[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு
  • BREAKING-NEWS நவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

பாகிஸ்தானின் அரசியல் ஆளுமை நவாஸ் ஷெரீப்பின் அரசியல் பயணம்

pakistan-s-political-personality-nawaz-sharif-s-political-journey

கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் அரசியலில் முக்கிய இடத்தைப் ‌பிடித்திருப்பவர் நவாஸ் ஷெரீப். தனது அரசியல் பயணத்தில் அவர் மூன்று முறை பிரதமரானாலும் ஒருமுறை கூட முழுமையாக ஆட்சியை நிறைவு செய்யாதவர் நவாஸ் ஷெரீப்.

அரசியலில் மிகப்பெரிய ஏற்றம், ஓடி ஒளியும் அளவுக்கு இறக்கம், எதிர்பாராத துரோகம், மோதல், சமாதானம் என பலவற்றையும் பார்த்தவர் நவாஸ் ஷெரீப். ஒவ்வொருமுறை பதவிக்கு வரும்போதும் ஏதாவது ஒரு காரணத்தால் முழுமையாக ஆட்சியை நிறைவு செய்ய முடியாமல் போகும் பரிதாபத்துக்கு உரியவர். அதே நேரத்தில், சமகால பாகிஸ்தான் அரசியலில் மிகவும் அறியப்பட்ட, அனுபவம் வாய்ந்த ஆளுமை அவர்.

நவாஸ் ஷெரீபின் குடும்பம் மிகப் பெரியது. அதிகப் பணம் படைத்ததும்கூட. அரசியலில் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கிய பிறகு, செல்வாக்கும், பணமும் பல மடங்கு அதிகரித்தது. பெரும்பாலான அரசியல்வாதிகளைப்போல பொருளாதாரமும், சட்டமும் படித்தவர் நவாஸ் ஷெரீப். 1980-களில் ராணுவ ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது, பஞ்சாப் மாநிலத்தின் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் அந்த மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

ராணுவ ஆட்சியின்போது, மக்களின் செல்வாக்கைப் பெற்றதால், தேர்தல் வந்தபோதும் மக்கள் அவரையே தேர்வு செய்தார்கள். பத்தே ஆண்டுகளில் மிக வேகமாக தேசிய அரசியலில் செல்வாக்குப் பெற்ற நவாஸ் ஷெரீப், 1990-ஆம் ஆண்டு ஒரு பிரமாண்டமான கூட்டணியை அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அவரது அணிக்குப் பிரமாண்டமான வெற்றி கிடைத்தது. பிரதமராகவும் பொறுப்பேற்றார். ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் குற்றம்சாட்டி எதிர்க்கட்சிகள், அவரைப் பதவியில் இருந்து நீக்குமாறு முறையிட்டன. இதை ஏற்றுக்கொண்ட அப்போதைய அதிபர் குலாம், 1993-ஆம் ஆண்டு நவாஸ் ஷெரீபை பதவியில் இருந்து அகற்றினார். இதன் பிறகு ராணுவம் தலையிட்டு ஆட்சியைக் கைப்பற்றியது.

1997-ஆம் ஆண்டு இரண்டாவது முறை அவர் பதவிக்கு வந்தபோதும், ராணுவமும் நீதிமன்றமும் அவரை விட்டுவைக்கவில்லை. நவாஸால் ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட பர்வேஸ் முஷாரப், திடீரென எதிரியாக மாறினார். இந்தியப் பிரதமர் வாஜ்பாயுடன் பேச்சு நடத்திவிட்டு வந்த நவாஸ் ஷெரீபுக்கு தெரியாமலேயே கார்கில் போர் தொடங்கப்பட்டது. பின்னர் நவாஸை ஆட்சியில் இருந்து அகற்றிய முஷாரப், தாமே நாட்டின் தலைவர் என அறிவித்துக் கொண்டார். இதன் பிறகு நாட்டைவிட்டு வெளியேறி 8 ஆண்டுகளுக்கும் மேலாக மேலாக சவுதி அரேபியாவில் வசித்து வந்த நவாஸ் ஷெரீப், 2007-ஆம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பி தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் பெனாசிர் புட்டோவின் படுகொலையால், அவரது கட்சிக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை.

2013-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நவாஸின் கட்சி, பெரும்பான்மை கிடைத்து ஆட்சியைக் கைப்பற்றியது. நவாஸ் மீண்டும் பிரதமரானார். இந்த முறையும் தேர்தல் முறைகேடு நடைபெற்றதாக இம்ரான் கான் கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்கள். அதில் தப்பித்துவந்த நவாஸுக்கு, பனாமா ஆவணங்கள் வெளியான விவகாரம் மிகப்பெரிய சிக்கலை உருவாக்கியது. நவாஸ் ஷெரீபின் தம்பி, மகள் உள்ளிட்டோர் சட்ட விரோதமாக பிரிட்டனில் சொத்துகளைக் குவித்திருப்பதாக அந்த ஆவணங்களில் தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய கூட்டுக்குழுவும், குற்றச்சாட்டுகளை உறுதி செய்தது. பாகிஸ்தானை அணுகுண்டு நாடாக்கியதில் முக்கியப் பங்காற்றிய நவாஸ் ஷெரீபின் அரசியல் வாழ்க்கையை, பனாமா ஆவண விவகாரம் வெடித்துச் சிதறடித்திருக்கிறது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close