[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்
  • BREAKING-NEWS கர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி
  • BREAKING-NEWS மதுரையில்தான் எய்ம்ஸ் அமைய வேண்டும் என கனவு கண்டவர் ஜெயலலிதா - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
  • BREAKING-NEWS விவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயர்த்த நடவடிக்கை - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு குடியரசுத் தலைவர் நாம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததையடுத்து ஆளுநர் ஆட்சி அமல்
  • BREAKING-NEWS சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரித்தி வாஸ்‘மிஸ் இந்தியா-2018’ பட்டம் வென்றார்

2017இல் நடைபெற்ற திரை உலகத் திருமணங்கள்!

world-weddings-in-2017

திரையுலகில் சிங்கிளாக வாழ்ந்து வந்த பிரபலங்கள் பலர், 2017 ஆம் ஆண்டில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இதில் ரசிகர்களிடம் அதிகம் கவனத்தை பெற்ற பிரபலங்களின் திருமணங்கள் சில மறக்க முடியாதவை.

1. நாக சைதன்யா - சமந்தா 

தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரமும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யா, நடிகை சமந்தாவை கரம் பிடித்தார். பல படங்களின் இணைந்து நடித்த இந்த ஜோடி நிஜ வாழ்க்கையில் இணைந்தது 2017 ஆம் ஆண்டில். கோவாவில் நடைபெற்ற இவர்களின் பிரமாண்ட திருமணத்தில் தெலுங்கு - தமிழ்த் திரையுலகினர் பலர் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

2.  நமீதா - வீரேந்திர செளத்திரி 

தமிழ் இளைஞர்களின்  கனவுக் கன்னியாக வாழ்ந்த மச்சான்ஸ் புகழ் நமீதா, தனது காதலன் வீரேந்திர செளத்திரியை கரம் பிடித்தது 2017 ஆம் ஆண்டில்தான். திருப்பதியில் தெலுங்கு முறைப்படி நடைபெற்ற இவர்களது திருமணத்தில் உறவினர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் கலந்துக் கொண்டனர். 

3.  விராட் கோலி - அனுஷ்கா சர்மா
 
கிரிக்கெட் விளையாட்டில் நட்சத்திர வீரர் விராட் கோலி, பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களின் காதல், 2017 ஆம் ஆண்டில் திருமணத்தில் முடிந்தது. கிரிக்கெட் பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் என அனைவரும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். இவர்களின் திருமண ஆல்பம், வரவேற்பு அழைப்பிதழ், ஹனிமூன் ஃபோட்டோ என அனைத்தும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. ஆச்சரியத்தின் உச்சக்கட்டமாய் இந்திய நாட்டின் பிரதமர் மோடி இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு வாழ்த்தி இருந்தார்.

4. மனோரஞ்சித் - அக்‌ஷிதா 

கோலிவுட்டின் மிகச் சிறந்த நடிகரான விக்ரமின் மகள் அக்‌ஷிதா, கருணாநிதியின் கொள்ளுப்பேரனான மனோரஞ்சித்தை 2017 ஆண்டில் கரம் பிடித்தார். சென்னை கோபாலபுர இல்லத்தில், திமுக தலைவர் கருணாநிதியின் தலைமையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. அரசியல் பிரபலங்கள், நடிகர் நடிகைகள் என பலரும் இவர்களது திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். ஒரு வருடமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த கருணாநிதி சற்று உடல்நிலை முன்னேற்றம் அடைந்த பிறகு நடத்தி வைத்த முதல் திருமணம் இது.

5. ஆதவ் - வினோதினி

கவிஞர் கண்ணதாசனின் பேரனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசனுக்கும் வினோதினிக்கும் இந்த ஆண்டில்தான் திருமணம் நடைபெற்றது. சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் கமல்ஹாசன், திருமாவளவன், அமைச்சர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலர் கலந்துக் கொண்டனர். பிறகு இந்த ஜோடி துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆசி பெற்றனர். 

6. உம்மிடி க்ரிதிஷ் - ஐஸ்வர்யா

நடிகர் சங்கப் பொதுச் செயலாளரும், நடிகருமான விஷாலின் தங்கை ஐஸ்வர்யா, உம்மிடி உதய்குமார் - ஜெயந்தி தம்பதியின் மகனாக உம்மிடி க்ரிதிஷை  திருமணம் செய்துக் கொண்டார். பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது, திருமணத்தில் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் நண்பர்கள் பலர் கலந்துக் கொண்டனர். 

7.  ஹிப் ஹாப் ஆதி நிச்சயதார்த்தம்

குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பெற்ற ஹிப் ஹாப் ஆதி திருமணம் பந்தத்தில் இணைய தயாராகினார். இவர்களது நிச்சயதார்த்தம் சத்தமமே இல்லாமல் இந்த ஆண்டு நடைபெற்று  முடிந்துள்ளது.

போட்டோ கேலரி

1 of 8

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close