[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்

மியான்மரில் மாட்டிக்கொண்டோம்: இசையமைப்பாளர் ஜிப்ரான் த்ரில் பேட்டி

chennai-to-singapore-travel-experience-ghibran-special-interview

 சென்னையில் இருந்து தரை வழியாவே சிங்கப்பூர் சென்றிருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். ‘சென்னை டு சிங்கப்பூர்’ திரைப்படம் அந்த த்ரிலான அனுபவத்தைதான் பேசுகிறது. இதுவரை தரை வழியில் சிங்கப்பூர் போக முடியும் என்று யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். இந்தப் படம் வரும் 15 தேதி திரைக்கு வர இருக்கிறது. அவரது தரை வழிப்பயணம் எப்படி இருந்தது? சாகசமான அந்தப் பயணம் குறித்து அவரிடம் புதிய தலைமுறை இணையதளத்திற்காக பேசினோம்.

”திடீர்னு ஒருநாள் சிங்கப்பூர் வரைக்கும் வைக்கிள்லயே ட்ராவல் பண்ணா என்னனு தோணுச்சு. உடனே கூகிள் பண்ணி பார்த்த பிற்பாடுதான் சென்னை டு சிங்கப்பூர் வழியிருக்கிறதே தெரிஞ்சது. விளையாட்டா தினமும் அதைப் பத்தியே பேசினோம். சென்னையில இருந்து சிங்கப்பூர் தரைவழியா போகணும்னா மொத்தம் ஆறு நாடுகள் இடையில இருக்கு. சரி, பிராப்ளம் இல்ல, சேலஞ்சா நினைச்சு விசா வாங்கிடலாம்னு வேலையை தொடங்கினோம். வேலைய ஆரம்பிச்ச பிறகுதான் இது லேசான காரியமில்லனு தெரிஞ்சது. ஆர்வக்கோளாறுல ஏதோ நான் ஃபேஸ்புக்ல வேற போட்டுத் தொலைச்சுட்டேன். அமோக லைக்ஸ். எனக்கு டிரைவிங்கே தெரியாது. லைசன்ஸூக்கு அப்ளை பண்ணா சொந்தமா வைக்கிள் இருக்கணும்னு சொன்னாங்க. கூடவே வண்டி லோன்ல இருக்க கூடாது. நம்மூர்ல முக்கால்வாசி வண்டியும் லோன்லதான் இருக்கும். திரும்ப வண்டிக்கு தனியா பாஸ்போர்ட் எடுக்கணும்னு சொன்னாங்க. வண்டியில தனியா போக முடியாது. கூடவே வண்டியோட சொந்தக்காரரும் கூடவே ட்ராவல் பண்ணனும். இப்படி பயங்கர ஃபார்மாலிடிஸ். பங்களாதேஷ் போய் அங்க இருந்து மியான்மர் போகணும். அதுல ஏகப்பட்ட பிரச்னை. பின் வாங்கலாம்னாலும் சுய கொளரவ பிரச்னை வேற? எங்க பயணத்தை சூர்யா வேற கொடிக் காட்டி தொடங்கி வைச்சுட்டார். என்ன பண்றது? ஒரே யோசனை” தன் பரபரப்பான பயணத்தை பற்றி பதற்றமே இல்லாமல் பேசுகிறார் ஜிப்ரான். 

அப்புறம் என்னாச்சு?

“நிஜமாவே ஒரு கட்டத்துக்கு அப்புறம் யாருமே கேட்கலனா இந்த ட்ரிப்பை அப்படியே கேன்சல் பண்ணிடலாமானு கூட யோசிச்சேன். வீட்ல யாருக்கும் சம்மதமே இல்ல. ‘நாமே போய் ஒரு பிரச்னையில சிக்கணுமா?’னு தடுத்தாங்க. அந்த நேரம் பார்த்து ஒருபாடகி வந்தாங்க. ‘நீங்க எப்ப கிளபுறீங்க? இந்நேரம் நீங்க வண்டிய தள்ளிக்கிட்டே போயிருந்தாகூட சிங்கப்பூரை ரீச் ஆகியிருக்கலாமே?’னு நக்கல் பண்ணாங்க. இதுக்கு மேல தள்ளிப்போடகூடாது முடிவெடுத்து உடனே கிளம்பினோம்.” என்கிறார் ஜிப்ரான்.

அது சரி, சென்னை டு சிங்கப்பூர் வழி எப்படி?

“முதல்ல விஜயவாடா. அப்புறம் ஒரிசா வழியா வெஸ்ட் பெங்கால் போயிட்டோம். அங்கியிருந்து பூட்டான். திரும்ப இந்தியாக்குள்ள வந்து அசாம், மணிப்பூர் வழியா அப்படியே மியான்மர். அப்புறம் தாய்லாந்து. அடுத்து மலேசியா, சிங்கப்பூர். மணிப்பூர்ல பயங்கரமான நிலநடுக்கத்தில் மாட்டுகிட்டோம். எந்தத் தொடர்பும் இல்ல. நெட் ஒர்க் முழுக்க கட் ஆகிடுச்சு. இம்பாலுக்குள்ள வந்த பிறகுதான் கரண்ட் இல்ல, ரோடு கட் ஆகி போக்குவரத்து பாதிச்சிருக்குனே தெரிஞ்சது. அந்த நேரம் பார்த்து நாகலாந்த் ட்ரைப்ஸுக்கும் மணிப்பூர் ஆட்களுக்கும் பிரச்னை. பந்த் அறிவிச்சுட்டாங்க. ரூம் கிடைக்கல. சாப்பாடு கிடைக்கல. பெரிய சிக்கலாகிடுச்சு.”இவர் பேசும் கதைகளில்தான் அதிர்ச்சி இருக்கிறதே தவிர, முகத்தில் சின்ன சலனம்கூட இல்லை. கப்சிப் என்று கதை சொல்கிறார் ஜிப்ரான்.

அப்புறம்?

“மியான்மர்ல லேண்ட் பர்மிட் என்று ஒன்று உண்டு. அங்க பயங்கர நிலசரிவு காரணமா எங்க லேண்ட் பர்மிட்டை கேசல் பண்ணிட்டாங்க. ரோடு சரியாகும் வரை மணிப்பூர்லயே மாட்டினோம். நான், கேமிராமேன் கார்த்திக் நல்லமுத்து, அரவிந்த், அப்பாஸ் அக்பர், ஷிவ் எல்லோரும் சரியான சாப்பாடுகூட இல்லாம சரியா மட்டினோம். தாய்லாந்தையும் பூகம்பம் தாங்கும்னு ஒரு நியூஸ் கிடைச்சது. இனி அடுத்த அடி எடுத்து வைப்போமா?னு ஒரு பயம். வண்டியிலயே என்னுடைய ஸ்டுடியோவை வேற செட் பண்ணியிருந்தேன். ட்ராவல்லயே நான் ரெண்டு தெலுங்கு படத்துக்கு பாட்டு கம்போஸ் பண்ண வேண்டிய சூழல். குறைஞ்சது ஸ்டுடியோ உபகரணங்களே பத்து லட்சத்துக்கு மேல இருக்கும். அதுக்கு ஏதாவது ஆகிடுச்சுனா? பயம் வந்துடுச்சு. உடனே ட்விட்டர்ல ஹெல்ப் கெட்டோம். முகம் தெரியாத பல நண்பர்கள் உதவினாங்க. ஐடி இண்டரஸ்ட்ரியில வேலை பார்க்கும் விஜயலக்ஷ்மி மேம் வந்தாங்க. பிரசினெண்ட் அவார்ட் வாங்கினவங்க. அவங்க சுஷ்மா சுராஜ் ஆஃபிஸுக்கு பேசி எங்களுக்கு உதவினாங்க. மியான்மர் எங்களுக்கு பர்மிஷன் கொடுத்தது மூணு நாள். அந்தக் கெடு முடிய சிலமணி நேரம்தான் இருந்தது. சைக்கிள் கேப்ல எஸ்கேப் ஆனோம்” என அதிர்ச்சிமேல் அதிர்ச்சி கொடுக்கிறார் ஜிப்ரான். 

இடி, மின்னல், மழை, பூகம்பம் தாண்டி வண்டி எந்தப் பிரச்னையும் தரவில்லையா?

“அது ஒண்ணு மட்டும்தான் பெரிய ப்ளஸ். சின்ன பஞ்சர் கூட ஆகல. இத்தனைக்கும் அது புது வண்டியும் இல்ல. செகண்ட் ஹேண்ட் வண்டிதான். செண்டிமெண்ட்டா வண்டிக்கு ‘லக்ஷ்மி’னு பேர் வச்சிருந்தோம். லக்ஷ்மி செம சமர்த்து. மொத்த ட்ராவல் எட்டாயிரத்து நூறு கிலோ மீட்டர். எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருந்திருந்தா மொத்தம் 18 நாள். பல பிரச்னையால் எங்களுக்கு மொத்தம் 30 நாளாச்சு. சிங்கப்பூர் வந்த உடனேயே ப்ளைட்டை பிடிச்சு இந்தியா வந்துட்டோம். ’லக்ஷ்மி’ கப்பல்ல வந்துக்கிட்டு இருக்கு. இன்னும் எங்க ட்ராவல் கம்ப்ளீட் ஆன ஃபீலிங்கே வரல. லக்ஷ்மி வந்தாதான் மனநிறைவே வரும்” என்கிறார் ஜிப்ரான். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close