இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்த வாதியுமான ஜெகஜீவன் ராமின் பிறந்த நாள் இன்று. இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று பல முறை சிறை சென்றவர். தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக பாடுபட்டவர். சுதந்திர இந்தியாவில் நேரு தலைமையிலான அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் அதன் பின்னர் வந்த அரசுகளில் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் பொறுப்பு வகித்த சிறப்புக்குரியவர். பாபு என மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட இவர் 1977ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் தலைமையிலான அமைச்சரவையில் துணைப் பிரதமராக பொறுப்பேற்று சிறப்புற செயல்பட்டார். 1908ஆம் ஆண்டு இதே நாளில் பீகார் மாநிலத்தில் ஜெகஜீவன் ராம் பிறந்தார்.
1957, ஏப்ரல் 5-கேரளாவில் முதல் கம்யூனிஸ்ட் அரசு
கேரளாவில் கம்யுனிஸ்டு தலைமையிலான ஆட்சி இதே நாளில் அமைந்து. 1956ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கேரளா மாநிலத்தில் 1957இல் நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தலில் கம்யுனிஸ்ட் கட்சி பெரும்பாலான இடத்தை கைபற்றியது. 126 மொத்த இடங்களில் 101இல் போட்டியிட்ட கம்யுனிஸ்ட் கட்சி 60 இடங்களை கைப்பற்றியது. இதனை அடுத்து 5சுயேச்சை உறுப்பினர்கள் ஆதரவுடன் E M S நம்பூதிரிபாடு தலைமையில் 1957ஆம் ஆண்டு இதே நாளில் புதிய அரசு பொறுப்பேற்றது. இதுவே சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத பிற கட்சியின் தலைமையிலான முதல் அரசு என்ற சிறப்பையும் பெற்றது
பாகிஸ்தான் பொருட்கள் மீதான சுங்க வரி 200% ஆக உயர்வு
கார் வெடிகுண்டு தாக்குதல் - இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்தல்?
“40 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம்” - சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
8 ஆண்டுகள் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் அதிரடி மாற்றம்
சிஆர்பிஎப் வீரரின் கடைசி செல்ஃபி, கடைசி தொலைபேசி உரையாடல்
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !