[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்

“கண்முன்னே ஒரு… காதல் தேசம்!”

valentine-day-world-level-celebration

காதல் ஒரு சொல்ல முடியாத சொப்பனம். இன்பங்களும் துன்பங்களும் ஒருசேர இணைந்து நடத்தும் இனிய இதய யுத்தம்... என அடுக்கிக்கொண்டே போகும் இந்த மூன்றெழுத்து மந்திரம்...  யுகங்களை தாண்டியும் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது!

ஆறறிவு மனிதனுக்கு மட்டுமில்லை... ஐந்தறிவு விலங்கினங்கள், பறவைகள், பூச்சிகள் என உலகின் எல்லா ஜீவராகளுக்குள்ளும் ஒளிந்து கிடக்கிறது... குறிப்பிட்டு சொன்னால்... இந்த காதலால்தான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது என்று உறுதியாய் ஒற்றை வரியில் சொல்லிவிடத் தோன்றுகிறது!

சும்மா இல்லை... இந்த கம்யூட்டர் உலகிலும் கடவுளின் காதலுக்கும் மரியாதை கிடைக்கிறது... கடவுளின் காதலை... காதலியை குறைசொன்னவர்கள் கூட கூண்டில் நிறுத்தி கேள்விக்கணைகளை தொடுப்பது துவங்கி மன்னிப்பு கோர அழைப்பது வரை "காதல்" வாழ்வியலோடு ஒன்றிய விஷயம்! கடந்த 10, 20 ஆண்டுகளாகத்தான் "காதலர்தினம்" நமக்கு பிரபல்யம். நாளாக நாளாக ரோமானிய கலாச்சாரம் ஒவ்வோரு வீட்டுக்குள்ளும் வியாபிக்கத் தொடங்கியிருக்கிறது. ஏன் காதலர் தினம் என்ற கேள்விக்கு விடை தெரியாத விடலைகள், கையில் "ரோஜா"க்களோடு தனது துணைக்காக காத்திருப்பதும், அன்றைய தினத்தில் புத்தாடை அணிந்து ஒருஒருக்கொருவர் பரிசளித்து மகிழ்வதும் வாடிக்கையாகிவிட்டது. சினிமா திரையரங்குகள், பூங்காக்கள், கடற்கரைகள், சுற்றுலாத்தலங்கள், பூங்காக்கள் என தனிமை கிடைக்கும் கானகங்கள், தோப்புகளில் கூட காதலர்களின் முற்றுகை  வேடிக்கை பொருளாக மாறியிருக்கிறது... மாறிவிட்டிருக்கிறது!

ஒரு காலம் இருந்தது... அது எதோ பழங்காலமல்ல... கற்காலமுமல்ல... கொஞ்சமே கொஞ்சம் முன்னாடி இருந்த காலம். அந்த சற்றே கடந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மிகக்குறுகிய காலம்! காதல் என்ற வார்த்தையை சொல்லவே கூச்சப்பட்ட காலம் அது. தினசரி காலண்டரில் காட் ஈஸ் லவ் என்ற எழுத்துக்களைக்கூட புறக்கணித்த காலமது. லவ்;  வா என பெற்றோர்களால் அதிர்ச்சிக்குரிய கேள்விகள் கேட்கப்பட்ட நேரமிது…

அந்த கேள்வியை கேட்டவர்கள் இப்போது என்ன… தாத்தா பாட்டியாக ஆகியிருக்கலாம். பேரன்பேத்திகளை பார்த்திருக்கலாம். பலர் இன்னும் திருமண வயதில் பிள்ளைகளை வைத்திருக்கலாம். அவர்களெல்லாம் இந்தக்கால காதலை கண்கூடாக பார்க்கிறார்கள். காதல் தொடர்பான செய்திகளை கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் மனித வக்கிர இதயங்களில் இருந்து மறையாத ஆணவ காதல் கொலைகள் ஆவணங்களாவதை கண்டு கொண்டிருக்கிறார்கள்! காதல்  நிறைவேறாமல் போவதால் காலகாலமாய் அது ஆறாத வடுவாக அனுதினமும் கண்ணீர் வடிக்க வைக்கிறது.  உள்ளத்தை உருக்கி கொல்கிறது.கட்டியவனுக்கும் கழுத்தை நீட்டியவளுக்கும் மனதாற துரோகம் இழைக்க வைக்கிறது!

வராத காதலை வலுக்கட்டாயமாக வரவழைக்க பிடித்த ஜீவனை கொலை செய்வது வரையிலான வன்முறைகளை கையாளும் மனோபாவத்தை வளர்த்து வருகிறது. கல்யாணம் முடித்தவர்கள் மீது கூட இந்த காதல் கள்ளக்காதலாய் உட்கார்ந்து கொண்டு கலகத்தையும் களங்கத்தையும் உருவாக்குகிறது.  ஆண்டுகணக்கில் வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை உதறிவுட்டுப்போக உந்துகோலாய் இருக்கிறது.

காதல் பேரைச்சொல்லி கல்யாணத்திற்கு முன்பே கணவன் மனைவியாகி காதலுக்கு களங்கம் கற்பிக்கிறது. காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கியவரை கைப்பிடித்து கொடுக்க காவல்நிலைய படிக்கட்டு ஏறி இறங்க வைக்கிறது.

நீதிமன்றங்கள் வரை சென்று காதலை காப்பாற்ற மன்றாட வேண்டியிருக்கிறது. இப்படி... “காதல்” என்ற அந்த மெல்லிய இழை மீது அசிங்க முலாம் பூசப்பட்டு வருகிறது! இவற்றுக்கெல்லாம் காரணம்... காதலென்றால் "ஆண்-பெண்"பால்களுக்கிடையே வரும் உணர்வும் உறவும் என்ற நமது புறையோடிப்போன  பழக்க வழக்கம்தான். அதனால் தான் காதல் என்றால் அதில் வெற்றி தோல்வி என்று வகைப்பாடு உருவாகிறது. அதிலும் காதல் கல்யாணத்தில் முடிந்தால் வெற்றி எனவும் இல்லையேல் தோல்வி எனவும் முத்திரை குத்தப்படுகிறது!

உண்மையில் காதல் அது இல்லை. காதல் என்றால் காதலித்துக்கொண்டே இருப்பது. காலம் முழுக்க காதலித்துக்கொண்டே இருப்பது. அதிலும் தனக்கு பிடித்த ஆணையோ பெண்ணையோ கல்யாணம் முடித்து வாழ்க்கை துணையாக்க காதலிப்பது காதல் இல்லை. கல்யாணம் முடித்து சென்றபுன்பும் கடைசிவரை கண்ணுக்குள்ளேயே வைத்திருப்பது தான் உண்மையான காதல் என்றெல்லாம் காதல் குறித்த பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. தீர்க்கப்படாத விவாதப்பொருளாகவும் இருக்கின்றன.

ஆனால் பொதுவாக பார்த்தால் காதல் என்றால் அன்பு, கருணை. ப்ரியம், பாசம், நேசம் என்றெல்லாம் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. இவைகளில் ஒன்று ஒருவர் இன்னொருவர் மேல் கொள்வது காதலாகிறது. அதனால் தான் “காட் ஈஸ் லவ்” என்பதே குற்றமாக எடுத்துக்கொள்ளப்பட்ட காதல், கடவுளை காதலிப்பது, அன்னையை காதலிப்பது வரை வளர்ந்திருக்கிறது. காதல், கல்யாணம் கட்டிக்கொள்கிறப்போறவர்கள் மேல் மட்டுமோ, கட்டிலை பகிர்ந்து கொள்வோர் மீது மட்டுமோ வருவதில்லை என்பது பெற்ற அன்னை மீதும் வருவது காதல்தான் என்ற கூற்று மூலம் மெய்ப்பட்டிருக்கிறது.

எனவே காதல் யார் மீதும் வரலாம். யாரையும் காதலிக்கலாம். எல்லோரையும் காதலிக்கலாம். உடன்பிறந்த சகோதர சகோதரியை, சகோதர சகோதரியாக நாம் பாவிப்பவர்களை, உயிர்கொடுக்கும் நண்பர்களை, ஓடோடி உதவிக்கு வரும் உற்றார் உறவினர்களை, நாம் செய்யும் தொழிலை, பணிபுரியும் நிறுவனத்தை, சக ஊழியர்களை… அவ்வளவு ஏன்… அழகிய மென்மலர்களை, மெல்லிய பனித்துளியை, பச்சை பசேல் மலைகளை,

புற்களை, ஈரக்காற்றை, இயற்கையை, விலங்குகளை, பறவைகளை, புழு
பூச்சிகளை என்று எல்லாவற்றையும் காதலிக்கலாம்.

அப்படி அனைவரிடத்தும் ஒரு காதல் கொள்ள இந்த “காதலர் தினம்” நமக்காக வந்திருக்கிறது. ரோமாபுரி கலாச்சாரம் என்றால் நமக்கென்ன, அரச குடும்ப உத்தரவை மீறி காதலர்களுக்கு திருமணம் முடித்து வைத்த “வேலண்டைன்” மறைந்த தினமாக இருந்தால் யாருக்கென்ன… காதலை வெளிப்படுத்த கிடைத்த தினத்தை நமது வரமாக கொள்வோம். காதலென்றால் இருபால் உறவு, கடைசியில் அது பாலியல் உறவு என்ற கேடுகெட்ட கட்டுகோப்பை தகர்த்தெறிவோம்… ”காதல் எல்லோருக்குமானது” என கொள்வோம். அனைவருக்கும் வாரி வழங்குவோம் அளவிலா காதலையும் வாழ்த்துக்களையும்.

அன்பை விலை கொடுத்தா வாங்கப்போகிறோம்… ஒவ்வொரு இதயத்துள்ளும் உறங்கி கிடக்கும் அந்த விலைமதிப்பற்ற அன்பை தட்டியெழுப்பி பிறர் மகிழ காதலாய் பகிர்ந்தால் என்ன குறைந்தாபோய் விடுவீர்கள்… காதலித்துப்பாருங்கள்… அதிலும் எல்லோரயும் காதலித்துப்பாருங்கள்... எதையும் காதலித்துப்பாருங்கள்… காதல் தேசம் இதோ கண்முன்னே…

காதலிப்போம் வாருங்கள்!

காதல்… நமக்கானது!!

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close