்திய அரசை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் தொடங்கி பல்வேறு தரப்பினர் போராட்டம் நட்ததி வருகின்றனர். மற்றொரு பக்கம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்று வரும் தொடர் போராட்டம். இந்நிலையில் சென்னை மாநகர் மக்கள் சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டிகளை காண ஆயத்தம் ஆகி வருகின்றனர்.

எந்தாண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு மட்டும் ஏன் சென்னையில் ஐ.பி.லு.க்கு இவ்வளவு எதிர்பார்ப்பு ? அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாடு தடைக்கு பின்பு, தோனி தலைமையில் களமிறங்குவதே முக்கியக் காரணம். அண்மையில் சென்னை ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. அதற்கு இரவு முழுவதும் வரிசையில் நின்று இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முண்டியடித்துக்கொண்டு டிக்கெட்டுகளை பெற்றனர்.

இந்தக் காட்சியை பார்த்தவர்கள் சமூக வளைத்தங்களில் கொந்தளிக்க தொடங்கினர். தமிழகம் இப்போதுள்ள சூழ்நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் ஒரு கேடா ? என காட்டமாகவே கேட்டனர் சிலர். இன்னும் சிலர் ஐ.பி.எல். போட்டிகளை தமிழகத்தில் நடத்தினால் காவிரி மற்றும் ஸ்டெர்லைட் போராட்டம் மறக்கடிக்கப்படும் என இணையதளத்தில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ”April 10-ம் தேதி CSK-வின் முதல் Match. 50,000 கொள்ளளவு கொண்ட சேப்பாக்கம் ஸ்டேடியம் காலியாகத் தெரிந்தால் சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம். இந்தப் போட்டியை உலகம் முழுக்க டி.வி.யில் காண்பவர்களுக்குக் காரணம் தெரியவரும். நம் போராட்ட நோக்கம் ஒரே நாளில் எல்லா இடங்களுக்கும் காசு செலவில்லாமல், ஒரு சின்ன தியாகத்தால், நமது நோக்கம் பலரை சென்று சேர்ந்துவிடும்.இந்த ஒரே ஒரு போட்டியை ஸ்டேடியத்துக்குச் சென்று காணாமல் இந்த வாழ்வுப் போராட்டத்தை வலுப்படுத்துவோம்” என்று கூறினார்.

ஜேம்ஸ் வசந்தின் இந்த ஐடியாவை கேள்விப்பட்டாரா இல்லையா என தெரியவில்லை. தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டார், அதில் "காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழகத்தில் மக்கள் நடத்தி வரும் போராட்டங்களை ஆட்சியாளர்கள் திசைதிருப்ப கிரிக்கெட் போட்டிகளை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே இத்தகைய சூழ்ச்சிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும், ஐபிஎல் நிர்வாகமும் இரையாகிவிடக் கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது.அதேநேரம் கிரிக்கெட் விளையாட்டிற்கோ, அதன் ரசிகர்களுக்கோ, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கோ தாங்கள் எதிரானவர்கள் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். தங்களின் நியாயமான கோரிக்கை புறந்தள்ளப்பட்டால், கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என்று வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார். இதேபோன்ற கோரிக்கையை விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனும் வற்புறுத்தியுள்ளார்.

சமூக வலைததளங்களில் இன்னும் சிலர், ஐ.பி.எல். போட்டிகளுக்கு சென்று மைதானத்தில் காவிரி விவகராம் தாங்கிய கோரிக்கை பதாகைகளை காட்டி, உண்மை நிலவரத்தை உலகறிய செய்ய வேண்டும் என்றும் யோசனை தெரிவிக்கின்றனர். இலங்கையில் தமிழீழ படுகொலைகள் உச்சத்தில் இருந்தபோது, Stop Genocide போன்ற பதாகைகள், அங்கு நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளின்போது காண்பிக்கப்பட்டது. இதேபோன்ற முயற்சியை தமிழகமும் செய்ய வேண்டும் என்பது இளைஞர்களின் கருத்தாக உள்ளது.

உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தில், கமலஹாசன் ஒரு வசனம் பேசுவார் அது "மறதி, நாட்டின் தேசிய வியாதி" என கூறுவார். அதாவது ஒரு பிரச்சனை உச்சத்தில் இருக்கும்போது, மற்றொரு பிரச்சனை எழும்போது பழைய பிரச்சனையை மறந்துவிடுவோம் என்பதுதான் அது. அதேபோல காவிரி விவகாரம் இப்போது உச்சத்தில் இருக்கிறது, அதனை ஐ.பி.எல். எனும் கிரிக்கெட் போட்டி மறக்க வைத்துவிடுமா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close