[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எனக்கு உற்சாக வரவேற்பளித்த சகோதர, சதோதரிகளின் துக்கத்தில் பங்கேற்க தூத்துக்குடி செல்கிறேன்-கமல்ஹாசன்
  • BREAKING-NEWS பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 5584 அரசுப் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன
  • BREAKING-NEWS பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜுன் 28 ஆம் தேதி மறுதேர்வு எழுதலாம்
  • BREAKING-NEWS சிவகங்கை, ஈரோடு, விருதுநகர் மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன
  • BREAKING-NEWS பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது
  • BREAKING-NEWS போராட்டம் தொடர்பாக தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்- டிஜிபி ராஜேந்திரன்
  • BREAKING-NEWS வனத்துறையின் விழிப்புணர்வு எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் குரங்கணிக்கு ட்ரெக்கிங் சென்றனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

காங்கிரஸின் மௌனமே மன்மோகன் அரசை வீழ்த்தியது: ஆ.ராசா பளிச் பேட்டி

2g-saga-unfolds-in-a-tell-all-book-former-telecom-minister-a-raja-questions-palpable-silence-of-manmohan-singh-on-2g-policy

2ஜி வழக்கில் காங்கிரஸ் காட்டிய மெளனமே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வீழ்த்திவிட்டது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார். 

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி ஓ.பி. சைனி கடந்த மாதம் தீர்ப்பு அளித்தார். 2ஜி வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்ய சிபிஐ-க்கு மத்திய சட்ட அமைச்சகம் இன்று அனுமதி அளித்துள்ளது

இதனிடையே ஆ.ராசா, தன் தரப்பு நியாயங்களை விளக்கி ‘2ஜி சகா அன்ஃபோல்ட்ஸ்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றினை எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் இன்று வெளியாகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

மன்மோகன் சிங் ஏன் அமைதிகாத்தார்?

2 ஜி விவகாரத்தில் தவறு நடந்ததுபோல் மன்மோகன் சிங்கை நம்ப வைத்தார்கள்.

மன்மோகன்சிங்கிற்கு சரியான விஷயங்கள் தெரியப்படுத்தப்படவில்லை. அதனால் தான் அவர் அமைதியாக இருந்துவிட்டார் என்பது எனது கருத்து. மன்மோகன் சிங் அரசை வீழ்த்த சிஏஜி வினோத் ராய் பயன்படுத்தப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத்திற்குப் பயந்திருக்கக் கூடாது. சொல்ல வேண்டியதை சொல்லியிருக்க வேண்டும். 

 

 

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் குறித்து எழுதியுள்ளீர்களா?

செல்லுலர் ஆபரேட் அசோஷியேசன் ஆஃப் இந்தியா என்ற அமைப்பை சில அலைபேசி நிறுவனங்கள் கூட்டாக உருவாக்கி, ஒரு கூட்டு ஆதிக்கத்தைஉருவாக்கி கொண்டு, மற்ற நிறுவனங்கள் உள்ளே வரவிடாமல் ஒரு மோனோபாலியை உருவாக்கினார்கள். இதற்காக நிறைய சித்து விளையாட்டு விளையாடினார்கள். அலைக்கற்றை ஏலம் விடக்கூடாது என்று தொலைத் தொடர்பு தீர்ப்பாயத்தை அணுகினார்கள். ஆனால் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. உச்சநீதிமன்றத்தை அணுகினார்கள். போட்டியை விரும்ப மறுக்கிறீர்கள் என்று உச்சநீதிமன்றம் அவர்களுக்கு கட்டணமே விதித்தது. 

உச்சநீதிமன்றத்தில் முடியாததால், மன்மோகன் சிங்கிற்கு ஒரு மொட்டை கடிதத்தை எழுதினார்கள். அவர்கள் எழுதியதை எப்படி சொல்கிறேன் என்றால். தீர்ப்பாயத்தில், உச்சநீதிமன்றத்தில் அவர்கள் என்ன வாதாடினார்களோ அதுதான் மன்மோகன் சிங்கிற்கு எழுதப்பட்ட கடிதத்தில் இருந்தது. இதில் துரதிருஷ்டம் என்னவென்றால் மன்மோகன்சிங்கும் யாரோ சொல்லக் கேட்டு, அநாமதேய ஒரு கடிதத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு, எனக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதினார். நானும் அதில் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து கடிதம் எழுதினேன். இதனை சுட்டிக்காட்டி பிரதமர் சொன்னதை நான் கேட்கவில்லை என்று கூறிவிட்டார்கள். முகவரியற்ற ஒரு கடிதத்தை வைத்து, நடவடிக்கை எடுக்கும் முன்பு தன்னுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என பிரதமரை எனக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தை எழுத வைத்த விசை எதுவென எனக்கு தெரியவில்லை.

ப.சிதம்பரம் ஏன் மவுனமாக இருந்தார்?

’நிதி அமைச்சகத்தின் ஆலோசனை ராசாவால் மறுதளிக்கப்பட்டது, நிதி அமைச்சகத்தின் ஆலோசனைகளை ராசா கேட்கவில்லை, புறக்கணித்துவிட்டார்’ என்பவை என் மீதான குற்றச்சாட்டுகள். நிதி அமைச்சகத்தின் ஆலோசனையை  நான் ஏற்க மறுத்துவிட்டேன் என்றால், நிதி அமைச்சரை அழைத்து விளக்கம் கேட்டிருக்கலாம் என நீதிமன்றத்திலே கேள்வி எழுப்பினேன். சிபிஐ ப.சிதம்பரத்திடம் விளக்கம் கேட்கமாட்டேன் என்கிறது. ப.சிதம்பரமும் வாய் திறக்கவில்லை. 2ஜி வழக்கில் காங்கிரஸ் காட்டிய மெளனமே அரசை வீழ்த்திவிட்டது. மத்தியில் 2வது முறையாக அமைக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த நடந்த சதியே 2ஜி வழக்கு. சதியை செயல்படுத்த வினோத் ராயை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

 

வினோத் ராய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பீர்களா?

வினோத் ராய் மீது நான் நடவடிக்கை எடுக்க முடியாது. நான் அரசாங்கம் இல்லை. தான் வகித்த பதவிக்கு வினோத் ராய் நம்பிக்கை துரோகம் செய்துள்ளார். அரசாங்கத்தை, தேசத்தை ஏமாற்றி இருக்கிறார். இதற்கெல்லாம் நியாயப்படி வழக்கு தொடுக்க வேண்டும். அரசியல் சட்டத்தால் அதிகாரம் பெற்றவர் என்பதால் அவருக்கு சில விலக்கு உள்ளது. மன்னன் தவறிழைக்க மாட்டேன் என கோட்பாட்டின் அடிப்படையில் சிஏஜி போன்ற பதவிகள் பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவர்கள் தவறு செய்தால் என்ன தண்டனை என்பது குறித்து சொல்லப்படவில்லை. குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாது. அதனால் விசாரணை ஆணையம் வைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். 

உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து, இந்த வழக்கிற்கு என்ன பின்புலம்? கார்ப்பரேட் போரா? நிறுவனங்களுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் ராய்யை பயன்படுத்தி இருக்கிறார்களா? அல்லது மன்மோகன் சிங் அரசை, நல்ல அரசை, பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கிய அரசை, நியாயமாக நடந்து கொண்டிருந்த அரசை, 2வது முறையும் வந்துவிட்டார்களே என்ற வயிற்றெரிச்சலில் மீண்டும் இந்த அரசாங்கம் வரக்கூடாது என்பதற்காக அரசியல் ரீதியாக எதாவது சதித்திட்டம் செய்துள்ளார்களா? அது உள்ளேவா அல்லது வெளியேவா?..அரசியல் கட்சி சார்புடையதா? என்ற பல கோணங்களில் விசாரிக்க வேண்டும்.  விசாரணை ஆணையம் வைத்தால் உண்மை வெளியே வரும் அது இந்த நாட்டிற்கு நல்லது.

அடுத்த நடவடிக்கை? 

விசாரணை ஆணையம் அமைப்பது தொடர்பாக குடியரசு தலைவருக்கு கடிதம் எழுத உள்ளேன். திமுகவும், ஸ்டாலினும் இல்லை என்றால் நான் காணாமல் போய் இருப்பேன். பனிக்குடத்தில் குழந்தையை பாதுகாப்பது போல் தலைவர் கருணாநிதி என்னை பாதுகாத்தார். அதனால் கட்சிக்கு விசுவாசமாக இருக்கவேண்டும். ஸ்டாலினுடன் ஆலோசனை செய்த பின்னரே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வேன். 

புத்தகத்தில் அழுத்தம் கருத்தி ஏதேனும் விடப்பட்டுள்ளதா?

ஏதேனும் ஒருசில கருத்துக்கள் தேச நலன் கருதி விடுபட்டிருக்கலாம். பொதுநலன் கருதி ஒருசதவீதம் எழுதாமல் இருந்திருக்கலாம். 2ஜி வழக்கு குறித்து நான் எழுதிய புத்தகத்தில் 99% சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன். தமிழில் புத்தகம் விரைவில் வரும். செயல் தலைவர் ஸ்டாலின் புத்தகத்தை வெளியிடுவார். முக்கிய தலைவர்கள் இதுகுறித்து பேசுவார்கள். 

தமிழில் புத்தகம் எப்பொழுது வரும்?

தமிழில் புத்தகம் விரைவில் வெளிவரும். செயல் தலைவர் ஸ்டாலின் புத்தகத்தை வெளியிடுவார். முக்கிய தலைவர்கள் புத்தகம் குறித்து பேசுவார்கள். 

புத்தகத்தால் காங்கிரஸ் உடனான உறவு பாதிக்குமா?

இல்லை. இந்தப் புத்தகம் அரசியல் உறவுகளுக்கு அப்பாற்பட்டது. திமுகதான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை கொண்டு வர வேண்டும் என்று விரும்பியது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : ARaja2GSpectrum2GScamDMKKarunanidhiMKkarunanidhi2GCaseCBILawMinistery
Advertisement:
Advertisement:
[X] Close