[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆலோசனை
  • BREAKING-NEWS கேதார்நாத்தில் வழிபட்டதை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்; எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS சூலூர்: கருமத்தம்பட்டியில் வேறு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டு தாமதமாக வாக்குப்பதிவு தொடக்கம்; வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் வாக்குப்பதிவு தொடங்காமல் இருந்தது
  • BREAKING-NEWS 7ம் கட்ட மக்களவை தேர்தல் - பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பாட்னாவில் வாக்களித்தார்
  • BREAKING-NEWS இறுதிக்கட்ட மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் வாக்களித்தார்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS சூலூர் கருமத்தம்பட்டியில் மாதிரி வாக்குப்பதிவின்போது வாக்கு இயந்திரத்தின் 2 பட்டன் வேலை செய்யவில்லை; 116வது வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்யம், உழைப்பாளி மக்கள் கட்சியின் பட்டன் வேலை செய்யவில்லை

ஓபிஎஸ்ஸை சந்திக்காத மோடி - அதிமுகவை கைக் கழுவுகிறதா பாஜக

why-ops-did-not-meet-pm-modi

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதலே அதிமுகவை மத்தியில் ஆளும் பாஜக இயக்கத் தொடங்கிவிட்டதாகப் பேச்சுகள் அடிபடத் தொடங்கியது. இதற்கு சில முக்கிய காரணங்களும் இருக்கவே செய்தன. ஜெயலலிதா எதிர்த்து வந்த தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், உதய் மின் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு அப்போதையை முதல்வரின் பொறுப்புகளை வகித்து வந்த பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அரசு ஒப்புதல் அளித்ததை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி தங்களின் விமர்சனங்களை முன் வைத்தன. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஜெயலலிதா மறைவிற்கு பிரதமர் மோடி வருகை தந்ததும், பன்னீர் செல்வத்தை தன் தோளில் சாய்த்து ஆறுதல் கூறியதும் பல்வேறு விமர்சனங்களை உறுதி செய்யும் வகையில் இருந்ததாகப் பேசப்பட்டது. பன்னீர் செல்வத்திற்கு மோடி ஆறுதல் கூறிய புகைப்படம் அப்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. 

            

அணிகள் இணைப்பில் மோடி

ஒபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையிலான அணிகள் பிரிந்த போது, இரு அணிகளையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டதாக கருத்துக்கள் நிலவியது. மத்திய அரசுடனும், பாஜகவுடனும் பன்னீர்செல்வம் நெருக்கமாக இருப்பதை பிரதமர் மோடி உடனான சந்திப்புகள் உறுதி செய்தன. தமிழக அரசியலில் எந்தவொரு பதவியிலும் இல்லாத ஒரு எம்.எல்.ஏவாக மட்டுமே இருந்த பன்னீர்செல்வம் எளிதிலும், தொடர்ச்சியாகவும் பிரதமரை சந்தித்து வந்தது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைப்புக்கு பின்னர் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பன்னீர்செல்வம்-பழனிசாமி கைகளை ஆளுநர் வித்யாசாகர் ராவ் இணைத்து வைப்பதுபோல் வெளியான போட்டோ, அதிமுகவில் மத்திய அரசின் தலையீடு இருக்கிறது என்ற சந்தேகங்களை உறுதி செய்யும் வகையில் இருந்ததாக பேசப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை ஆளுநர் வித்யாசாகர் ராவ் காப்பாற்றுவதாக திமுக நேரடியாக குற்றம்சாட்டியது.

          

தினகரனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்கொண்ட விதத்தை மோடி அரசுக் கவனத்தில் கொண்டு பன்னீர்செல்வத்துடனான நெருக்கத்தை குறைத்துக் கொண்டதாக கூறப்பட்டது. ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் டெல்லி சென்றிருந்த போது, பிரதமர் மோடி முதலமைச்சர் பழனிசாமியை மட்டும் தனியாக சந்தித்தார். பன்னீர்செல்வத்தை மோடி சந்திக்கவில்லை. இது ஒருபுறம் இருக்க, தினகரன் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் கொடுத்த அழுத்தம் காரணமாகவேதான் என்று விமர்சனங்கள் எழுந்தன. மறைமுகமாக இருந்த பேச்சுகள் மாறி மத்திய அரசுக்கான ஆதரவு நிலைப்பாட்டை அதிமுக தலைவர்கள் நேரடியாக பேட்டிகள் வழியாக முன் வைத்தனர். இது அதிமுக-பாஜக கூட்டணி வரை சென்றது. இதனால், அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜக நிச்சயம் கூட்டணி வைத்து போட்டியிடும் என்று பலரும் உறுதியாக நம்பினர். 

         

தினகரன் வெற்றியும் ஆளும் கட்சி தோல்வியும்

இது ஒருபுறம் இருக்க, ஈபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையிலான அரசுக்கு எதிராக தினகரன் ஒரு தலைவராக உருவெடுத்து வந்தார். கட்சி பெயர், அலுவலகம், கொடி விவகாரத்தில் தினகரனுக்கு எதிராக தீர்ப்பு வந்தது. ஆனால், தீர்ப்பு வெளியான அடுத்த நாளே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது, அதிமுக அரசுக்கு ஆதரவாக பாஜக அரசு இருப்பதை காட்டுவதாக தினகரன் தரப்பும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டின. ஆர்.கே.நகர் தேர்தலின் முடிவுகள் வரும் வரை அதிமுக-பாஜக உறவு குறித்து எந்தவொரு கேள்வியும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. ஆனால் ஒரு இடைத்தேர்தலின் முடிவு எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும் அதிமுக அரசு தோல்வியை தழுவியது. ஆனால் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். திமுக டெபாசிட் இழந்த போதும், அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது அக்கட்சியில் இருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அணிகள் இணைப்பு முழுமையாக நடைபெறவில்லை என்பதை காட்டுவதுபோல் இருப்பதாக கருத்துக்கள் எழுந்தன. 

          

தொடங்கி வைத்த குருமூர்த்தி

அதிமுக-பாஜக உறவில் விழுந்த முதல் கல், ஆடிட்டர் குருமூர்த்தியின் கடுமையான விமர்சனம்தான். ஆர்.கே.நகர் தோல்வியை கருத்தில் கொண்டு, ஆண்மையற்றவர்கள் என பொருள்படும் ‘Impotent' என்ற வார்த்தையை பயன்படுத்தி ஓபிஎஸ்-ஈபிஎஸை  சாடியது குருமூர்த்தியின் அதிருப்தியை வெளிக்காட்டியது. துக்ளக் ஆசிரியராக இருந்தாலும், பாஜகவுக்கு குருமூர்த்தி நெருக்கமானவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அணிகள் இணைப்பின் போது குருமூர்த்தி உடன் பலமுறை ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் அப்போது பேசப்பட்டது. இதனால்,  ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையிலான அதிமுக மீது பாஜக அதிருப்தியில் இருப்பதை குருமூர்த்தியின் மூலம் வெளிப்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறினர். குருமூர்த்தியின் விமர்சனத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் எதிர்வினை ஆற்றினாலும், ஓபிஎஸ்-ஈபிஎஸ் கருத்து எதுவும் சொல்லாமல் இருந்தது அவர்கள் மீதான ஆதிக்கத்தை காட்டியதாக எதிர்க்கட்சிகள் கூறின.

       

இதற்கு அடுத்தகட்டமாக நடிகர் ரஜினிகாந்தியின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பும் அதற்கு பாஜக தரப்பில் உள்ள ஆதரவும் பல கேள்விகளை எழுப்பியது. குறிப்பாக அதிமுகவுடனான உறவை துண்டித்துவிட்டு ரஜினியின் மூலம் தமிழகத்தில் காலூன்றி விட பாஜக எண்ணுவதாக கருத்துக்கள் எழுந்தன. தன்னுடைய அரசியல் ஆன்மீக அரசியல் என்று ரஜினி கூறியதும், ராமகிருஷ்ண மடத்திற்கு சென்றதும் பாஜக உடனான உறவு குறித்து ஐயங்களை எழுப்பியது. 

மோடியை சந்திக்காத பன்னீர்செல்வம்

மத்திய பட்ஜெட் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்திக்காதது குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ’பிரதமர் மோடியை சந்திக்க நேரம் எதுவும்  கேட்கவில்லை. அதனால் பிரதமர் மோடியுடன் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. இனியும் வரப்போவதும் இல்லை’ என்று பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.  

இருப்பினும், எப்பொழுது சென்றாலும் மோடியை சந்திக்கும் பன்னீர்செல்வம் தற்போது துணை முதல்வராக இருந்தபோதும் மோடியை சந்திக்காமல் திரும்பியுள்ளது அதிமுக-பாஜக இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்யும் வகையில் இருப்பதாக பார்க்கப்படுகிறது. 

          

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முக்கியமான தேர்தல் எதுவும் வராத நிலையில் எந்த மறைமுக உறவுகள் குறித்தும் ஐயத்தோடு தான் கருத்துக்களை கூற முடியும். விரைவில் வரவுள்ள உள்ளாட்சி தேர்தல் அல்லது மக்களவை தேர்தலின் போதுதான் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்குமா? ரஜினி மூலம் தமிழகத்தில் பாஜக காலூன்றுமா என்பது தெரியவரும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close