[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

ஐபிஎல் அறிமுகம் 3: ஆப்கான் இளம் சுழல் முஜீப் ஜட்ரான்

mujeeb-zadran-the-mystery-spinner-from-afghanistan

பயங்கரவாத தாக்குதல்களால் படாதபாடு பட்டுவரும் ஆப்கானிஸ்தானில் கடந்த சில வருடங்களாக, கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறர்கள். சின்ன சின்ன வெற்றிகளைப் பெற்று வரும் அந்நாட்டு அணியில் இருந்து பெரிய பெரிய வீரர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் இப்போது. அந்த நாட்டின் ஸ்பின்னர் ரஷித் கான், இப்போது ஆஸ்திரேலியாவின் பிக்பாஸ் வரை பிரபலம். அங்கிருந்து இப்போது இன்னொரு சுழல் வந்திருக்கிறது. 
அவர், முஜீப் ஜட்ரான்!

முஜிப்புக்கு வயது 17-தான். ஆனால், இவரது கூக்ளியிலும் லெக்ஸ்பின்னிலும் டாப் பேட்ஸ்மேன்கள் கூட தடுமாறித்தான் போகிறார்கள். ஆப்கானின், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் இடம் பிடித்திருக்கும் முஜிப்பின் பர்பாமன்ஸை ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பார்த்திருக்க முடியும். இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான் அதிரடி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற முஜிப் வீழ்த்திய அந்த 5 விக்கெட்டுகள்தான் காரணம். அந்த தொடரில் (5 போட்டி) முஜிப் அள்ளியது மொத்தம் 20 விக்கெட்டுகளை!

ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியில், நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழந்ததற்கு காரணமாக அமைந்ததும் முஜிப் எடுத்த 4 விக்கெட்டுகள்தான்! இப்படியொரு சுழல் மேஜிக் கொண்ட முஜிப்பை, 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப்!

இதற்கு முன் பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டியில், கோமில்லா விக்டோரியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது இவரை. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த இந்தப் போட்டியில் முஜிப்பின் முதல் விக்கெட், இயான் மோர்கன் (இங்கிலாந்து).

‘முஜிப், வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். சின்ன வயதிலேயே தந்தையை இழந்தவர். கோஸ்ட் மாகாணத்தில் உள்ள அவரது கிராமத்தில் ஏகப்பட்ட நிலங்கள். முஜிப்புக்கு சின்ன வயதிலேயே கிரிக்கெட் ஆர்வம். தேசிய அணியில் இருக்கும் நூர் அலியின் பயிற்சி படி பந்துவீசத் தொடங்கியிருக்கிறார் முஜிப். பிறகு அப்படியே படிப்படியாக வளர்ந்திருக்கிறார். 

‘12 வயசுலயே பயிற்சி பெற தொடங்கிட்டேன். ஒரு முறை பேட்டிங் பண்ணிட்டிருந்தேன். எங்க உறவினர் பந்துவீசினார். அவர் வீசிய முறை வித்தியாசமா இருந்தது. எப்படின்னு கேட்டேன். அவர்தான், ஆஃப் ஸ்பின் பற்றிக் கற்றுக்கொடுத்தார். பிறகு சுனில் நரேன், அஸ்வின், அஜந்தா மெண்டிஸ்... இவங்களோட பந்துவீச்சை யுடியூப்பில் பார்த்து பிராக்டிஸ் பண்ணினேன்’ என்கிற முஜிப், 17 வயதிலேயே ஒரு நாள் போட்டியிலும் அறிமுகமாகிவிட்டார். அயர்லாந்துக்கு எதிராக ஆடிய அவர், 4 விக்கெட்டை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவியிருக்கிறார்.

அடிக்கடி இந்தி சினிமா பார்க்கும் முஜிப்புக்கு, ரன்வீர் சிங்கும் ரன்பீர் கபூரும்தான் பேவரைட் ஹீரோக்கள்.

‘பணம் ஒரு மனுஷனை எப்படி மாற்றும்னு முஜிப்கிட்ட சொல்லியிருக்கோம். அதனால விளையாட்டுல மட்டும் கவனம் செலுத்து. மற்ற விஷயங்கள்ல கவனம் வேண்டாம்னு அட்வைஸ் பண்ணியிருக்கோம்’ என்கிறார்கள் குடும்பத்தினரும் பயிற்சியாளரும். 

கேட்கிற வயசா இது?

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close