[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சித்த மருத்துவர்களின் மேற்பார்வையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது: சுகாதாரத்துறை செயலர்
  • BREAKING-NEWS பாஜகவில் இருந்து விஜய்க்கு முதல் ஆதரவு
  • BREAKING-NEWS டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழு உருவாகாமல் மக்கள் தடுக்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS மெர்சல் தயாரிப்பாளர், நடிகர்களை பாஜக மிரட்டுவதாக புகார் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூ.கண்டனம்
  • BREAKING-NEWS சாதனை படைத்த மெர்சல்: ஒரே நாளில் ரூ.33 கோடி வசூல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியால் நாட்டில் பொருளாதார புரட்சி நடந்து வருகிறது: தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS நான் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் முற்றிலும் பொய்: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS ஜோசப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்: ஹெச். ராஜா
  • BREAKING-NEWS பொறையார் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.7.5 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர்
  • BREAKING-NEWS மெர்சலில் அரசியல் விமர்சனங்களை தொடங்கியிருப்பது சினிமாதுறைக்கும், அரசியலுக்கும் நல்லதல்ல: பொன்.ராதா
  • BREAKING-NEWS டெல்லியில் பட்டாசு வெடிக்க, விற்க உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் காற்று மாசு குறைந்தது
  • BREAKING-NEWS டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: திருமா
  • BREAKING-NEWS பொறையார் போக்குவரத்துக் கழகம் அருகே தொழிற்சங்கத்தினர் போராட்டம்
மற்றவை / மேலும் 13 Aug, 2017 01:02 PM

நன்னீர் கடல் பைக்கால்

fresh-water-sea-lake-baikal-tourism-story

பரந்த இப்பூமிப்பந்தின் எண்ணற்ற அதிசயங்களில் ஒன்று, பைக்கால் ஏரி. உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யாவின் தென்கிழக்கு சைபீரியா பகுதியில் உள்ள பைக்கால் ஏரி, உலகின் மிகப் பழமையான மற்றும் ஆழமான நன்னீர் ஏரி.

வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் இருந்த பல்வேறு ஏரிகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புவிமடிப்புக் கொள்கையின்படி கடலோடு இணைந்தன. அதுபோல, பைக்கால் ஏரியை எதிர்கால கடல் என்றே பூமியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஏரி 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான சுமார் 5000 அடி ஆழம் கொண்டது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு நன்னீர் பைக்காலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பைக்கால் காலநிலை

மிகப்பெரிய நீர்நிலை என்பதால் சைபீரியாவின் மற்ற பகுதிகளோடு ஒப்பிடும்போது, பைக்கால் பகுதியில் குளிர் சற்று குறைவாகவே உள்ளது. உச்சபட்ச குளிர்காலத்தில் இங்கு -21° செல்சியஸ் வெப்பநிலையும், ஆகஸ்ட் மாதத்தில் 11° செல்சியஸ் வெப்பநிலையும் காணப்படுகிறது. ஜனவரி முதல் மே மாதம் வரை இந்த ஏரி முழுவதும் உறைந்து, கண்ணாடி தரையைப் போன்று காட்சியளிக்கிறது. இந்த ஏரி அதன் கரைகளில் ஒரு அற்புதமான மைக்ரோ காலநிலையை உருவாக்குகிறது. அதை அனுபவிக்கவே சுற்றுலா பயணிகள் அங்கே குவிகின்றனர்.

பைக்காலின் ஆறுகளும் தீவுகளும்

பைக்கால் ஏரியில் விழும் நீர், பெரும்பாலும் செலங்கா ஆற்றில் இருந்து வருகின்றது. மேலும், சுற்றியுள்ள மலைகளில் இருந்து 330 நதிகளும், ஓடைகளும் இந்த ஏரியில் நீரைக் கொட்டுகின்றன. பைக்கால் ஏரியில் இருந்து அங்காரா நதி மூலம் நீர் வெளியேறுகிறது. அங்காராவை தவிர்த்து வேறு எங்கும் ஏரியில் இருந்து நீர் வெளியேறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏரியில் 45 தீவுகள் உள்ளன. இதில் ஒல்ஹோன் தீவு மிகப்பெரியது மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தது. ஒல்ஹோன் தீவில் இயற்கை எழில் கொஞ்சும் காடுகளும், புல்வெளிகளும் உள்ளன. அங்குள்ள மான்கள், பிரவுன் கரடிகள், பல்வேறு வகையான பறவைகள் பார்க்க வேண்டியவை. 45 தீவுகளில் 27-இல் ஆள்நடமாட்டமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பைக்காலின் அதிசயங்கள்

பைக்கால் ஏரியின் நீளம் 640 கிமீ. அதாவது சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்கின்ற தூரம். இதன் அகலம் 72 கிமீ; அதிகபட்ச ஆழம் 1,632 மீட்டர். நன்னீரில் வாழக்கூடிய தனித்துவமான 600 வகை தாவரங்களும், 1200 வகை விலங்குகளும் இந்த ஏரியில் உள்ளன. இதில் பாதிக்கும் மேல் பைக்காலில் மட்டுமே வாழும் புளோரா & ஃபானா ஆகும். மிகவும் தூய்மையான, தெளிவான நீர் என்பதால் 40 மீட்டர் ஆழத்தில் உள்ள தரையைக்கூட பார்க்க முடியும்.

பைக்கால் பயணம்

சைபீரியாவில் தொலைதூரத்தில் உள்ள பைக்கால் ஏரி, அடிக்கடி சுற்றுலா செல்லும் இடம் இல்லை. ஆனால் வாழ்வில் ஒருமுறையேனும் பார்த்துவிட வேண்டிய அதிசயம். கடல் எப்போதும் பிரம்மாண்டம்தான். ஆனால் கடலில் சிறிது நேரத்திற்கு மேல் நீருக்குள் இருக்க முடியாது. அதன் உப்பு நீர் ஒரு ஒவ்வாமையை ஏற்படுத்தும். பைக்கால், பெருங்கடலின் பிரம்மாண்டத்தைக் கொண்ட சுத்தமான நீரைக் கொண்டது. ஏரியைச் சுற்றி பல்வேறு தங்கும் விடுதிகள் இருந்தாலும், லிஸ்த்யங்கா கிராமம் சுற்றுலா பயணிகள் அதிகமாக தங்கும் இடமாக இருக்கிறது. இந்த இடத்துக்கு சர்வதேச விமானங்கள் தரையிரங்கும் இர்குட்ஸ்க் நகரத்தில் இருந்து 2 மணி நேர பயணத்தில் சென்றடைய முடியும். அதேபோல் வடக்கு கரையோரம் உள்ள சேவ்ரோபேகல்ஸ்க் நகரம் சுற்றுலா பயணிகள் அதிகமாக செல்லும் இடம். இதன் அருகே அழகான சிறு சிறு தீவுகள் உள்ளன. அதேபோல் பைக்கால் ஏரியின் மிகப்பெரிய தீவு ஒல்ஹோன் சுற்றுலாப்பயணிகளை அதிகம் ஈர்க்கிறது. இந்தத் தீவுக்குள் பல அழகிய கிராமங்கள் உள்ளன. தங்குவதற்கு இந்திய ரூபாயின் மதிப்பில் 3000 ரூபாய் முதல் அறைகள் உள்ளன. உணவுக்கும் பெரிய செலவு ஆகாது. வயதான பாட்டிகள் சமைத்துக் கொடுக்கும் ஸ்மோக்டு பிஷ் தவறவிடக்கூடாத சுவை மிகுந்த உணவு. இந்தியாவிலிருந்து இர்குட்ஸ்க் நகரத்துக்கு, மூன்று மாதங்களுக்கு முன் டிக்கெட் புக் செய்தால் ரூ.75,000 செலவாகும். இர்குட்ஸ்க் நகரத்திலிருந்து 2 மணி நேரத்தில் பைக்கால் ஏரியை அடையலாம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close