[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு

’இறக்கிற வயசா மயிலு?’ மலரும் நினைவில் ’மீண்டும் கோகிலா’ இயக்குனர்!

director-rangarajan-speaks-about-sridevi

’’நான் உதவி இயக்குனரா இருக்கும்போதே எனக்கு ஸ்ரீதேவியை தெரியும். அவர் குடும்பத்துல நானும் ஒருத்தன். ரஜினி நடித்த ’ப்ரியா’ படத்துல இணை இயக்குனரா பணியாற்றினேன். சிங்கப்பூர்ல ஷூட்டிங். வழக்கமா ஸ்ரீதேவியோட அவங்க அம்மா எப்பவும் ஷூட்டிங்குக்கு வருவாங்க. ஆனா, ’ப்ரியா’வுக்காக சிங்கப்பூர் வர முடியலை. அப்போ அவங்க சொன்ன வார்த்தை இப்பவும் என் காதுல ஒலிச்சுட்டிருக்கு. ‘ரங்கராஜன் இருக்கும்போது எனக்கு என்ன கவலை. என் மகளை, அண்ணனா அவர் பார்த்துப்பார்’ னு சொன்னார். அதே போல அவரை நான் பார்த்துக்கிட்டேன்’ என்று மலரும் நினைவுகளில் மூழ்கிறார் இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன்.

கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்த ’கல்யாணராமன்’, ’மீண்டும் கோகிலா’ படங்களை இயக்கியவர் இவர். மேலும் கடல்மீன்கள், மீண்டும் பல்லவி, முத்து எங்கள் சொத்து உட்பட சில படங்களை இயக்கி இருக்கிறார். ஸ்ரீதேவியின் திடீர் மரணம் தன்னை மிகவும் பாதித்துவிட்டதாகக் கூறுகிறார் இவர்.

‘’’கல்யாணராமன்’ படத்தை இயக்கும்போது, கமல் ஹீரோவா பண்றார், கால்ஷீட் வேணும்னு ஸ்ரீதேவிகிட்டச் சொன்னதும் மறுபேச்சு பேசலை. உடனே கொடுத்தார். அந்தப் படத்து அனுபவங்களை சொல்ல ஒரு நாள் போதாது. அதே போல ’மீண்டும் கோகிலா’ பட அனுபவமும். டெடிகேஷன்னா அது ஸ்ரீதேவிதான். ஏழு மணிக்கு ஷூட்டிங்னு சொன்னா, ஆறரை மணிக்கே வந்துடுவார். அப்புறம்தான் மத்தவங்களே வருவாங்க. நடிப்புலயும் மிரட்டுவார். அவரைப் போன்ற நடிகைகள் கிடைப்பது கஷ்டம். அதாவது சினிமாவுக்காகவே வாழறதுன்னு இருக்கில்ல. அது ஸ்ரீதேவி மாதிரி நடிகைகளாலதான் முடியும். அதனாலதான் அவங்களால இந்தி சினிமாவுலயும் சாதிக்க முடிஞ்சது’ என்கிற ரங்கராஜன், மூன்று நாட்களுக்கு முன்தான் ஸ்ரீதேவி பற்றி கமல்ஹாசனிடம் பேசினாராம்.

‘வேற விஷயம் பேசறதுக்காக கமலுக்கு ஃபோன் பண்ணினேன். அப்படியே பழைய ஞாபகங்கள் வந்தது. ஸ்ரீதேவி பற்றியும் அவர்ட்ட பேசிட்டிருந்தேன். அடுத்த ரெண்டு நாள்ல இப்படியொரு செய்தி. இறக்கிற வயசா அது?’ என்று அமைதியாகிற ரங்கராஜன் சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் ஆரம்பித்தார்.

’’ நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடிச்ச ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படம் தமிழில் ரிலீஸ் ஆச்சு. அதுக்காக சென்னை வந்திருந்தார் ஸ்ரீதேவி. அப்போ ஒரு நட்சத்திர ஓட்டல்ல  டின்னருக்கு அழைச்சிருந்தார். போயிருந்தேன். ரஜினியும் வந்திருந்தார். அங்க, கணவர் போனி கபூரை கூப்பிட்ட ஸ்ரீதேவி, ‘சென்னையில் நான் மறக்க முடியாத நபர் இவர்தான்’னு என்னை அறிமுகப்படுத்தினார். ’சாரைதான் எனக்குத் தெரியுமே’ன்னு சொன்னார் கபூர். எப்பவும் எம்மேல ஸ்ரீதேவி மரியாதை வச்சிருப்பவர்ங்கறதுக்காக இதைச் சொன்னேன். 


சமீபத்துல நான் இயக்கிய ’மீண்டும் கோகிலா’ படத்தை டிஜிட்டல்ல ரிலீஸ் பண்ணினாங்க.  அப்போ ஸ்ரீதேவிக்கு மெசேஜ் அனுப்பினேன். பதில் அனுப்பி இருந்தார். ’மகிழ்ச்சியா இருக்கு, வாழ்த்துகள்’னு சொல்லியிருந்தார். அழகுன்னா அது ஸ்ரீதேவிதான். அவரை வயசானவரா பார்க்க கடவுளுக்கு கூட விருப்பமில்லைன்னு நினைக்கிறேன். அதனாலதான் அழகா இருக்கும்போதே அழைச்சுட்டானோன்னு தோணுது’ என்று மீண்டும் பழைய நினைவுகளில் முழ்குகிறார் பழம்பெரும் இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன்.

இவரது மகன்தான் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன். இவர், நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி,ஹரிதாஸ், வாஹா படங்களை இயக்கியவர். 


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close