[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்கக்கோரி தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுகவினர் புகார் மனு
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த சதி நடைபெறுகிறது: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் மக்கள் டிடிவி தினகரனை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS நாகையில் போராட்டம் நடத்த வந்த ஹெச்.ராஜாவை வஞ்சியூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்
 • BREAKING-NEWS பணப்பட்டுவாடா செய்தால் தேர்தலை ரத்து செய்வது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டையில் உள்ள பிசியோதெரபி கிளினிக்கில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் பறிமுதல்
 • BREAKING-NEWS இருண்டு கிடக்கும் தமிழகத்திற்கு இடைத்தேர்தல் முடிவு வெளிச்சத்தை பாய்ச்சட்டும்- ஸ்டாலின்
 • BREAKING-NEWS வரும் 19 ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்திற்கு பிரதமர் வர உள்ளதாக தகவல்
 • BREAKING-NEWS ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்- பிரதாப் ரெட்டி
 • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தலைவராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார் ராகுல் காந்தி
 • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வு அவரது அதிகாரத்துக்கு உட்பட்டது
 • BREAKING-NEWS தூத்துக்குடி அருகே கடலில் நாட்டுப்படகு பழுதாகி மூழ்கியதில் மீனவர் கென்னடி உயிரிழப்பு
 • BREAKING-NEWS நீர்மட்டம் குறைந்ததால் வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீராகாததால் 16வது நாளாக குளிக்க தடை விதிப்பு
சிறப்புக் கட்டுரைகள் 28 Sep, 2017 10:44 AM

ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட செப். 22, 2016 இரவு நடந்தது என்ன?

what-happened-at-sep-22-on-2016

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் பலராலும் எழுப்பப்படும் நிலையில், அது குறித்து விசாரணை செய்வதற்காக முதலமைச்சர் பழனிசாமி, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை, அதாவது மருத்துவ மொழியில் நோயாளியின் உடல்நிலை அறிக்கை (patient care report) புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ளது.

சென்ற ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு, ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு இரவு 10 மணிக்கு தொலைபேசி அழைப்பு சென்றிருக்கிறது. 10:01-க்கே அப்போலோவில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம் போயஸ் இல்லத்தை அடையும்போது மணி 10:06. ஆம்புலன்ஸில் இருந்து விரைந்து சென்ற 3 பேர் கொண்ட மருத்துவக்குழு, போயஸ் தோட்ட இல்லத்தின் முதல் தளத்திற்கு சென்றது. அங்கு மயங்கிய நிலையில் படுக்கையில் இருந்த முதல்வரை தட்டி எழுப்ப முயற்சித்துள்ளனர். அசைவு மட்டுமே இருந்ததும், முதல்வரிடம் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை என்பதும் நமக்கு கிடைத்த ஆதாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் முதல்வர் அனுமதிக்கப்பட்டார். சராசரியாக 120/80 ஆக இருக்க வேண்டிய ரத்த அழுத்தமானது 140/70 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், நிமிடத்திற்கு சராசரியாக 72 என இருக்க வேண்டிய இதயத்துடிப்பானது 80 ஆக அதிகரித்திருக்கிறது. சர்க்கரை அளவானதும் கடுமையாக உயர்ந்திருக்கிறது. சராசரி மனிதனுக்கு 120 எம்ஜி இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவானது ஜெயலலிதாவுக்கு 508 எம்ஜி என்ற அபாய நிலையில் இருந்ததும் நமக்கு கிடைத்துள்ள உடல்நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே, ஜெயலலிதா காய்ச்சல் மற்றும், நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்திருக்கிறது. நுரையீரல் தொற்று காரணமாக அவர் உடலில் 100% இருக்கவேண்டிய ஆக்சிஜன் அளவு 45% என்ற அபாய நிலையிலேயே இருந்திருக்கிறது.

முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளன்று இரவில் அவரது இல்லத்தில் நடந்தவை என பல்வேறு ஊகங்கள் வெளியான நிலையில், ஜெயலலிதா உடலில் காயமோ, புண்களோ இருந்ததாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சர்க்கரை அதிகரிப்பு, ரத்த அழுத்தம், தைராய்டு, நிமோனியா காய்ச்சல் ஆகிய பாதிப்புகள் இருந்ததாக மருத்துவ உடல்நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close