[X] Close
JUST IN
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 15வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS திருவாரூர், நாகை, புதுச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது
 • BREAKING-NEWS அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
 • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
 • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
 • BREAKING-NEWS திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் பெண் ஒருவர் பலி
 • BREAKING-NEWS ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை- எர்ணாகுளம் நீதிமன்றம்
 • BREAKING-NEWS ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்
 • BREAKING-NEWS விஏஓ தேர்விற்கு கன்னியாகுமரி மக்கள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS ‘ஐஎன்எஸ் கல்வாரி’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
சிறப்புக் கட்டுரைகள் 26 Jul, 2017 09:28 PM

பீகார் ஆட்சி கவிழுமா..? நிலைக்குமா..? அடுத்து என்ன?

bihar-s-rule-will-fall-stand-forever-what-next

பீகார் மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து நிதிஷ்குமார் ராஜினாமா செய்துள்ளதால் அங்கு ஆட்சி நிலைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பீகார் சட்டமன்றத்தின் மொத்த எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 243. இதில் கட்சிகளின் பலம்:
ஐக்கிய ஜனதா தளம் (நிதிஷ் குமார்) - 71
ராஷ்டிரிய ஜனதா தளம் (லாலு பிரசாத்) - 80
காங்கிரஸ் - 27
பாஜக - 53

இதில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த நிதிஷ்குமார் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் பீகார் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். துணை முதலமைச்சராக உள்ள லாலுவின் மகன் தேஜஸ்வி மீதான ஊழல் புகார் பிரச்னைதான் நிதிஷ்குமார் ராஜினாமாவுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அடுத்து பீகாரில் என்ன நடக்கும்?

வாய்ப்பு 1:

லாலுவின் மகன் தேஜஸ்வி மீதான ஊழல் பிரச்னையால்தான் நிதிஷ் குமார் பதவி விலகியிருக்கிறார். இது லாலுபிரசாத்திற்கும் நிதிஷ்குமாருக்குமே விரிசல் அதிகமாகியுள்ளதை காட்டுகிறது. முதலமைச்சர் இல்லாத இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒருவேளை லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சி அமைக்க முற்பட்டால் அதற்கு நிச்சயமாக ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு கொடுக்காது. ஆனால் ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்கலாம். அந்த நிலை ஏற்படும் பட்சத்தில் கூட்டணி எம்எல்ஏ-க்கள் பலம் 107 (லாலு-80, காங்-27) ஆக இருக்கும். ஆட்சி அமைக்க தேவையான 122 எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கையை விட இதுகுறைவு தான். இதனால் இந்த கூட்டணியால் எந்த பலனும் இருக்காது.

வாய்ப்பு 2:

நிதிஷ்குமாருக்கு ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடன்தான் பிரச்னை. இதனால் ராஷ்டிரிய ஜனதா தளத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, ஐக்கிய ஜனதா தளமும், காங்கிரசும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்குமா? குடியரசுத் தலைவர் தேர்தலில் நிதிஷ், காங்கிரஸ் நிறுத்திய வேட்பாளருக்கு வாக்களிக்காமல் பாஜகவின் ராம்நாத் கோவிந்த்துக்கு வாக்களித்தில் இருந்தே அவர் பாஜக பக்கம் சாய்வதாக பேச்சு எழுந்தது. இதனால் காங்கிரஸ் நிதிஷுடன் கூட்டணி வைக்குமா என்பது கேள்விக்குறிதான். அப்படியே ஒரு வேளை இரு கட்சிகளும் இணைந்தாலும் பெரும்பான்மை பலம் இருக்காது (நிதிஷ்-71, காங்- 27 மொத்தம் - 98). 

வாய்ப்பு 3:

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்திற்கு நிதிஷ்குமார் கொடுத்த ஆதரவுக்கு ஈடாக பாஜக ஐக்கிய ஜனதா தளத்திற்கு ஆதரவு தரும் பட்சத்தில் அக்கூட்டணி எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை 124 ஆக இருக்கும் (நிதிஷ்-71, பாஜக-53 மொத்தம் -124). இது ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கையைவிட அதிகம். இதனால் பீகாரில் மீண்டும் பாஜக நிதிஷ் கூட்டணி உருவாகலாம். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close