[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மெர்சல் திரைப்பட காட்சிகளை யாருக்காகவும் நீக்கக் கூடாது: நடிகர் சங்கம்
  • BREAKING-NEWS மெர்சலில் சில காட்சிகளை நீக்குமாறு வலியுறுத்துவது அடக்குமுறை அரசியலின் வெளிப்பாடு: கருணாஸ்
  • BREAKING-NEWS மெர்சல் படத்தை வைத்து பலர் மோசமான அரசியலை செய்கின்றனர்: தமிழிசை
  • BREAKING-NEWS சென்சார் செய்த படத்தை திரும்ப சென்சார் செய்ய வாய்ப்பில்லை: எஸ்.வி.சேகர்
  • BREAKING-NEWS கருத்து சுதந்திரம் என்பது படைப்பின் அடிப்படை உரிமை: இயக்குநர் சீனு ராமசாமி
  • BREAKING-NEWS மெர்சல் படம் மூலம் மக்களுக்கு சமூக கருத்துகளை சொன்ன விஜய்க்கு பாராட்டு: விஷால்
  • BREAKING-NEWS பேச்சு, படைப்பு சுதந்திரத்திற்கு திமுக எப்போதும் துணை நிற்கும்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோட்டையில் ஏற்றப்பட்ட தேசிய கொடியில் ஓட்டை
  • BREAKING-NEWS நடிகர் விஜயின் மெர்சல் திரைப்படத்தில் இருந்து 4 காட்சிகள் நீக்க தயாரிப்பு தரப்பு முடிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சலுக்கு இன்று இதுவரை 4 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS தஞ்சை கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி வெளியேறக்கோரி 155 ஆவது நாளாக போராட்டம்
  • BREAKING-NEWS காய்ச்சலால் தொடரும் மரணங்கள்: நேற்று மட்டும் 10 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS திருவள்ளூரில் டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த 2,533 வீடுகளுக்கு நோட்டீஸ்: ஆட்சியர்
  • BREAKING-NEWS திண்டிவனத்தில் கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்பட்ட 2 கட்டடங்களுக்கு ரூ.2லட்சம் அபராதம்
சிறப்புக் கட்டுரைகள் 09 Oct, 2017 01:59 PM

‘ஃபிட்ஜெட் ஸ்பின்னர்’ இந்தியாவில் தடை செய்யக் கோரிக்கை

speed-jet-addictive-game

இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் தற்போது பிரபலமாகி வரும் விளையாட்டு ஃபிட்ஜெட் ஸ்பின்னர் .

கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரலில் அழுத்திப்பிடித்து சுற்றுவதுதான் இந்த விளையாட்டு. இந்த ஸ்பின்னர் டைட்டானியம், துருப்பிடிக்காத எஃகு, காப்பர், ப்ளாஸ்டிக் என குறிப்பிட்ட சில உலோகங்களைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. தற்போது குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பிரபல விளையாட்டுப்பொருளாக பார்க்கப்படும் இந்த ஸ்பின்னர் மனநல பாதிப்புக்குள்ளானவர்கள், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ADHD என்ற சொல்லக்கூடிய கவனக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஃபிட்ஜெட் ஸ்பின்னர் (Fidget spinner) ம‌ன வளர்ச்சி குன்றிய குழைந்தைகளுக்கானது என கூறப்பட்டாலும் அதுவும் ஒரு விளையாட்டுப் பொருளை போன்றதுதான் என்கின்றனர் மருத்துவர்கள். அதனால் இதன் விற்பனையும் சந்தையில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக ஆன்லைனில் மவுசு அதிகரித்துள்ளது. முதலில் மூன்று இறக்கைகள் கொண்டதாக அறிமுகமானாலும் தற்போது 4,5 இறைக்கைகள் கொண்ட ஸ்பின்னர்களும் பேட்டரி மூலம் இயங்கும் ஸ்பின்னர்களும் சந்தையில் அறிமுகமாகத் தொடங்கிவிட்டன. இதனை விளையாடுவதால் மன அழுத்தம் குறையும் என்பதே இதன் விற்பனை கோட்பாடாகவும், பயனாளர்களின் கருத்தாகவும் உள்ளது.

இந்த விளையாட்டு பொருளைப் பயன்படுத்தும்போது குழந்தைகள் இதனை விழுங்கிவிடும் அபாயமும், இதன் கூரிய பகுதி முகத்தில் காயங்களை உண்டாக்கும் நிகழ்வுகளும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இத‌னை தொடர்ந்து பயன்படுத்தி, இதற்கு அடிமையாகு‌ம்போது விளையாடுப‌வரின் அறிவுத்திறனும், ஞாபக சக்தியும் குறைய தொடங்கும் என்ற அதிர்ச்சி தகவலையும் முன்வைக்கின்றனர் மருத்துவர்கள்.

உலக நாடுகள் பல இந்த விளையாட்டின் ஆபத்தை உணர்ந்து இதன் விற்பனையை தடை செய்திருக்கும் நிலையில், இந்தியாவில் சில பள்ளிக்கூட‌ங்களில் மட்டும் தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல முழுமையாக இதனை‌ தடை செய்ய ‌‌வேண்டும் என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close