[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 62ஆவது படத்தின் பூஜை நாளை நடைபெறுகிறது
 • BREAKING-NEWS நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல; மோடிக்கு எதிரானவன்: பிரகாஷ் ராஜ்
 • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு ஆதரவாக ரஜினி இருந்திருக்க வேண்டும் - சீமான்
 • BREAKING-NEWS வைரமுத்துவை காரணம் காட்டி தமிழகத்திற்குள் கொல்லைப்புறமாக வர நினைத்தால் வர முடியாது - பாரதிராஜா
 • BREAKING-NEWS ஹெச். ராஜாவும், தமிழிசையும் இணைந்து மெர்சல் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிவிட்டனர்- நடிகர் விஷால்
 • BREAKING-NEWS நடிகர் கமல், ரஜினி, விஷால் ஆகிய மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்
 • BREAKING-NEWS ஆண்டாள் சர்ச்சை தேவையற்றது- ஓ. பன்னீர் செல்வம்
 • BREAKING-NEWS ஒகி புயலால் காணாமல்போன மீனவர்களை தேடும்பணி நிறுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி ஜன.31 இல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 • BREAKING-NEWS நாகலாந்து, மேகாலாயா மாநிலங்களில் பிப்-27 ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்-18 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS ஜெ.சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்- வைகோ
 • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்
 • BREAKING-NEWS கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 2வது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
சிறப்புக் கட்டுரைகள் 12 Dec, 2017 07:37 PM

யார் இந்த ஹேக்கர்ஸ்? ‘சைபர் அட்டாக்’ என்றால் என்ன? 

who-are-the-anonymous-hackers

உலகளாவிய தொழில்நுட்பம் அனைத்திற்கும் முன்னோடியாக இருப்பது கணிப்பொறிதான். அதனை அடிப்படையாக கொண்டுதான் தினமும் பல்வேறு வகையான புதிய தொழில்நுட்பங்கள் சந்தையில் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன.தகவல்களை கேட்டுப்பெறுதல், தரவுகளை சேமித்தல், ஆவணப்படுத்துதல், பகிர்தல்,உரையாடுதல் என அனைத்துவிதமான செயல்பாடுகளையும் கணிணி என்ற இயந்திரத்திற்குள் அடக்கிவிட முடியும். இன்று பட்டிதொட்டி எங்கும் பரவிக்கிடக்கும் ஸ்மார்ட்ஃபோன்கள் கூட கையடக்க கணிப்பொறி வகைதான்.

இந்தக் காலகட்டத்தில் ஒரு கணிப்பொறியின் இன்றியமையா தேவை என்பது இணைய வசதி. அதாவது காஃபி பவுடருக்கு கஃபைன் போலவும், சர்க்கரைக்கு சுக்ரோஸ் போலவும், கணினிக்கு இணையம். இணைய வசதிகளை கொண்டு, குறிப்பிட்ட அளவு மட்டும் சேமித்த, உருவாக்கிய, பரிமாறிய தகவல்கள் இன்று எண்ணிலடங்கா எண்ணிக்கையாக மாறிப்போய்விட்டது. தனிமனித தகவல் தொட்டு, பல ரகசிய காப்பீடுகள், ஒப்பந்தங்கள் எல்லாமே ஒளிந்து கிடக்கும் ரகசிய சந்தைதான் இணைய உலகம்.

யாருப்பா இந்த ஹேக்கர்ஸ்?

பாதுகாக்கப்படும் ஆவணங்களை சந்தை என கூறுவது சரிதான் என்றால், நிச்சயம் சரி!!.. நாம் பாதுகாப்பு என நினைக்கும் எதுவும் இணைய உலகத்தில் நிச்சயம் பாதுகாப்பாக இருப்பதில்லை. ஒரு வீட்டில் மறைத்து லாக்கரில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை, உடைத்து எடுத்து செல்பவனுக்கு திருடன் என்று பெயர். அதேபோல இணைய லாக்கரில் வைத்திருக்கும் ஆவணங்களை திருடுபவர்களுக்கு, நாகரீக முறையில் ஹேக்கர்ஸ் என்று பெயர். 
திருடுவதெல்லாம் ஒன்றுதான்.. ஆனால் என்ன படித்தவன் சில பார்முலாவை பயன்படுத்தி, ப்ரோக்ராம் ஒன்றை உருவாக்கி இருந்த இடத்தில் இருந்தே விளையாடுகிறான். இதற்காக ஹேக்கர்ஸ் உருவாக்கும் ப்ரோகிராம்ஸ்தான் ‘வைரஸ்’.

வைரஸ் எத்தனை வகைப்படும் எனக் கேட்டால், ஒன்று… இரண்டு… நூறு.. பத்தாயிரம்.. கோடி… என்று சொல்லிக்கொண்டே போகலாம். அது கணக்கில் அடங்கா ஒன்று.. அப்படி வைரஸ் தாக்கும் பட்சத்தில் தரவுகள் அழிக்கப்படுவது மட்டுமல்லாமல், சில ரகசிய ஆவணங்கள் திருடவும் படுகின்றன.

சைபர் க்ரைம்?

இது தொழில்நுட்ப உலகத்தில் ‘சைபர் அட்டாக்’ என்று கூறப்படுகிறது. இதனால் தகவல்கள் திருடப்படுவதோடு முடிந்துவிடுகிறா என்றால் இல்லை. ஒரு நிமிடம் முதல் பல நாட்கள் வரை உங்கள் கணிப்பொறியை வேலை செய்ய விடாமல் அதை ஸ்தம்பித்து போகவும் செய்ய முடியும். அப்படி கணினியின் மூளை செயலிழந்து போகும் இடைவெளிதான் அட்டாக் செய்வதற்கான கால இடைவெளி. இதற்கு சான்றாக சமீபத்தைய வான்னாக்ரை ரான்சம்வேர் என்ற சைபர் அட்டாக்கை சொல்லலாம். இதன் மூலமாக பெரிய பெரிய நிறுவனங்களும் கதிகலங்கிப்போயின. உலக நாடுகளில் பல கணினிகள் ஆட்டம் கண்டன. இந்தத் திருட்டினை தடுக்கவும், அதற்கான தண்டனை பெற்றுத்தரவும் உருவாக்கப்பட்டதுதான் ‘சைபர் க்ரைம்’ பிரிவு. 

வைரஸை முழுவதுமாக ஒழிக்க முடியுமா?

ஒரு நாளைக்கு ‘f secure’ என்னும் நிறுவனத்திற்கு 5 லட்சம் புதிய வைரஸ்கள் சோதனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதில் இணையத்தை தாக்கும் வைரஸ் மற்றும் கணினியை தாக்கும் மால்வேர் வைரஸ் என இரண்டு வகைகளாக பிரித்து பரிசோதிக்கப்படுகின்றனர். பரிசோதனையில் எந்த வியாதிக்கு (வைரஸ்), எந்த மருந்து(ஆண்டி வைரஸ்) கொடுப்பது என்பதை மருத்துவர்கள் (ப்ரோக்ராமர்ஸ்) கண்டறிவார்கள்.
இந்த ஹேக்கர்ஸே பெரும்பாலும் ஆண்டி டோஸ் கொடுக்கும் பணிகளை செய்வார்கள். ”அவனால் ஆக்கவும் அழிக்கவும் முடியும்” என்ற சிம்பிள் பார்முலாதான்.

செயற்கை நுண்ணறிவு சாத்தியமா!?!

இதனை தடுப்பதற்காக பல் நிறுவனங்கள் தீவிரமாக வேலையில் ஈடுபட்டாலும்,  மறுபுறம் hackers needed  என சில நிறுவனங்கள் புதிய மூளைகளை தேடிக்கொண்டிருக்கின்றனர். வைரஸ் ஒழிவது சாத்யமா என்றால்…ம்ம்ம்ம்…..??????.... நிச்சயம் ஹைப்போதேட்டிகல் கொச்டீன்தான். சரி தீர்வுதான் என்னப்பா ? என இதற்கு ஆண்டி வைரஸ் கண்டறியும் நிறுவனங்களிடம் கேட்டால்  இதற்காக நாங்கள், செயற்கை நுண்ணறிவு உதவியை நாட உள்ளோம். வைரஸ் அழிப்பதற்கு அதால் முடியாது. ஆனால் வைரஸின் வகைகளை பிரித்து , அதற்கு உடனடி தீர்வு கொண்டுவர முடியும் என தெரிவிக்கிறார்கள். மனிதர்களாக பிரிக்கும் பொழுது கால விரயமாவதால் இத்தகைய முடிவிற்கு பல நிறுவனங்கள் வந்துள்ளனவாம். செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் செய்யும் பணியானது மனிதர்கள் உடல் உழைப்பை பகுதியாக குறைக்கவும், கால விரயத்தை தடுக்கவும் வல்லது. இத்தகைய ரோபோக்கள் இனி சைபர் அட்டாக்கிளும் ஈடுபட போவது வளர்ச்சியாக பார்த்தாலும், சாத்தியக்கூறுகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close