[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

கோலியிடம் கல்யாண ஆசையை சொன்னது ஏன்? இங்கிலாந்து வீராங்கனை பேட்டி!

i-asked-kohli-to-marry-me-danielle-wyatt

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் அதிரடி வீராங்கனை டேனியல் வியாட் (Danielle Wyatt). ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் 56 பந்துகளில் அதிரடி சதம் அடித்து மிரட்டியவர். இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட்டில் முதல் டி20 சதம், இவர் அடித்ததுதான். விளையாட்டு இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலியிடம் தனது திருமண ஆசையை தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.

2014-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பைப் போட்டியின் அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விராத் கோலி  72 ரன்கள் குவிக்க, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. 

இதைப் பார்த்து ரசித்த வியாட், ‘கோலி என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?’ என்று ட்விட்டரில் கேட்க, பரபரப்பானது ட்விட்டர் உலகம். பத்தே நிமிடத்தில் ஆயிரம் ரீட்விட்டுகள். ஏகப்பட்ட கமென்டுகள் மற்றும் டிரோல்கள். 

பிறகு கோலியைச் சந்திக்க நேரிட்டது வியாட்டுக்கு. வெட்கத்தோடு பேசினார் அவரிடம். அதற்கு விராத், ‘இப்படியெல்லாம் நீங்க ட்விட் பண்ணக் கூடாது. நீங்க ஜாலியா போட்டிருவீங்க. ஆனா, இந்தியாவுல இதை சீரியசா எடுத்துக்குவாங்க’ என்று செல்லமாகக் கண்டித்தார். அது எனக்குப் பிடித்திருந்தது. உடனே, ‘ஸாரி’ சொன்னேன். இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விளையாட இந்திய அணி வந்ததும் விராத் கோலியை தேடிப் போய் சந்திச்சேன். அப்போ அவர் பயன்படுத்திய கிரிக்கெட் ’பேட்’டை பரிசாகக் கொடுத்தார். இப்ப அதை வச்சுதான் விளையாடறேன். இது எனக்கு ராசியான பேட்’ என்கிறார் வியாட்.

கடந்த டிசம்பரில் விராத் கோலி, அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்துகொள்ள, வியாட்டை கலாய்த்திருக்கிறார்கள் சக கிரிக்கெட் தோழிகள். அதில் ஒருவர் கிரிக்கெட் வீராங்கனை சாரா டெய்லர், ‘முதல்லயே நீ புக் பண்ணியிருக்கணும்’ என்று கிண்டலடிக்க, ’நீ கவலைப்படாத’ என்று இவர் சொல்ல, ஒரே ஜாலி கேலிதான்!

அந்த ஆக்ரோஷ செஞ்சுரி பற்றி கேட்டால் புன்னகைக்கிறார் வியாட். ‘அது ஒரு கதை. அப்ப எனக்கு உண்மையிலேயே உடல் நிலை சரியில்லை. சரியான ஜலதோஷம். அதை பற்றி கவலைப்படாம பேட்டிங்கில் இறங்கினேன். அப்ப சரியா நான் பேட் பண்ணலை. ஆனா, பவுண்டர்களும் சிக்சரும் தானா வந்து விழுந்தது. எனக்கே ஆச்சரியம்தான்’ என்று சிரிக்கிறார்.

ஆஷஸ் டி20 தொடரிலும் சிறப்பாக விளையாடி இருக்கிறார் வியாட். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதற்குக் காரணம் என்னவென்று கேட்டால், விராத் கோலியின் ’பேட்’டும், இங்கிலாந்து ரசிகர்களும் அன்பும் என்கிறார் வியாட்!


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close