[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்காமல் இருக்க மோடி ஒன்றும் பீடா விற்பவர் அல்ல நாட்டின் பிரதமர் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்கக்கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்ற
  • BREAKING-NEWS நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் மேல்முறையீடு செய்தால் எதிர்கொள்வோம் - சிறுமி தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசன்
  • BREAKING-NEWS எனது மகளுக்கு ஏற்பட்டது போல் யாருக்கும் ஏற்படக்கூடாது - போரூர் சிறுமியின் தந்தை பாபு
  • BREAKING-NEWS சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை அறிவிப்பு
  • BREAKING-NEWS தினகரன் தனது அணிக்கு குக்கர் சின்னம், பெயர் வழங்கக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS காவிரி விவகாரத்தில் 23ஆம் தேதி நடைபெறவிருந்த திமுகவின் அனைத்துக்கட்சி கூட்டம் ரத்து -ஸ்டாலின்

சிரிச்சதால் போச்சு சி.எம். போஸ்டு

exactly-one-year-ends-up-in-the-car-of-sasikala-staring-at-the-majesty

சரியாக ஒரு ஆண்டு முடிகிறது, சசிகலா காரில் ஏறி கம்பீரம் காட்டி. ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்த பன்னீர் செல்வம் சசிகலாவுக்கு எதிராகவும், அவரது குடும்பத்தினருக்கு எதிராகவும் அடுக்கடுக்காக குற்றம் சாட்டி அதிருப்தி அதிமுகவாக மாறினார். பிடுங்கப்பட்டது கட்சிப் பதவி. தனித்து விடப்பட்டார். முன்னாள்கள் மட்டுமே ஆதரவு அளிக்கும் நிலை அவருக்கு அப்போது.

 இந்நிலையில் பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டுகள் குறித்தெல்லாம் சசிகலா எப்போது பேசுவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இரவு 7 மணிக்கு மேல் அதற்கான சாதக அம்சங்கள் தெரிந்தது. போயஸ் கார்டனின் கதவுகள் திறக்கப்பட்டது. மற்றவர்க்கு எளிதில் திறந்து விடா கதவுகள் , எப்போதும் சசிகலாவுக்காக திறந்திருந்த கதவுகள் அவை. ஒரு வழியாக கதவுகள திறக்க, தொண்டர்கள் சூழ (பன்னீர்செல்வத்தின் வீட்டிலும் அபோது கூட்டம் இருந்தது) காரின் மேல் பகுதியில் தோன்றினார் சசிகலா. ஜெயலலிதாவுக்கு பிடித்த , அவர் அதிகமாக அணியும் பச்சை புடவையில் காட்சியளித்தார் சசிகலா. தொண்டர்கள் ஆரவராம் செய்தனர். ஏனெனில் அப்போதைய அதிமுகவின் அதிகார மையம் அவர்.

 

பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள் என கேள்விகளை அடுக்கினர் செய்தியாளர்கள். சட்டென்று பதில் சொன்னார் சசிகலா. ஆனால் அந்த பதில் இப்போது வரை பலராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. அதாவது “ தமிழகத்தின் சட்டமன்ற கூட்டம் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் ஸ்டாலினும் பன்னீர்செல்வமும் ஒருவரை ஒருவர் பார்த்தும், சிரித்தும் கொண்டிருந்தனர் என்றார். வேறு யார் இருக்கிறார்கள் என்று தெரியாது ஆனால் திமுக இருக்கிறது என்று இன்னும் அழுத்தமாக சொன்னார்,

 இன்றும் பல்வேறு விழாக்களில் முதலமைச்சர்களும் எதிர்கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். ஆனால் பார்த்தார் , சிரித்தார் என்று பதவி போய் தர்மயுத்தத்திற்கு தள்ளப்பட்டார் பன்னீர்செல்வம். அதே சமயத்தில் சசிகலாவே பார்த்து பார்த்து கூவத்தூர் வரை  சென்று , யாரையும் பார்க்காத , சிரிக்காத பழனிசாமியை முதல்வராக்க, அவர் ஏன் சசிகலாவுக்கு எதிராக செயல்பட்டார் ? அவரை இயக்கியது யார் என்றெல்லாம் தர்மயுத்ததின் அடுத்தடுத்த நாட்களில் சசிகலா தரப்பு பேசியது வேறு கதை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close