[X] Close
JUST IN
 • BREAKING-NEWS அன்புச்செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை: இயக்குநர் சீனுராமசாமி
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளி புல்கித் என்பவர் கைது
 • BREAKING-NEWS கந்துவட்டி தொடர்பாக பொதுமக்கள் அச்சமின்றி புகார் அளிக்க முன்வர வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை இறுதி செய்ய 2 நாளில் டெல்லி செல்கிறார் ராஜேஷ் லக்கானி
 • BREAKING-NEWS கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களின் பட்டியலை தயார் செய்ய விஷால் உத்தரவு
 • BREAKING-NEWS புதிய மணல் குவாரிகள் அமைப்பதை கைவிடாவிட்டால் மக்கள், விவசாயிகள் ஆதரவுடன் போராட்டம்: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கந்துவட்டி கொடுமையால் அசோக்குமார் தற்கொலை விவகாரத்தில் காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது: இயக்குநர் அமீர்
 • BREAKING-NEWS சென்னை போயஸ் கார்டனில் பாதுகாப்பு பணிக்காக அதிகளவில் போலீசார் குவிப்பு
 • BREAKING-NEWS தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் ரேஷன் கடைகள் முன் போராட்டம் தொடங்கியது
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தின் விசாரணை தொடங்கியது
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என தகவல்
 • BREAKING-NEWS அனைவரும் ஒன்றாக, இணைந்தே இருக்கிறோம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ
 • BREAKING-NEWS இரு அணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது: பொன்னையன்
 • BREAKING-NEWS ரூ.18 ஆயிரம் கோடி கடனில் உள்ள தமிழக போக்குவரத்துத்துறையை மீட்டெடுக்க வேண்டும்: விஜயகாந்த்
சிறப்புக் கட்டுரைகள் 07 Nov, 2017 07:26 PM

63 வயதினிலே..  சகல'கலர்' வல்லவன் பராக்..பராக்..பராக்..

kamal-hassan-imaginary-interview

"வணக்கம் சார்  இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.. ரிட்டயர்ட் ஆகிட்டீங்க என்ன பண்ணப் போறீங்க?" 

"இவ்வளவு வருடமா சினிமாவ நம்பியே இருந்துட்டேன்..இப்ப வயசாகிடிச்சு. அதான் பேசாமா ஒரு கட்சி ஆரம்பிச்சுடலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்..

"கட்சியா ? அரசியல்ல உங்களுக்கு ஏதாவது அனுபவம் இருக்கா சார்?"

"அதான் இத்தனை வருடமா சினிமாவுல இருக்கேனே..நல்லா நடிப்பேன்னு எத்தனை பேர் பாராட்டுறாங்க.."

"சினிமாவுல நடிச்சது மட்டுமே போதுமா சார்.." 

"அது மட்டுமே போதும் என்று எவரும் சொல்லவில்லை அது போதாது என்றும் சொல்லாதீர்கள் என்றுதான் சொல்கிறேன்.." 

"அத விடுங்க..கட்சி ஆரம்பிக்கனும்னா காசு நிறைய வேணுமே என்ன பண்ணுவீங்க?"

"ரசிகர்களிடம் இருந்து வசூலிப்பேன்"

"சார் அவங்களே பாவம்..படம்பார்க்க செலவழிச்சது போதாதுனு இப்ப கட்சி ஆரம்பிக்கவும் காசு தரணும்னா எப்படி சார்?" 

"அதுவும்  இல்லாம அவங்ககிட்ட இருந்து எவ்வளவு சார் கிடைச்சிடும்?"

"ஏன் மிகப்பெரிய தொழிலதிபர்கள் என்னுடைய ரசிகர்களாக இருக்கக் கூடாதா?"

"அது சரி..செலவே இல்லாம செய்ய முடியும்னு சொல்றீங்க..

சார் உங்ககிட்ட கேட்கணும்னு நினைச்சேன்...நீங்க கருப்பா, சிவப்பா, கருப்பு சிவப்பா, காவியா...? உங்க வண்ணம்தான் என்ன சார்?"


"வண்ணம் எதுவாக இருந்தாலும் நம் எண்ணம் நன்றாக இருக்க வேண்டும்..அதுதான் முக்கியம்."

"விளையாடாதீங்க...சொல்லுங்க.. உங்க வண்ணம் சிவப்புனும் உங்களை அவங்கதான் இயக்குறாங்கனும் காவி சொல்லியதைக் கேட்டீங்களா?".

அதுக்குத்தான் கருப்புக்குள் காவியும் அடக்கம்னு முதல்லயே சொல்லிட்டேனே"

"நீங்க சொன்னீங்க.. அதுக்குத்தான் எல்லாரும் உங்களை கடுமையா விமர்சிச்சாங்களே.."

"இந்துத் தீவிரவாதம் இல்லையென்று இனியும் சொல்ல முடியாதுனு சொன்னதும் திட்டுனவங்க எல்லாம் ஆதரிச்சிட்டாங்களே அப்புறம் என்ன?"  

"அதுசரிதான் ஆனா ஆதரிச்சவங்க எல்லாம் திட்ட ஆரம்பிச்சுட்டாங்களே.".

"அதுக்குத்தான் தீவிரவாதம் என்றால், Not terrorism , Extremisiom னு சொல்லிட்டேனே..அதுவும் இல்லாம எங்க வீட்டுலயே இந்துக்கள் இருக்காங்கனும் சொன்னேனே.. நான் நூல் பல கற்றவன்..இதை எப்படி சமாளிப்பது என்று எனக்கு நல்லா தெரியும்."

"நூல் பற்றி பேசியதும்தான் நியாபகம் வந்துச்சு."

"போதும் நீங்க என்ன கேட்கப் போறீங்கனு தெரியும்..இன்னிக்குக் கூட ஒரு செய்தியாளர் அதைக் கேட்டாரு..நான் தெளிவா சொல்லிட்டேன்..சாதிகளைக் கடந்தவன் நான்."


"அது சரி..இப்ப ஒரு படம் பண்ணிட்டு இருக்கீங்களே அதுக்கு பேர் என்ன சார்."

" சபாஷ் நாயுடு " வைப் பத்தி பேசுறீங்களா..ஆமா..அதுக்கென்ன இப்போ?

"ஒன்னுமில்ல சாதி ஒழிப்பிற்கான உங்க முயற்சியின் ஒரு படியா இதை எடுத்துக்கலாமா?"

"என்னை பகடி செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.." சபாஷ் நாயுடு " என்ற பெயரால் சமூகம் கெட்டு விடும் என்று நினைத்தால் சமூக யதார்த்தம் இதை விட மோசமாகவே இருக்கிறது."

"இதை இதுக்கு முன்னாடி எங்கயோ கேட்ட மாதிரியே இருக்குதே..ஆங் ஞாபகம் வந்துடுச்சு அந்த சேரி பிகேவியர்லயும் இதையேதான் சொன்னீங்க.. சரி உங்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது..தேர்தல் அரசியலில் இதையெல்லாம் மக்கள் எப்படி பார்ப்பாங்கனு நினைக்கிறீங்க."

"அதுக்குத்தான் தெளிவா ஒரு விளக்கம் கொடுத்தேனே..கடவுள் இல்லை என்று சொல்லவில்லை..இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் சொல்கிறேன்னு சொல்லிட்டேனே.."

"ஏது இது தெளிவான விளக்கமா..அது சரி..இப்ப தெளிவா சொல்லுங்க..நீங்க நாத்திகரா? ஆத்திகரா?" 

"நான் நாத்திகன் இல்லை.."

"அப்ப ஆத்திகரா?"

"இல்லை நான் பகுத்தறிவுவாதி."

"அப்போ ஆத்திகவாதிகள், நாத்திகவாதிகளுக்கு பகுத்தறிவு இல்லைனு சொல்றீங்களா ?"

"அப்படி இல்லை..பகுத்தறிவாளர்களுள் இவர்களும் இருக்கலாம் என்றுதான் சொல்கிறேன்." 

"இடியாப்பத்தை பிச்சு போட்ட மாதிரியே இருக்குது..கட்சி எப்பதான் ஆரம்பிப்பீங்க?".

"விரைவில்.. "

"இதையேதான் ரொம்ப நாளா சொல்றாரு வரமாட்டாருனு சொல்றாங்களே.". 

"அதுக்குதான் பதில் சொன்னேனே..ஊடக அழுத்தம் கருதி கட்சி தொடங்க முடியாதுனு.."

"ஆனா, ஊடகத்திடம் நீங்கதானே சொன்னீங்க அரசியல் கட்சி தொடங்குவது உறுதினு."

ஆம் ..உண்மைதான்..

அப்போ சொல்லுங்க எப்ப கட்சி ஆரம்பிக்கப் போறீங்க?"

"ஊடக அழுத்தத்திற்காகவெல்லாம் கட்சி தொடங்க முடியாது."

"ஐயோ மறுபடியும் முதல்ல இருந்தா...முடியல.. ஒன்னும் புரியல."

"புரியாதவர்கள் நாளை காலை ஆங்கில நாளிதழ்களைப் பார்த்து புரிந்து கொள்ளவும்"

"சரி விடுங்க..நீங்க கம்யூனிஸ்ட் தானே?"

" என்னை இடது என்று நினைத்தால் சற்று நகர்ந்து மையமாக இருப்பேன்."

அப்ப மையம்னு நினைச்சா அங்கிருந்து எங்கு நகருவீங்க? ஏன் சார் ஒரு இடத்துல இருந்தாதான் என்ன ? சரி இந்த உத்தரப் பிரதேசத்துல ஆக்சிஜன் இல்லாம குழந்தைங்க.... 

"போதும்...போதும்..போதும்...எனக்கு நேரம் ஆகிவிட்டது நிறைய வேலைகள் இருக்கின்றன...நான் விடைபெறுகிறேன்... பிறிதொரு நாளில் பேசுவோம்...நன்றி வணக்கம்.".

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close