[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் பி.இ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 28 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வெளியீடு
  • BREAKING-NEWS அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதியான மாநிலம் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்
  • BREAKING-NEWS மதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு
  • BREAKING-NEWS வளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றிருக்கிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து வகுப்பு வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களின் சீருடை மாற்றப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

யார் இந்த அன்புச் செழியன்?

who-is-anbuchezhian

அன்புச்செழியன். பெயரில் இருக்கும் அன்பு இவரிடம் இல்லை என்கின்றனர் இவரைப் பற்றி அறிந்தவர்கள். 

திரைத்துறையில் கந்துவட்டியை அநியாயமாக வசூலித்து வருபவராக கூறப்படும் இவர், மதுரையைச் சேர்ந்தவர். கந்துவட்டி மூலம் திரைத்துறையையே தனது கட்டுப்பாட்டில் வைக்க பல காரியங்களை திரைமறையில் இவர் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. 
எந்த ஆட்சி நடைபெற்றாலும் ஆளுங்கட்சியைச் சேர்தவர்களின் துணையோடு அனைவரையும் மிரட்டி கந்துவட்டி வசூலிப்பதாக இவர் மீது புகார் கூறப்படுகிறது. வெளியாகும் அனைத்து திரைப்படங்களிலும் தனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்று இவர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. அதாவது, பாலிவுட்டை கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமைப் போன்று கோலிவுட்டை கட்டுக்குள் வைக்க நினைப்பவர் அன்புச்செழியன் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. 

வட்டிக்கு பணம் பெறுபவர்களின் சூழலை அறிந்து அவர்களிடம் வெற்றுப் பத்திரம் மற்றும் நிரப்பப்படாத காசோலையில் முன்கூட்டியே கையொப்பம் வாங்கிக்கொள்வாராம். கடனாகக் கேட்கும் பணத்தை அடுத்த சில மணி நேரத்தில் உடனடியாகக் கொடுப்பதால், அனைவரும் இவரது வலைக்குள் விழுந்துவிடுவதாகவும் தெரிகிறது. 

கொடுத்த பணத்திற்கு வட்டி, வட்டிக்கு வட்டி என கடன் வாங்கியவரை கசக்கிப் பிழிந்து விடும் அன்புச்செழியன், அவ்வாறு தராவிட்டால், தம்பி அழகரின் உதவியோடு பணம் வாங்கியவரின் குடும்பத்தில் இருக்கும் பெண்களை கடத்திச் சென்று அவமானப்படுத்துவார் என்றும் கூறப்படுகிறது. சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத் தயாரிப்பாளர் தங்கராஜிடம் 20 லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டு ஒரு கோடி ரூபாய் சொத்தை மிரட்டி பிடுங்கிக் கொண்டவர் அன்புச்செழியன் என்று புகார் கூறப்படுகிறது. 

இயக்குநர் லிங்குசாமியின் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த உத்தமவில்லன் திரைப்படம் வசூல்ரீதியாக வெற்றி பெறவில்லை. இதனால் வாங்கிய கடனை திரும்பி அளிக்க சிரமப்பட்ட லிங்குசாமியிடம் அவரது அடுத்தப்படமான ரஜினி முருகனுக்கான மொத்த உரிமையையும் தொடக்கத்திலேயே எழுதி வாங்கியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. 

இதனால், ரஜினிமுருகன் குவித்த வசூலில் ஒரு பங்குகூட லிங்குசாமிக்கு சென்று சேரவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது கூட சசிகுமாருக்காக அசோக்குமார் வாங்கிய 18 கோடி ரூபாய்க்கு, 18 கோடி ரூபாய் வட்டி கட்டிய நிலையில், மேலும் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. 

நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஒரு சில உச்சத்திலுள்ள பிரபலங்களைத் தவிர அனைவரும் அன்புச்செழியனிடம் கடன் வாங்கியவர்களே என்கின்றனர் திரைத்துறையினர். தற்போது தயாரிப்பில் இருக்கும் பல படங்களிலும் அன்புச்செழியனின் பணம் இருப்பதால், அவர் குறித்து கருத்து தெரிவிக்கக் கூட திரைத்துறையினர் தயங்குகின்றனர். இப்படி கொடிய விஷமாக வலம் வரும் கந்து வட்டி நபர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே திரைத்துறையினரின் ஒட்டுமொத்தக் கோரிக்கை.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close