[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து.
  • BREAKING-NEWS வேதாரண்யத்தில் இரண்டு தரப்பினரிடையே மோதல்: காவல்நிலையம் மீது கல்வீச்சு
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் கங்கையம்மன் கோயில் குளத்தில் கிடந்த மர்மப் பொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு.
  • BREAKING-NEWS தமிழகத்தில் எந்த விதத்திலும் தீவிரவாதம் தலைதூக்க முடியாது: ஜெயக்குமார்
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிகாட்டுகிறது?

water-management-in-dubai

ராமநாதபுரத்தில் பெய்யும் மழையில் 1% மழைகூட ஓராண்டு முழுக்க இங்கு பொழியாது. நன்னீர் ஏரிகள் ஏதுவும் இல்லை. ஆறுகள் இல்லை. நிலத்தடிநீர் இல்லை. ஓரளவிற்கு மேல் ஆழமாக தோண்டினால் கச்சா எண்ணெய் மட்டுமே கிடைக்கும். ஆனால் இந்தத் தேசம் தண்ணீரில் தன்னிறைவடைந்த தேசம். 24 மணி நேரமும் தடையில்லாமல் வீடுகளுக்கு தண்ணீர் வரும். தண்ணீர் தேவையில் 24% கடல்நீரை மட்டுமே நம்பியே இருக்கிறது துபாய். குடிநீர் கடலில் இருந்துதான் எடுக்கப்பட்டது என சத்தியம் செய்து சொன்னாலும் சிலர் நம்ப மறுப்பார்கள். 'காசுக்கு ஏற்ற தோசை' என்பதுபோல இங்கு தண்ணீர் 'காஸ்ட்லி'தான்.

1லி பெட்ரோல் 1.80 திர்ஹாம்ஸ் (ரூ.30) 1லி தண்ணீர் குடுவை கடைகளில் 3 திர்ஹாம்ஸ் (ரூ.51)விலைக்கு விற்பனையாகும். Dubai Electricity and Water Authorityயால் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் நீர் இந்த அளவிற்கு அதிக விலை இருக்காது. நீரின் தரமும் நன்றாகவே இருக்கும். DEWA வீடுகளுக்கு தண்ணீரை விநியோகித்து மட்டும் கட்டணம் வசூலிப்பதில்லை. வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீருக்கும் அதன் அளவை பொறுத்து கட்டணம் உண்டு.

தண்ணீரை அதிகம் பயன்படுத்தும் நகரங்கள் வரிசையில் துபாய் முன்னிலை வகிக்கிறது. துபாயில் ஒரு தனி நபர் ஒரு நாளுக்கு பயன்படுத்தும் தண்ணீரின் அளவு 550 லிட்டர். உலகின் சராசரி 250 லிட்டர் என்கிறது ஒரு ஆய்வு முடிவு. வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர்தான் மறுசுழற்சி செய்யப்பட்டு சாலையோர மரங்கள், பூச்செடிகள், பூங்காக்களுக்கு சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசன முறையில் பாய்ச்சப்படுகிறது.

துபாயை உள்ளடக்கிய ஐக்கிய அரபு நாடு முழுவதிலும் 1 லட்சம் ஹெக்டேர் அளவிற்கான விவசாயம் மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரைக் கொண்டு நடைபெறுகிறது என்பதுதான் ஆச்சர்யமான தகவல். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சர்வசாதாரணமாக 115°F வெப்பம் வீசும் காலத்திலும் இங்கு சாலை ஓரங்களில் பல வண்ண பூக்கள் பூத்துக் கொண்டிருக்கும். அந்தச் செடிகளின் வேர்களில் நீர் சொட்டிக்கொண்டிருக்கும்.

தண்ணீரை வீணாக்காமல் அதைக்கொண்டு நகரை அழகுபடுத்தி சுற்றுலா பயணிகளை ரசிக்க செய்கிறார்கள். இன்று உலக தண்ணீர் தினம் என்பதால் ஒரு காலத்தில் தண்ணீரில்லாத இந்தத் தேசம் இன்று நீர் மேலாண்மையில் பெற்றிருக்கும் ஆற்றலை எழுத வேண்டும் என தோன்றியது. 

கட்டுரை : நம்பிக்கை ராஜ்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close