[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து ஜன.24 ஆம் தேதி பாஜக போராட்டம் நடத்தும்-தமிழிசை
  • BREAKING-NEWS ஜன. 12 இல் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு நாளை மறுநாள் நடைபெறும்
  • BREAKING-NEWS 2ஜி விவகாரத்தில் ஆ.ராசா எழுதிய ‘தி 2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ என்ற புத்தகம் டெல்லியில் வெளியீடு
  • BREAKING-NEWS பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு; நாளை முதல் அமலுக்கு வருகிறது
  • BREAKING-NEWS மூத்த குடிமக்கள், 8 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10% குறைக்கப்படும் - சுஷ்மா ஸ்வராஜ்
  • BREAKING-NEWS டெல்லியில் சுஷ்மா ஸ்வராஜை புரட்சித்தலைவி அம்மா என்று அழைத்து மகிழ்வேன் - புதுச்சேரி முதலமைச்சர்
  • BREAKING-NEWS பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் வாகனம் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஆதார் அவசியம் - அரசு
சிறப்புக் கட்டுரைகள் 26 Oct, 2017 11:45 AM

ஆன்லைனில் அடங்கிப்போன சினிமா விழாக்கள்!

cinema-fuction-s-on-social-media

கோடம்பாக்கத்தில் ஆர்ப்பாட்டமாக நடந்து வந்த சினிமா விழாக்கள், இப்போது
ஆன்லைனுக்குள் அடங்கிபோயிருக்கிறது. 

தமிழ் சினிமா விழாக்களுக்கென ஒரு பிரமாண்டம் இருந்தது இங்கு. ஒரு படத்தின் நூறாவது நாள் விழா என்றால் மாநில முதல்வரை அழைத்து வந்து ஷீல்டு கொடுப்பதை பெருமையாக வைத்திருந்தது, தமிழ் சினிமா. முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் இதுபோன்ற விழாக்களில் கலந்துகொள்வதை பெருமையாகவே நினைப்பார்கள்.

பழைய ஹீரோக்கள், நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் அலுவலகங்களுக்கு இப்போது சென்றால் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஷீல்டுகள், அவர்கள்
பெருமையைச் சொல்லும். அதெல்லாம் இன்று ஓல்டாகிவிட்டது. இப்போது எந்தப் படமும் நூறு நாட்கள் ஓடுவதில்லை என்பதால் ஷீல்டுகளுக்கான தேவையும்
இல்லாமல் போய்விட்டது. 

இன்றைய விழாக்கள் சமூக வலைத்தளங்களிலேயே முடிந்துவிடுகின்றன. இது எளிது. செலவே இல்லாமல் எளிதாக படங்களையோ, பாடல்களையோ விளம்பரப்படுத்தி விட முடிகிறது.

‘ஒரு பாடல் வெளியீட்டு விழா நடத்த வேண்டும் என்றால் குறைந்தது மூன்று முதல் நான்கு லட்சம் ரூபாய் செலவாகும். அப்படிச் செலவழித்தால் அப்போது பலன் இருந்தது. பாடல்களால் படம் ஓடிய காலம் அது. இன்று அப்படியில்லை. பாடல்களுக்கான லைஃப் குறைந்துவிட்டது. அதோடு, ஆடியோ மார்க்கெட் இன்று சுத்தமாக இல்லை. டாப் இசை அமைப்பாளர்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. இந்த நிலையில் ஆடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது செலவைக் குறைப்பதாக இருக்கிறது’ என்கிறார் மூத்த சினிமா விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை.

‘உண்மைதான். பெரிய பட்ஜெட் படங்களுக்கு ஆடியோ வெளியீடு நடத்தப்பட்டுதான் வருகிறது. விழாக்கள் நடத்த இடம் கிடைப்பது ஒரு காரணம். சில தியேட்டர்களில் விழாக்களை நடத்தினால், குறிப்பிட்ட நேரத்துக்குள் நடத்த வேண்டியிருக்கிறது. சோசிஷியல் மீடியாவில் வெளியிட்டால் செலவு குறைவு. மக்களையும் சென்றடைகிறது’ என்கிறார், தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா.

‘இந்தியில் ஒரு படத்தின் புரமோஷனுக்கு மட்டுமே ஒரு மாதம் உழைக்கிறார்கள் படத்தில் பணியாற்றிய ஹீரோ, ஹீரோயினில் இருந்து எல்லோரும். ஷாரூக் கான்,
அக்‌ஷய் குமார், அமீர்கான் எல்லாம் இந்தியா முழுவதும் பயணிக்கிறார்கள், புரமோஷனுக்கு. ஆனால் இங்கு? சில ஹீரோ, ஹீரோயின்கள் தங்கள் பட
புரமோஷனுக்கே வராமல் இருக்கும்போது, மற்றவர்களை எப்படி சிறப்பு விருந்தினர்களாக அழைக்க முடியும்? அதனால் சமூக வலைத்தளங்கள் எளிதாக
இருக்கிறது. இது இங்கு ரீச் ஆகிறதோ, இல்லையோ, வெளிநாடுகளில் நன்றாக ரீச் ஆகிறது’ என்கிறார் மற்றொரு தயாரிப்பாளர்.

’ஆன்லைனில் சினிமா விளம்பரங்களை பார்ப்பவர்கள் குறைவுதான். அதோடு அவர்கள் எல்லோருமே ஆன்லைனில் படங்களை டவுன்லோடு செய்து பார்ப்பவர்கள். அதனால் சினிமாவுக்கு என்ன லாபம்?’ என்று கேட்கிறார் இன்னொரு தயாரிப்பாளர். 

எப்படியோ, ஆர்ப்பாட்டமாக நடத்தப்பட்ட சினிமா விழாக்கள், இப்படி ஆன்லைனில் அடங்கிவிட்டதே என்று வருத்தமாகச் சொல்கிறார்கள், கோடம்பாக்க ரசிகர்கள்.

 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close