[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மொபைல் ஆப்-ஐ அறிமுகம் செய்ய உள்ளோம் - ஜி.வி.பிரகாஷ்
  • BREAKING-NEWS கரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுதாக்கல்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் - விசாரணை அதிகாரி சந்தானம்
  • BREAKING-NEWS ஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைப்பு
  • BREAKING-NEWS திரையரங்குகளில் ரூ.150க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது - விஷால்

மறக்க முடியாத வடுவான சுனாமி: 13 ஆண்டுகள் ஆகியும் மறையாத சுவடுகள்

forgotten-tsunami-13-years-are-not-hidden-traces

உலகையே உலுக்கிய சுனாமி என்ற ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தால் ஏற்பட்ட பேரழிவின் சுவடுகள் 13 ஆண்டுகள் ஆன பின்பும் மறையவில்லை.

உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு கறுப்பு ஞாயிறாக பதிவான நாள் 2004 டிசம்பர் 26. அன்றைய தினம் சுமத்ரா தீவின் வடமேற்குக் கடலில் இந்திய நேரப்படி காலை 6 மணி 29 நிமிடத்திற்கு ஏற்பட்ட நிலநடுக்கம் இந்து மகா சமுத்திரத்தில் சுனாமியாக உருவெடுத்து, ஆசிய நாடுகளில் வரலாறு காணாத பேழிவை ஏற்படுத்திச் சென்றது. சுமத்ராவில் 9 ரிக்டர் அளவாக மையம் கொண்ட சுனாமி, அந்தமான், தாய்லாந்து, இந்தியா, இலங்கை, மலேசியா, மியான்மர், வங்கதேசம் ஆகிய நாடுகளின் கரையோரப் பகுதிகளை சூறையாடியது. மிக மோசமான இந்தச் சுனாமியின் தாக்குதலுக்கு இரண்டு லட்சத்து முப்பதாயிரம் பேர் பலியாகினர்.

சென்னை கடற்கரையிலிருந்து இரண்டாயிரத்து இருபது கிலோ மீட்டர் தூரத்தில், சுமத்ரா அருகே உருவான சுனாமி, இரண்டே மணி நேரத்தில் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையைத் தாக்கி சின்னாபின்னமாக்கியது. சென்னை தொடங்கி குமரி வரையிலான கடற்கரைப் பகுதிகள் கடும் பாதிப்புக்கு ஆளாயின. இந்தியா, இலங்கை என ஈவிரக்கமின்றி தனது ஆவேச நர்த்தனத்தை ஆடி முடித்து, கடலோர மக்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கிய அந்தப் பேரிடர் ஏற்படுத்திய துயர அலைகள் இன்னும் ஓயவில்லை.

உலுகை உலுக்கிய சுனாமியின் பாதிப்புகளில் இருந்து மீளமுடியாமல் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இன்னும் தவித்து வருகின்றன. என்றாலும், நிலநடுக்கம், புயல், ஓசோன் ஓட்டை, அளவிற்கு அதிகமான மழை - வெள்ளம் என அனைத்திற்கும் தீர்வு இயற்கையோடு ஒன்றி வாழ்வதைத் தவிர மனித சமுதாயத்திற்கு வேறுவழியில்லை என்ற பாடத்தையும் சுனாமி கற்றுக்கொடுத்தது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close