[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்

வலியே சுகம் - தேசிய அளவில் சாதித்த தமிழன்

vallaye-sugam-tamil-nation-achieved-nationally

மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை திடீரென பார்க்கும்போது, ஏதோ வெளிநாட்டைச் சேர்ந்த உடற்பயிற்சி வீரர் என்று நினைக்கக்கூடும். இவர் நம் மண்ணைச் சேர்ந்தவர், தேசிய அளவில் தமிழ்நாட்டின் பெருமையை உயர்த்தி பிடித்த இந்த சாதனை தமிழனின் பெயர் வால்டர் அருண்குமார். சென்னையை அடுத்த அம்பத்தூர் பகுதியில் வசித்து வரும் இவர், சமீபத்தில் அசாமில் நடைபெற்ற தேசிய அளவிலான வெயிட் லிப்டிங் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 

இளைஞர்கள் எல்லோருக்கும் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை எழுவது இயல்பு தான். அப்படித்தான் நம்முடைய வால்டர் அருண்குமாருக்கும் பதினொன்றாவது வகுப்பு படிக்கும்போது ஆசை ஏற்பட்டுள்ளது. பார்க்க மிகவும் திடகாத்திரமற்ற நிலையில் இருந்த வால்டரை அனைத்து சிறுவர்களும் கிண்டல் செய்ய, ஆசை அவருக்கு பேராசையாக மாறியது. உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடலை கட்டுக்கோப்பாக வைத்து அனைவரின் முகத்திலும் கரியை பூச வேண்டும் என்று எண்ணமே அவருக்கு மேலோங்கியது. மற்றவர்கள் முகத்தில் கரி பூச நினைத்த அவருக்கு, அவரின் உடலே கரி பூசியது. காரணம் உடற்பயிற்சி கூடத்தின் முதல் நாளில் அவரால் ஒரு தண்டால் கூட எடுக்க முடியவில்லை. அதைப் பற்றிச் சொல்லும் போது, "உலகத்தில் மிக அவமானகரமான நிமிடம், நம்மிடமே நாம் ஆசிங்கப்படுவதுதான்." என்கிறார். 

உடற்பயிற்சி என்பதை சில வார உழைப்பாக கருதிக்கொண்டிருந்த வால்டர் அருண்குமார், தன்னுடைய உடலை புரிந்து கொள்ள ஆரம்பித்தார். தன் உடலை நேசிக்க ஆரம்பித்தார். நாக்கின் சுவைக்கு அடிமையாகி உடலை கெடுத்துக்கொள்ளும் கோடிக்கணக்கான மக்களுக்கு நடுவில், தன் உடலுக்காக பல உணவுகளை அவர் தியாகம் செய்தார். வாழ்க்கையில் ஒழுக்கத்தையும் கடைபிடிக்க ஆரம்பித்தார். 

"பயிற்சியாளர்கள் யாரையும் வைத்துக் கொள்ள முடியவில்லை. இணையதளங்களும், புத்தகங்களும்தான் எனக்கு குரு" என்கிறார் வால்டர்.

கடினமான பயிற்சி மூலம் தன்னைத் தானே செதுக்கிய வால்டர் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் கலந்து பதக்கங்களை வென்றார். பின்னர் பளுத்தூக்கும் போட்டிகளில் தனது கவனத்தை திசை திருப்பினார். குடும்ப சூழ்நிலை, வருமானம், லட்சியம் என்ற வாழ்க்கை பிரச்சனைகள் பல அவரின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டாலும், சற்றும் மனம் தளராத வால்டர், தூக்கத்தை கூட மறந்து தனது பளுதூக்கும் பயிற்சியில் தீவிரமாக இருந்ததற்கான பலன் தான் இந்த தேசிய அளவிலான பதக்கம் என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவிக்கிறார். 

STRENGTH LIFTING, POWER LIFTING, BOBY BUILDING என மூன்று பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்ற வால்டர் அருண்குமாருக்கு காமன்வெல்த் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று தங்க பதக்கம் பெற வேண்டும் என்பதே வாழ்நாள் லட்சியம். ஆனால் வெளிநாடுகளில் உள்ளது போல பளுதூக்கும் போட்டிகளுக்கு நம் தேசத்தில் போதிய வரவேற்பு இல்லாத நிலையில், அரசு தங்களைப் போன்றவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், பயிற்சிக்கான ஊக்கத்தொகையை வழங்க முன்வரவேண்டும் என்றும் வால்டர் கோரிக்கை விடுத்துள்ளார். சொந்தமாக உடற்பயிற்சி கூடம் வைக்க வேண்டும் என்ற வால்டரின் கனவு பலமுறை கைகூடிவந்த போது கூட, தனது பயிற்சிக்காக அந்த பணத்தையெல்லாம் வால்டர் செலவு செய்து விட்டதால் இன்று வரை சொந்த உடற்பயிற்சி கூடம் என்பது அவருக்கு ஒரு கனவாகவே உள்ளது. திரைப்படங்களில் வருவது போல ஒரே பாடலில் உடலை மெருக்கேற்ற வேண்டும் என்று வரும் இளைஞர்களுக்கு உடற்பயிற்சி எட்டா கனியாகிவிடும் என்று கூறும் வால்டர், தனது உடலை நேசிப்பவர்களுக்கு இந்த சூட்சமம் கைவரும் என்றும் சொல்கிறார். 

உடற்பயிற்சிக்கும் ஒழுக்கத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளதால், தீய வழியில் செல்பவர்கள் கூட தங்கள் உடலை காதலிக்க ஆரம்பித்தால் அதிலிருந்து விடுபட்டு ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்வார்கள் என வால்டர் தெரிவிக்கிறார். உணவே மருந்து என்ற நம் முன்னோர்களின் பாணியை கடைபிடித்தால், மருந்துக்குக்கூட மருந்தை உட்கொள்ளும் நிலை ஏற்படாது என்று கூறும் அவர், உடற்பயிற்சியை ஒரு தவம் என்றும் குறிப்பிடுகிறார். எப்போதும் தவத்திற்கான பலன் உடனே கிடைக்காது என்றும், பல ஆண்டுகள் தன்னுடைய கடுந்தவத்தின் பலன் தான் தற்போது கிடைத்துள்ள தேசிய பதக்கம் என்றும் கூறுகிறார் வால்டர் அருண்குமார். 

போட்டோ கேலரி

1 of 5

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close