[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

ஐபிஎல் அறிமுகம்: அதிரடி வேகம் ஆர்ச்சர்!

ipl-player-introduction-jofra-archer

ஏப்ரலில் தொடங்க இருக்கிறது, ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா. ’ஆத்தாடி’ என்று வாய்பிளக்கக் கோடிகளின் ஏலம் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. ஒவ்வொரு அணியும் வேண்டிய வீரர்களை, வேண்டிய விலைக்கு எடுத்து முடித்திருக்கிறது. அணியில் 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தாலும் அறிமுகம் இல்லாத பல வீரர்கள் இந்த வருடமும் இடம் பிடித்திருக்கிறார்கள் அனைத்து அணியிலும். ஐபிஎல்-க்குப் பிறகு இவர்களும் பிரபலம் ஆவார்கள் என்பதற்கு இவர்களின் முந்தைய ரெக்கார்டுகள் சாட்சி. அதில் ஒருவர், ஜோஃப்ரா ஆர்ச்சர் (Jofra Archer).

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அள்ளியிருக்கிறது இந்த பார்படாஸ் வேகத்தை. வேகமென்றால், சும்மா இல்லை. ஆர்ச்சர் வீசினால் 150 கி.மீ வேகத்தில் பறக்கிறது பந்து. இவரது ஆக்ரோஷத்தை ஆஸ்திரேலியாவில் நடந்த பிக்பாஷ் போட்டியில் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள் பேட்ஸ்மேன்கள். இங்கிலாந்தின் கவுண்டி அணியான சசெக்ஸ் அணியில் அறிமுகமான முதல் போட்டியிலேயே பாகிஸ்தானுக்கு எதிராக 4 விக்கெட் எடுத்து மிரட்டியவர் இந்த 22 வயது வேகம். 

பிக்பாஸ் கிரிக்கெட் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன் அணிக்காக விளையாடிய ஆர்ச்சர் கவனிக்கத்தக்க வீரராக உருவானது அங்குதான். பிக்பாஷ் போட்டியில் பந்துவீச்சாளர்கள் அதிகப்படியாக ரன்களை அள்ளிக் கொடுக்க, குறைந்த ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட் வீழ்த்தியவர் ஆர்ச்சர்தான் என்று அதிசயிக்கிறார்கள் அங்கு. இந்தத் தொடரில் அங்கு அதிகம் பேசப்பட்ட வீரர் இவர்தான். அப்படியே பங்களாதேஷ் பிரீமியர் லீக்கிலும் ஆச்சரிய தடம் பதித்த ஆர்ச்சர், பாகிஸ்தான் லீக்கிலும் விளையடிவிட்டு ஐபிஎல் -லுக்கு வந்திருக்கிறார். 

பொதுவாக டி20 போட்டி என்பதே பேட்ஸ்மேன்களுக்கானது என்றாலும் அவர்களை நிலைகுலைய வைப்பது ஒரு சில பந்துவீச்சாளர்கள்தான். அதில் ஒருவராக ஆர்ச்சர்,  ஆச்சரியப்படுத்துவார் என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close