[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஹெச். ராஜாவும், தமிழிசையும் இணைந்து மெர்சல் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிவிட்டனர்- நடிகர் விஷால்
 • BREAKING-NEWS நடிகர் கமல், ரஜினி, விஷால் ஆகிய மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்
 • BREAKING-NEWS ஆண்டாள் சர்ச்சை தேவையற்றது- ஓ. பன்னீர் செல்வம்
 • BREAKING-NEWS ஒகி புயலால் காணாமல்போன மீனவர்களை தேடும்பணி நிறுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி ஜன.31 இல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 • BREAKING-NEWS நாகலாந்து, மேகாலாயா மாநிலங்களில் பிப்-27 ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்-18 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS ஜெ.சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்- வைகோ
 • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்
 • BREAKING-NEWS கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 2வது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
 • BREAKING-NEWS 2016 டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே ஜெயலலிதா இறந்துவிட்டார் - திவாகரன்
 • BREAKING-NEWS கமலுடன் கூட்டணி வைப்பது பற்றி காலம்தான் பதில் சொல்லும் - ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது தென்னாப்ரிக்க அணி
 • BREAKING-NEWS கூடுதல் பணி செய்ய போக்குவரத்து தொழிலாளர்களை கட்டாயப்படுத்துதல், விடுமுறை தர மறுப்பதற்கு விஜயகாந்த் கண்டனம்
சிறப்புக் கட்டுரைகள் 13 Jan, 2018 02:29 PM

பேஸ்புக், நியூஸ் ஃபீடில் (News Feed) அதிரடி மாற்றங்கள்!

more-changes-in-facebook-news-feed-page

சமூகவலைத்தளங்களின் ராஜாவாகத் திகழும் ஃபேஸ்புக்கின் ஃபீட் பக்கத்தில், அதிரடியான பல மாற்றங்கள் நிகழ போவதாக, மார்க் ஜுக்கர்பெர்க்
அறிவித்துள்ளார்.

கடந்த வியாக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில், மார்க் வெளியிட்டுள்ள அறிவிப்பு, உலகளவில் ஏற்படுத்த போகும் மாற்றத்தை எண்ணி பலரும்
திகைத்து வருகின்றனர்.  இதுவரை உலகத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஃபேஸ்புக், இனிமேல் விழிப்புணர்வு
ஏற்படுத்தும் வகையில் செயல்பட இருப்பதாக அந்நிறுவனத்தின் சி.இ.ஓ மார்க் தெரிவித்துள்ளார். இதன்படி, ஃபேஸ்புக்கில் இருக்கும் பயனாளர்களின்
விருப்பமான நியூஸ் ஃபீட் பக்கத்தில், பல மாற்றங்கள் நிகழ போகின்றன. இதுவரை செய்தி நிறுவனங்களின் வைரல் வீடியோ, செய்திகள்,
விளம்பரங்கள், அதிகப்படியான புகைப்படங்கள், கவர்ச்சியான ஃபோட்டோ ஆகியவற்றால் நிறைந்திருந்த நியூஸ் ஃபீட் இனிமேல், விழிப்புணர்வு
ஏற்படுத்தும் தகவல்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், குழந்தைகளின் புகைப்படங்கள் ஆகியவற்றால் நிரம்பி வழிய இருக்கிறது.

 

இதுகுறித்து மார்க், ”சமீபத்தில் பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அதிகமான ஃபேஸ்புக் பயனாளர்கள், தங்களின் அதிகப்படியான
நேரத்தை எதிர்மறையான செய்திகளை படிப்பதிலும், குழப்பத்தை ஏற்படுத்தும் வீடியோவைப் பார்ப்பதிலும் செலவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற நபர்களை குறித்து மோசமான பதிவுகளை பேஸ்புக்கில் பதிவிடுவது போன்ற தீய செயல்களில் பயனாளர்கள் அதிகம் ஈடுபடுவது குறித்தும்
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கேட்டு வருத்தம் அடைந்தேன்."எனது, தந்தை எனக்கு அறிவுறுத்தியது ஞாபகத்திற்கு வந்தது. அவர்
என்னிடம் அடிக்கடி கூறுவார், உன் கண்டுப்பிடிப்பு எப்போதும் நல்ல செயல்களுக்காக பயன்பட வேண்டும் என்று" . அதனால் தற்போது நான்
முக்கியமான முடிவை எடுக்க நேர்ந்துள்ளது. விரைவில் பேஸ்புக்கின் நியூஸ் ஃபீட் பக்கத்தில் பல மாற்றங்கள் ஏற்பட போகிறது. இனிவரும்
காலங்களில் ஃபேஸ்புக் பயனாளர்கள், தங்களின் நியூஸ் ஃபீடில் தங்களின் உறவினர்களின் புகைப்படங்கள், ஸ்டேட்டஸ், லைவ் வீடியோ
ஆகியவற்றை அதிகம் காணலாம். மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் குழந்தைகளின் புகைப்படங்கள் அதிகளவில் தென்படும். ஊடகங்களின்
செய்திகள், வீடியோ, விளம்பரங்கள், தேவையற்ற ஃபோட்டோ, அறிவிப்புகள் ஆகியவை பெருமளவில் குறைக்கப்படும். இதன் மூலம் தனது
நிறுவனத்திற்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டாலும், அதைப் பற்றி கவலைப்பட போவதில்லை. பேஸ்புக் இனி அனைவருக்கும் நன்மை பயக்கும்
வகையில் செயல்பட போகிறது. விரைவில் நீங்கள் அந்த மாற்றத்தை காணலாம்” என்று தெரிவித்துள்ளார்.

 

நியூஸ் ஃபீடின் புதிய மாற்றம் குறித்த மார்க்கின் அறிவிப்பு, பயனாளர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில், கோடிக்கணக்கான
மக்களால் பயன்படுத்தபப்டும் பேஸ்புக் செயலியில், மாணவர்கள் அதிக நேரம் செலவிடுவதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக பொதுவான
குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்றன. இந்த குற்றசாட்டுகள் அனைத்தையும் ஓரங்கட்டும் விதமாக மார்கின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது
என்கின்றனர் பயனாளர்கள். இந்தியாவில், இந்த மாற்றம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


    


  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close