[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்
  • BREAKING-NEWS சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்
  • BREAKING-NEWS கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது
  • BREAKING-NEWS இலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

ஸ்லிம் ஆகணுமா ? அப்போ இது உங்களுக்கான டிப்ஸ்! 

can-you-become-slim-then-it-s-tips-for-you

இப்போதுலாம் நிறைய பேருக்கு ஏன் இப்படி குண்டாகிட்டே இருக்கோம்ங்கற கவலை ஒரு பக்கம், தொப்பைய எப்படி குறைக்கிறதுங்குற கவலை இன்னொரு பக்கம். குண்டா இல்லாதவங்களுக்கு கூட இப்போதுலாம் தொப்பை இருக்கு. யார்கிட்டயாவது கேட்டா உடனே சொல்லுவாங்க, காலையிலே எந்திரிச்சு நல்லா வாக்கிங் போ, ஜிம்முக்கு போனா நல்லது, ஒருமணி நேரம் தினமும் எக்சர்சைஸ் பண்ண போதும்; இப்படி பல பதில்கள் கிடைக்கும்.  

நைட்டு 12 மணிக்கு தூங்கிட்டு, காலையில 10 மணிக்கு ஆபிஸ் போற நமக்கு இதெல்லாம் சரிப்படுமா அப்படினு நாமளே கேள்வி கேட்டுட்டு, காலையில குறட்டை விட்டு தூங்கிடுவோம். அப்படி தூங்குற உங்களுக்கு ஒரு ஈசியான வழி இருக்கு; ஓடவும் வேணாம், ஒளியவும் வேணாம்; உடல் எடை குறையும் எளிதான வழி அது.

 

காலையில் தினமும் தண்ணீர் குடித்தல்  

தினமும் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடியுங்கள். பச்ச தண்ணீர் இல்லங்க சுடு தண்ணீர். ஒரு கிளாஸ் சுடு தண்ணீர் 250-300 மி.லி இருந்தா நல்லது. அதுல ஒரு எழுமிச்சையை லைட்டா புளிஞ்சு விட்டா இன்னும் நல்லது. குறிப்பா தொப்பை குறைக்க ஆசைப்படுபவர்களுக்கு நல்லது. எடை குறைவதோடு நல்ல ஜீரணத்துக்கும் வழியாக இருக்கும்.  

 

 

காலையில் சாப்பிடுதல்  

ஆபிசிக்கு போறேன்; ஆபிசுக்கு போறேன்னு காலையில 9 மணிக்கு எந்திரிச்சு படபடன்னு கிளப்பி பேக்கை மாட்டிக்கிட்டு ஓட்ற நாம, சாப்பிட மறந்துட்றோம். எப்பவுமே காலையில மறக்காம சாப்பிடுங்க. காலை உணவு நல்லா சாப்பிட்டா உணவு நிலை சீராக அமையும்; தேவையற்ற சுரப்பிகள் நிறுத்தப்படும்; உடல் எடை உயராது.

 

 

இனிப்பு பானங்கள் நோ!  

நாம இந்த வெளிநாட்டுக்காரங்கள பார்த்து இப்போ பாட்டிலில் அடைக்கப்பட்ட ஜூஸ் (பழச்சாறு அல்ல) குடிக்க ஆரம்பிச்சிட்டோம். அதாவது இனிப்பு கலந்த பானங்கள். குறிப்பா பன்னாட்டு தயாரிப்புகள். இதனால உடல் எடை அதிகரிப்பதோடு, என்ன பண்ணாலும் குறையாத நிலையும் வந்துடுது. அதனால் இவற்றை தவிர்க்கவும்

 

 

 காபி … டீ…

ஒரு ஆய்வு கூறுகிறது பிளாக் டீ அருந்துவதன் மூலம் உடல் எடை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும் என்று. அதனால் கண்டக் கண்ட இடங்களில் பால் கலந்த காபி, டீ குடிக்காமல் முடிந்தால் க்ரீன் டீ அல்லது பிளாக் காபி குடிக்கவும். காலை, பிற்பகல், மாலை என 3 நேரம் குடித்தால் நல்லது.  

 

 

லிப்ட், எஸ்கலேட்டர் வேண்டாமே.  

இந்த மால்கள் வந்ததால நம்மாளுங்க என்னமோ படிக்கட்டையே பார்க்காதவங்க மாதிரியும், லிப்ட் இருந்தா அதுலயே பொறந்தவங்க மாதிரியும் எப்ப பாத்தாலும் போவாங்க. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதனை தவிர்ப்பது அவசியம். முழுவதுமாக முடியாவிட்டாலும் போகும் போது படிக்கட்டிலும், வரும் போது லிப்டிலோ அல்லது எஸ்கலேட்டரிலோ வருவது நல்லது.  

உடல் எடையை குறைக்க வாழ்த்துகள்…

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close