[X] Close
JUST IN
 • BREAKING-NEWS நான் உட்பட அனைத்து அமைச்சர்களும் ஜெயலலிதாவை பார்த்தோம்: அமைச்சர் செல்லூர் ராஜூ
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 13,281 கன அடியிலிருந்து 14,774கன அடியாக அதிகரிப்பு
 • BREAKING-NEWS மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: தமிழக அரசு
 • BREAKING-NEWS மும்பையின் மேற்கு பந்த்ராவில் குப்பைகளை அள்ளி தூய்மைப்பணியில் ஈடுபட்டார் சச்சின்
 • BREAKING-NEWS இன்றைய விலை: பெட்ரோல் ரூ.72.99; டீசல் ரூ.61.81
 • BREAKING-NEWS கோடியக்கரையில் தரை தட்டிய கப்பலை மீட்க 60 அடி நீள 2 விசைப்படகுகள் வர உள்ளதாக தகவல்
 • BREAKING-NEWS அல்லிநகரம் பகுதியில் கஞ்சா விற்ற மணி என்ற பெண் கைது- 1.25 கிலோ கஞ்சா பறிமுதல்
 • BREAKING-NEWS சென்னை: கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக்பில்லர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தூரல் மழை
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தால் எவ்வித பயனும் இருக்கப்போவதில்லை: ஸ்டாலின்
 • BREAKING-NEWS ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதற்கு ஸ்டாலின் கண்டனம்
 • BREAKING-NEWS நாட்டில் தற்போது மின் பற்றாக்குறை என்பதே இல்லை: பிரதமர் மோடி
 • BREAKING-NEWS நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் சவுபாக்யா யோஜனா திட்டம் தொடக்கம்
 • BREAKING-NEWS மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 744 சிறப்பு மருத்துவர்கள் விரைவில் தேர்வு : அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன்
சிறப்புக் கட்டுரைகள் 11 Sep, 2017 05:38 PM

வீரியமிக்க கவிதைகளால் விடுதலை உணர்வை ஊட்டிய பாரதியின் நினைவுநாள்

the-memory-of-bharathi-the-emotion-of-liberation-by-poetry-poems

தேசியப் பாடல்களால் சுதந்திர வேள்வியை மூட்டியவர் பாரதி மகாகவியின் 96 ஆவது நினைவு நாள் இன்று.

1882 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தார் சுப்பையா என்கிற சுப்பிரமணிய பாரதியார். சிறு வயதிலேயே கவி பாடும் ஆற்றல் பெற்றிருந்ததால் பாரதி என அழைக்கப்பட்டார். எட்டயபுரம் மன்னரின் ‌அவைப் புலவராகவும் பாரதியார் திகழ்ந்தார். நாட்டு விடுதலைக்காகவும், பெண் விடுதலைக்காகவும், ஜாதிக் கொடுமைகளை ஒழிப்பதற்காகவும் சாகா வரம் பெற்றப் பல பாடல்களைப் இயற்றியுள்ளார் பாரதியார்.

ஆணுக்கு பெண் நிகரென்றும், குல தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பாவம் என்றும் எடுத்துரைத்தவர் பாரதி. 1904 ஆம் ஆண்டு சுதேசமித்திரன் பத்திரிக்கையிலும் சக்கரவர்த்தினி மற்றும் "இந்தியா" வார இதழிலும் பணியாற்றியவர் பாரதியார். குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு உள்ளிட்ட காவியங்களையும், 1912 ஆம் ஆண்டு கீதையையும் மொழிபெயர்த்தார் பாரதி.

சதா சர்வகாலமும், தன் நாட்டைப் பற்றியும்,  தாய்மொழியாம் தமிழைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தவர் மகாகவி பாரதியார்‌. காலா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன் காலருகே வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன் என்று காலனுக்குரைத்த பாரதி, 1921 ஆம் ஆண்டு இதே நாளில், காலப் பெருவெளியில் கவிதையாய் கலந்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close