[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: எல்லையில் ராணுவ உடையில் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார் பிரதமர் மோடி
 • BREAKING-NEWS ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு
 • BREAKING-NEWS நிலவேம்பு கசாயம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் கமலுக்கு அரசு சித்த மருத்துவர்கள் கண்டனம்
 • BREAKING-NEWS 15 நாட்களில் டெங்கு காய்ச்சல் முழுவதும் கட்டுப்படுத்தப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS தீபாவளி டாஸ்மாக் மது விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20%குறைந்தது
 • BREAKING-NEWS வித்தியாசமாக பேச வேண்டும் என்பதற்காகவே நிலவேம்பு கசாயம் குறித்து கமல்ஹாசன் கருத்து கூறியுள்ளார்: இல.கணேசன்
 • BREAKING-NEWS மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும்: தமிழிசை
 • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீரில் காலை 6.40 மணியளவில் நில அதிர்வு- ரிக்டர் அளவு கோலில் 4.7ஆக பதிவு
 • BREAKING-NEWS தஞ்சை மாவட்டத்தில் 34 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஆட்சியர் அண்ணாதுரை
 • BREAKING-NEWS ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து 12,000 கனஅடியில் இருந்து 11,000 கனஅடியாக குறைந்தது
 • BREAKING-NEWS தீபாவளியையொட்டி பட்டாசு வெடிப்பதால் சென்னை நகரம் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது
 • BREAKING-NEWS சென்னை : பட்டாசு வெடித்து தீக்காயமடைந்த 10 பேருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
 • BREAKING-NEWS 68சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேசத்தில் நவ.8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது
 • BREAKING-NEWS இமாச்சலபிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்கு 68 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக
சிறப்புக் கட்டுரைகள் 02 Oct, 2017 12:31 PM

மதுரைக்கும் மகாத்மா காந்திக்குமான தொடர்பு

gandhi-memorial-museum-in-madurai-is-dedicated-to-the-memory-of-the-father-of-the-nation

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை கொண்டாடும் இந்நாளில் அவருக்கும் மதுரை மாநகரத்துக்கும் உள்ள தொடர்பை காண்போம்.

மதுரை நகரத்தின் அடையாளங்களில் ஒன்று காந்தி அருங்காட்சியகம். சுமார் 320 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கட்டடத்தில் காந்தி தொடர்புடைய பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. காந்திஜியின் அரிய புகைப்படங்கள், அவர் அணிந்த மூக்குக்கண்ணாடி, நூல் நூற்ற ராட்டை, காலணிகள், தலையணை, கம்பளி என ஏராளமான பொருட்கள் இங்குள்ளன. காந்திஜியின் ரத்தக்கறை படிந்த வேஷ்டி இங்கு வரும் அனைவரையும் கவர்கிறது. பாரம்பரிய ஆடை அணிந்திருந்த காந்தியை எளிமையான ஆடைக்கு மாற வித்திட்டதும் மதுரைதான்.

13 ஏக்கர் பரப்பளவில் வரலாற்றுப் பெட்டகமாக திகழும் இந்த அருங்காட்சியகத்தை காண மாதம் தோறும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வருகின்றனர். குறிப்பாக தேசத்தின் வரலாற்றை தமது குழந்தைகளுக்கு புகட்ட விரும்பும் பெற்றோர் தம் பிள்ளைகளை இங்கு அழைத்து வருகின்றனர்.
காந்தி அருங்காட்சியகத்தில் பலரையும் கவரும் அம்சம் இங்கு வைக்கப்பட்டுள்ள அவரது அஸ்தி. இதைக்கண்டு பலரும் மெய்சிலிர்த்து வணங்கிச் செல்கின்றனர். மேலும் காந்திஜி தம் வாழ்நாளில் 5 முறை மதுரை வந்துள்ளார் என்றும் அதில் ஒரு முறை, ஹரிஜன மக்களோடு வந்து மீனாட்சியம்மன் கோயிலில் வழிபட்டதும் ஒன்று என இந்த அருங்காட்சியகத்தின் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close