[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இன்றைய விலை: பெட்ரோல் ரூ.74.74; டீசல் ரூ.65.96
  • BREAKING-NEWS முன்னாள் மத்திய அமைச்சர் இ.பொன்னுசாமி அதிமுகவிலிருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்தார்
  • BREAKING-NEWS டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக தலைமை அலுவலகம் நாளை திறப்பு
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகா எதிர்க்கும் - கர்நாடகா முதல்வர் சித்தராமையா
  • BREAKING-NEWS பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த முறைகேடு குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS கமல் ஆலோசனை பெறவில்லை; மூத்த தலைவர் என்ற முறையில் மரியாதைக்காக சந்தித்தார் - நல்லகண்ணு
  • BREAKING-NEWS மக்களுக்காக யார் சேவை செய்தாலும் அவர்களை மதிக்க கடமைப்பட்டுள்ளேன் - கமல்ஹாசன்

ஐபிஎல் அறிமுகம்: வெஸ்ட் இண்டீஸ் வேகம் ஆர்ச்சர்!

ipl-player-introduction-jofra-archer

ஏப்ரலில் தொடங்க இருக்கிறது, ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா. ’ஆத்தாடி’ என்று வாய்பிளக்கக் கோடிகளின் ஏலம் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. ஒவ்வொரு அணியும் வேண்டிய வீரர்களை, வேண்டிய விலைக்கு எடுத்து முடித்திருக்கிறது. அணியில் 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தாலும் அறிமுகம் இல்லாத பல வீரர்கள் இந்த வருடமும் இடம் பிடித்திருக்கிறார்கள் அனைத்து அணியிலும். ஐபிஎல்-க்குப் பிறகு இவர்களும் பிரபலம் ஆவார்கள் என்பதற்கு இவர்களின் முந்தைய ரெக்கார்டுகள் சாட்சி. அதில் ஒருவர், ஜோஃப்ரா ஆர்ச்சர் (Jofra Archer).

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அள்ளியிருக்கிறது இந்த வெஸ்ட் இண்டீஸ் வேகத்தை. வேகமென்றால், சும்மா இல்லை. ஆர்ச்சர் வீசினால் 150 கி.மீ வேகத்தில் பறக்கிறது பந்து. இவரது ஆக்ரோஷத்தை ஆஸ்திரேலியாவில் நடந்த பிக்பாஷ் போட்டியில் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள் பேட்ஸ்மேன்கள். இங்கிலாந்தின் கவுண்டி அணியான சசெக்ஸ் அணியில் அறிமுகமான முதல் போட்டியிலேயே பாகிஸ்தானுக்கு எதிராக 4 விக்கெட் எடுத்து மிரட்டியவர் இந்த 22 வயது ஸ்பீட். 

பிக்பாஸ் கிரிக்கெட் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன் அணிக்காக விளையாடிய ஆர்ச்சர் கவனிக்கத்தக்க வீரராக உருவானது அங்குதான். பிக்பாஷ் போட்டியில் பந்துவீச்சாளர்கள் அதிகப்படியாக ரன்களை அள்ளிக் கொடுக்க, குறைந்த ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட் வீழ்த்தியவர் ஆர்ச்சர்தான் என்று அதிசயிக்கிறார்கள் அங்கு. இந்தத் தொடரில் அங்கு அதிகம் பேசப்பட்ட வீரர் இவர்தான். அப்படியே பங்களாதேஷ் பிரீமியர் லீக்கிலும் ஆச்சரிய தடம் பதித்த ஆர்ச்சர், ஐபிஎல் போட்டிக்கு வந்திருக்கிறார். 

பொதுவாக டி20 போட்டி என்பதே பேட்ஸ்மேன்களுக்கானது என்றாலும் அவர்களை நிலைகுலைய வைப்பது ஒரு சில பந்துவீச்சாளர்கள்தான். அதில் ஒருவராக ஆர்ச்சர் கண்டிப்பாக ஆச்சரியப்படுத்துவார் என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close