[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்காரம் செய்யப்படுகிறது
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமியின் இரு அறிவிப்புகளும் யாருக்காக?: புகழேந்தி
  • BREAKING-NEWS ஆட்சிக்கு ஆபத்து என்பது ஆட்சியாளர்கள் கையில்தான் உள்ளது: ஜெயானந்த்
  • BREAKING-NEWS கபாலிக்கு கிடைக்காமல் போனதை கைப்பற்றிய மெர்சல்!
  • BREAKING-NEWS மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது இயற்கையானதே: அமைச்சர் நடராஜன்
  • BREAKING-NEWS இரு அணிகளும் இணைவதுதான் தொண்டர்களுக்கு மகிழ்ச்சி: அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும்: வானிலை மையம்
  • BREAKING-NEWS நீதி விசாரணை மூலம் பொதுச்செயலாளர் சசிகலா குற்றமற்றவர் என நிரூபணமாகும்: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS யார் முதலமைச்சராக இருந்தாலும் தமிழகத்திற்கு மத்திய அரசின் ஆதரவு இருக்கும்: அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS திருவனந்தபுரம்- சென்னை வரை பயணிகள் கப்பல் இயக்கப்படும்: அமைச்சர்
  • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யலாம்: உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் விவகாரத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் மத்திய சுகாதார அமைச்சகம் மீண்டும் கருத்துக் கேட்பு
  • BREAKING-NEWS ஓ. பன்னீர்செல்வத்துடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி ஆகியோர் சந்திப்பு
சிறப்புக் கட்டுரைகள் 31 Jul, 2017 05:49 PM

தற்கொலைக்கு தூண்டும் ’ப்ளூ வேல்’ ஆன்லைன் விளையாட்டு 

blue-whale-online-game

உலக அளவில் இளைஞர்களின் வாழ்வுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக ப்ளூவேல் எனும் ஆன்லைன் விளையாட்டு மாறிவருகிறது.

இந்த விளையாட்டுக்கு அடிமையாகி மும்பையைச் சேர்ந்த 14 வயது சிறுவன் 7 மாடிக் கட்டடத்தின் உச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக அளவில் பிரபலமாகி வரும் இந்த விளையாட்டால் இந்தியாவில் உயிரிழப்பு ஏற்படுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. 9ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவன் உயிரிழப்பு குறித்து வழக்கு பதிவு செய்துள்ள மும்பை போலீசார், ப்ளூவேல் விளையாட்டுக்கும் அவருக்கும் உள்ள தொடர்புகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.  

ப்ளூவேல் ஆன்லைன் விளையாட்டு:

ஆன்லைன் விளையாட்டான ப்ளூவேல், பங்கேற்பாளருக்கு பல்வேறு சவால்களை அளிக்கும். நாளொரு சவால் வீதம் 50 நாட்களுக்கு கொடுக்கப்படும் சவால்களை பங்கேற்பாளர்கள் முடிக்க வேண்டும். தொடக்கத்தில் அளிக்கப்படும் சவால்கள் எளிதாகவே இருக்கும். ஆனால், போகப்போக சவால்கள் கடினமாக்கப்படும் மாஷ்மெல்லோ எனும் இனிப்பு பண்டத்தை வாய்நிறைய எடுத்துக் கொள்வது தொடங்கி, நடு இரவில் எழுந்து ஹாரர் திரைப்படங்களைப் பார்ப்பது மற்றும் வீட்டின் மேற்கூரை மேல் நடப்பது என பயணித்து இறுதியில் கூரை மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று இறுதி சவாலாக விடுக்கப்படும் என்கிறார்கள். மேலும், கைகளில் ரத்தத்தால் ப்ளூவேல் எனப்படும் திமிங்கலத்தின் படத்தை வரைந்து கொள்வது உள்ளிட்ட சவால்களும் இந்த விளையாட்டில் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

எளிதான சவால்களால் ஈர்க்கப்படும் இளைஞர்கள், பின்னாட்களில் ப்ளூவேல் விளையாட்டுக்கு அடிமையாகும் நிலைக்கு தள்ளப்படுவதாகக் கூறுகிறார்கள் மனநல மருத்துவர்கள். நிஜ உலகத்துடனான தொடர்பை இழந்து, விர்ச்சுவல் எனப்படும் மாய உலகத்துக்குள் பங்கேற்பாளர்களை அழைத்துச் சென்று தற்கொலை செய்யத் தூண்டுவதுதான் இந்த விளையாட்டின் குரூர நோக்கம் என்கிறார்கள்.

இந்த விளையாட்டை வடிவமைத்ததாகக் கூறப்படும் ரஷ்யாவின் பிலிப் புடேய்கின் (Philipp Budeikin) மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டது. உளவியல் மாணவரான பிலிப், சமுதாயத்தில் இருக்கும் தேவையில்லாத மனிதர்களை நீக்கி சுத்தம் செய்யவே ப்ளூவேல் ஆன்லைன் விளையாட்டை வடிவமைத்ததாகக் வாக்குமூலம் அளித்தார். 16 பள்ளிக்குழந்தைகளைக் கொன்றதாக 21 வயதான பிலிப் கடந்த மே மாதத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

ஆன்லைனில் மிகப்பெரிய அச்சுறுத்தல்:

உலக அளவில் ப்ளூவேல் விளையாட்டுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களும், பள்ளி மாணவர்களும் இலக்காகி வருகின்றனர். குறிப்பாக, அர்ஜெண்டினா, பிரேசில், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், சிலி, இத்தாலி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் ப்ளூவேல் விளையாட்டின் தாக்கம் அதிகம் இருப்பதாகக் கணிக்கப்படுகிறது. தங்கள் குழந்தைகள் ப்ளூவேல் விளையாட்டுக்கு அடிமையாகி விடுவதாக மனநல மருத்துவமனைகளை பெற்றோர்கள் நாடுவது இந்த நாடுகளில் அதிகரித்து வருகிறது. சிலர் மருத்துவர்கள் உதவியுடன் இந்த விளையாட்டு அடிமைகளைக் காப்பாற்றி விடுகின்றனர். அதையும் மீறி சிலர் உயிரை மாய்த்துக் கொண்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன. 

அறிகுறிகள் என்ன?:

ப்ளூவேல் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகும் பள்ளி சிறார்கள் மற்றும் இளைஞர்களை அடையாளம் காண்பது எளிது என்கிறார்கள் மருத்துவர்கள். தங்கள் கேட்கும் அல்லது பார்க்கும் அனைத்துமே உண்மைதான் என்று நம்புவதுதான் முதல் அறிகுறி என்று கூறப்படுகிறது. அதுதவிர, ஆன்லைனில் அதிக நேரம் செலவிடுவது, விர்ச்சுவல் உலகிலிருந்து வெளிவர மறுப்பது, செல்போனே தஞ்சம் என இருப்பது என்று பல அறிகுறிகளைக் கூறுகிறார்கள். பொதுவாகவே ஆன்லைனில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களைக் கண்காணிக்க வேண்டும் என்றும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவதும் இந்த அடிமைத் தளையிலிருந்து அவர்களை மீட்டெடுக்க உதவும் என்கிறார்கள். நிஜ உலகில் ஈடுபாடு குறைந்து, விர்ச்சுவல் உலகில் நுழையும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களே ப்ளூவேல் போன்ற அபாயகரமான விளையாட்டுகளுக்கு அதிகம் இலக்காகிறார்கள்.   
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close