[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்

தொலைக்காட்சி வந்த போது கடும் எதிர்ப்பு...நம்ப முடிகிறதா உங்களால்?

world-television-day-special-story

இந்தியாவில் டெவிஷன் வந்தபோது அதற்கு கடும் எதிர்ப்பு இருந்தது என்றால் நீங்கள் இன்றைக்கு நம்புவீர்களா? ஆனால் அதான் உண்மை. 
80களில் இந்தியாவுக்கு டெலிவிஷனைக் கொண்டு வர அரசு முயற்சித்துக் கொண்டிருந்த போது, எதிர்க்கட்சிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் மூத்த பத்திரிகையாளர் கஸ்தூரிரங்கன் கணையாழி பத்திரிகைக்காக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேட்டி ஒன்றை எடுத்தார். அதில் ‘இப்போது நம்ம நாடு இருக்கின்ற நிலையில் டெலிவிஷன் அவசியமா?’என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கிறார்களே அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? எனக் கேட்டார். 

அதற்கு இந்திரா அளித்த பதிலை இன்றைய உலகம் நிச்சயம் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறது. ‘இனி வரும் காலங்களில் டெலிவிஷன் மிக முக்கியமான தொழில்நுட்பமாக இருக்கப்போகிறது. நம் நாட்டில் என்ன நடக்கிறது என்பதையும் உலக நாடுகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் இனிமேல் டெலிவிஷனில்தான் நாம் பார்த்து தெரிந்து கொள்ளப் போகிறோம். உலகநாடுகளில் உள்ள அறிவை பகிர்ந்து கொள்ள டெலிவிஷன் மிக முக்கியமான சாதனம்” என்று இந்திரா பதிலளித்திருந்தார். 

இன்று உலக டெவிஷன் டே. இந்த நாளில் இந்திரா நம் கண்முன்னால் மிக உயரமாக நிற்கிறார். அவரது கனவு அகலமாக விரிந்து உலகை கட்டி இழுத்துக் கொண்டு வந்து நம் உள்ளங்கையில் கொடுத்திருக்கிறது. டெலிவிஷனை உலக அறிவியல் புரட்சியாக உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதை அன்றே இந்திரா ஏற்றுக் கொண்டார். 

இன்றைக்கும் பல குடும்பங்களுக்கு டெலிவிஷன் என்பது கனவு. 80களில் ஊருக்கு ஒரு டிவி இருக்கும். பஞ்சாயத்து கட்டடத்தில் உட்கார்ந்து விவசாய விஷயங்களை பார்த்து கொண்டிருந்த பெரியவர்களை போல் இல்லை இன்றைக்கு உள்ள ஊர். ஊருக்கு ஒரு ஆண்டெனா இருந்தது போய் வீட்டுக்கு வீடு டிஷ்கள் முளைத்து நிற்பதை நாம் பார்க்கிறோம். 

ஜெய்ஹனுமான், நரகாசுரா, இராமாயணம்,சக்திமான், ஒளியும் ஒலியும் என விரல்விட்டு எண்ணக்கூடிய நிகழ்ச்சிகளை மட்டுமே பார்த்து இன்பம் பெற்றிருந்த தலைமுறை போய் நிமிடத்திற்கு நிமிடம் வேறுவேறு சானல்கள் என பாய்ந்து பயணிக்கிறது உலகம். அறிவியல் பார்வைக்கு ஒரு சானல். அரசியல் புரிதலுக்கு ஒரு சானல். குட்டிக் குழந்தைகளுக்கு ஒரு சானல். வீட்டு விளங்குகளுக்கு ஒரு சானல். விளையாட்டு வேண்டுமா? வீட்டு சமையல் வேண்டுமா? ஆடல் வேண்டுமா? பாடல் வேண்டுமா? அவ்வளவுக்கும் தனித்தனி சானல்கள் என இன்றைக்கு வந்திருப்பதற்குப் பின்னால் மறைந்து நிற்கிறது இந்திராவின் கனவு.
 
90களின் பிகுதியில் பிரபல பாடகர் யானி இந்தியா வந்திருந்தார். அவர் தாஜ்மஹாலில் நடத்திய இசை நிகழ்ச்சியை தூர்தர்ஷன் லைவ் செய்தது. அந்தக் காலத்தில் லைவ் என்பது மாபெரும் புரட்சி. இந்த கான்செட்டை தனது மகனுக்கு காட்டியதாக இசையமைப்பாளர் அனிருத்தின் தாயார் லஷ்மி குறிப்பிட்டிருக்கிறார். இசைப் பிரியர்கள் எல்லோரையும் எழுந்து உட்கார வைத்தது அந்த லைவ் ஷோ. அதை பற்றி ஒருமுறை மதன் தன் கேள்வி பதில் பகுதியில் சொன்னது நினைவுக்கு வருகிறது. யானியின் இந்திய வருகை, தாஜ்மஹாலில் அவர் அளித்த இசை விருந்து தூர்தர்ஷனில் நேரிடையாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இசை உச்சத்தை அடையும் நிலையில், 'செய்திகளுக்குப் பிறகு" யானி நிகழ்ச்சி ஒளிபரப்பு தொடரும் என்றது தூர்தர்ஷன்.

தூர்தர்ஷன் மக்களுக்கு எதை கற்றுக் கொடுத்ததோ இல்லையோ பார்வையார்களுக்கு உலக மகா பொருமையை கற்றுக் கொடுத்திருக்கிறது. செய்திக்கு இடையில் நிகழ்ச்சி என்பதும் விளம்பரங்களுக்கு இடையில் எப்பவாவது நிகழ்ச்சி என்பது அதன் அசைக்க முடியாத அடையாளம். இடையிடையே பச்சை, மஞ்சள், நீலம், சிகப்பு எனும் நிரப்பட்டைகளை போட்டுவிட்டு பலமணிநேரம் சானல் வேலை செய்கிறதா என்பது தெரியாமலே செய்துவிடுவது தூர்தர்ஷனின் வாடிக்கை. ஆனால் அதை எல்லாம் பொருத்துக் கொண்டு நிகழ்ச்சியை காண்பது பெரிய இன்பம். சுகம்.

காங்கிரஸ் தொழில் நுட்பப் பிரிவுத் தலைவி திவ்யா ஸ்மந்தனா எங்கள் வீட்டில் முதன்முறையாக ஒரு டிவி வாங்கினோம். அது ஒனிடா டிவி. என்னுடைய ஃபேவரைட் ஷோ Moygli & Ek chidiya என்கிறார்.

தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவில்லத்தில் அவரது அறையில் இப்போதும் அவர் பயன்படுத்திய டைனோரா டிவி இருக்கிறது. அவரோடு சேர்ந்து இரண்டு பேர் மட்டுமே உட்கார்ந்து பார்க்க கூடிய அளவுக்கு உள்ள அறையில் இருக்கும் அந்த டிவியை பயன்படுத்த எம்.ஜி.ஆர். லைசென்ஸ் வாங்கி வைத்திருந்தார். ஆம்! அன்று டிவி வாங்கினால் கூடவே சட்டப்படி லைசென்சும் இருக்க வேண்டும்.

இன்று தொலைக்காட்சி மகிழ்ச்சியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. பொழுதுபோக்கின் உச்சக்கட்டமாக கூறப்படுகிறது. ஆனால் அதை கண்டு பிடித்தவரின் வாழ்க்கை அவ்வளவு சந்தோஷமாக இருக்கவில்லை. தனக்கிருந்த தொழில் நுட்ப அறிவைப் பயன்படுத்தி அதற்கான ஆய்வுகளில் முழு மூச்சாய் இறங்கி அந்த அறிவியல் விஞ்ஞானி தனது விடா முயற்சியால் உலகையே மறந்தார். 

இந்த விஞ்ஞானியின் வாழ்க்கையில் பல தொழில்முறைச் சிக்கல்கள் அவரை ஆட்டி படைத்தன. பணப் பற்றாக்குறை, மனவிரக்தி என அழுந்தியது அவரது உள்ளம். ஷோபாவில் உட்கார்ந்து கொண்டு ரிமோட் கண்ட்ரோல் மூலம் சானலை மாற்றி நாம் சந்தோஷப்படுவதைப்போல அவரால் வாழ்க்கையை மாற்றிக்கொண்டு சந்தோஷப்பட முடியவில்லை. 

விடா முயற்சியால் முட்டி மோதிக்கொண்டுந்த அந்த அறிவியல் விஞ்ஞானி இறுதியாக டெலிவிஷனை கண்டுபிடித்தார். ஆமாம் நண்பர்களே! இவ்வளவு போராட்டங்களை தாண்டிதான் 1926ம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோன் லூகி ஃபெர்டு எனும் அறிவியல் அறிஞன் முதன்முதலில் டெலிவிஷனை கண்டுபிடித்தார்.

அதன்பிறகு தொலைக்காட்சித் தொழில் நுட்பங்கள் பலரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. பில்லோ பான்ஸ்வர்த் என்பவர் தொலைக்காட்சியின் டியூபைக் கண்டுபிடித்தார். கதிர் டியூபை விளாடிமிர் கோஸ்மா ஸ்வாரிகின் என்பவர் கண்டுபிடித்தார். இருப்பினும் தொலைக்காட்சிப் பெட்டி என்ற வகையில் தொலைக்காட்சியை அறிமுகம் செய்தவர் என்பதால் 'ஜோன் லூகி ஃபெர்டு" தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் என உலகம் இவரை கொண்டாடுகிறது.

ஜோன் 'டெலிவிஷன்' என்ற வார்த்தையை 1900ல் பாரீஸ் மின்சார மாநாட்டில் கான்ஸ்டின் பெர்சிகி என்றவர் ஆற்றிய உரையின் சுருக்கத்திலிருந்து கண்டெடுத்தார். 'தொலைவிலிருந்து பார்ப்பது' எனப் பொருள்படும் 'டெலிவிஷன்' என்ற வார்த்தை கண்டடைந்தார் என்று 19 நூற்றாண்டின் நடுப் பகுதியிலிருந்து விவாதிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதுதான் டிவி பிறந்த கதை. டிவியை கண்டுபிடித்தவர் அடைந்தப் புகழைவிட டிவியின் எத்ர்மறையான கருத்துக்களை பரப்பியவர்கள் அதிகம் புகழ் பெற்றது வரலாறு. டெலிவிஷனை இடியட் பாக்ஸ் என்று வாதம் செய்தவர்கள் அறிவாளிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.

கறுப்பு வெள்ளையோடு தொடங்கிய இந்தக் காட்சிப் போர் படிப்படியாக வளர்ந்து இன்று வண்ணமயமான உலகமாக மாறியிருக்கிறது. இன்று டிவி இல்லாமல் எந்தக் காரியத்தையும் நம்மால் யோசிக்க முடியாது. ஒரு பொருளை நாம் தேர்வு செய்வது தொடங்கி அதை நிராகரிப்பது வரை ஆதிக்கம் செலுத்துகிறது டிவி. தொலைக்காட்சியில் ஒருவர் தோன்றினால் அவர் ஒரே இரவில் பெரிய நட்சத்திரமாக உருமாறிவிடுகிறார். 

மிகச் சாதாரணமாக இருந்த நடிகை ஓவியா பிக் பாக்ஸ்சுக்குப் பின்னால் பெரிய செலிபிரட்டியாக மாறியிருக்கிறார். சினிமா என்பது பெரிய விஷயம். டிவி என்பது கொஞ்சம் குறைந்தது என்ற பார்வை கமல் வருகைக்கு பிறகு மாறியிருக்கிறது. அமிதாப், சல்மான்கான் போன்ற உச்ச நட்சத்திரங்கள் டிவியில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். சினிமா தியேட்டர்களில் கிடைக்கும் வருமானத்தைவிட சாட்டிலைட் வருமானம் என்பது மலையளவுக்கு உயர்ந்து போய் உள்ளது. 

இருபது வருடங்களாக பக்கத்து வீட்டில் இருப்பவரே ’உங்களை நேற்று டிவியில் பார்த்தேன்’ என்று முதன்முறையாக பேசுகிறார். குடும்ப உறவுகளின் பிரச்னைகள் இன்று சாட்டிலைட் சானல் கண்டென்ட்டாக மாறியுள்ளன. உள்ளூர் பிரச்னை என்பதே இன்று இல்லை. எல்லாம் உலகப் பிரச்னையாக மாற்றி இருக்கிறது ஊடகம். அதனால்தான் மெரினாவில் ஆண்ட்ராய் மொபைல் வெளிச்சத்தை உயர்த்துக் காட்டிய போது உறைந்துபோய் பார்த்துக் கொண்டிருந்தது உலகம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close