[X] Close
JUST IN
 • BREAKING-NEWS திண்டுக்கல் மாவட்டத்தில் ஜிகா வைரஸ் இருப்பதை அரசு கண்டுபிடித்துள்ளது: அமைச்சர் விஜயாஸ்கர்
 • BREAKING-NEWS கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்: தமிமுன் அன்சாரி
 • BREAKING-NEWS தமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
 • BREAKING-NEWS அப்போலோவில் ஜெயலலிதா இருந்தபோது நான் அவரை பார்க்கவில்லை: வெற்றிவேல்
 • BREAKING-NEWS சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சை பிரிவில் மின்கசிவால் தீ விபத்து
 • BREAKING-NEWS விமானப் பயணத்திற்கு இனி அடையாள அட்டை தேவையில்லை..!
 • BREAKING-NEWS திருவள்ளூர் ஆட்சியர், தமிழக வருவாய் துறை செயலாளருக்கு இந்த மாத சம்பளம் வழங்க தடை
 • BREAKING-NEWS குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலம் என்ற இலக்கை நோக்கி அரசு செல்கிறது: நிலோபர் கபில்
 • BREAKING-NEWS கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகள் செப்.28 க்கு பிறகு அமலுக்கு வரும் என ஐசிசி அறிவிப்பு
 • BREAKING-NEWS பா.ஜ.க.வுடன் கைகோர்க்கவும் தயார்: கமல்ஹாசன்
 • BREAKING-NEWS தீபாவளிக்கு வெளியூர் செல்ல அக்டோபர் 15 முதல் 17 வரை சிறப்புப் பேருந்துகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS அக்டோபர் 3 ஆம் தேதி முதல் டெல்லி மெட்ரோ ரயில் கட்டணம் ரூ. 10 உயர்த்தப்படுகிறது
 • BREAKING-NEWS மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ஜெனிபாவுக்கு கத்திக்குத்து
 • BREAKING-NEWS மும்பையில் மகனுடன் தூய்மைப்பணியில் ஈடுபட்ட சச்சின் டெண்டுல்கருக்கு பிரதமர் மோடி பாராட்டு
சிறப்புக் கட்டுரைகள் 26 Jul, 2017 05:55 PM

இந்திய கிரிக்கெட் வீரர்களும், விநோத டெஸ்ட் சாதனைகளும்

indian-cricketers-and-bizarre-test-achievements

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் செய்துள்ள சாதனைகள் சில உங்கள் பார்வைக்கு. 

சச்சின் டெண்டுல்கர்


அதிக சதமடித்தவர் மற்றும் அதிக போட்டிகளில் பங்கேற்றவர் என்ற சாதனைகள் மட்டும் சச்சின் வசமில்லை. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்தவர் என்ற சாதனையும் மாஸ்டர் பிளாஸ்டர் என்றழைக்கப்படும் சச்சின் வசமே இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின், 68 அரைசதங்களைப் பதிவு செய்துள்ளார். இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் சந்தர்பால் 66 அரைசதங்களுடன் 2ஆவது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் 63 அரைசதங்களுடன் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர். 

விராத் கோலி

கேப்டனாக பொறுப்பேற்ற பின்னர் விளையாடிய முதல் மூன்று இன்னிங்ஸ்களிலும் சதமடித்த ஒரே கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி. ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற கோலி, சிட்னி டெஸ்டில் சதமடித்தார். இதைத் தொடர்ந்து அடிலெய்டில் நடைபெற்ற டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்து அவர் அசத்தினார். 

சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை சதமடித்த ஜோடி என்ற சாதனையை சச்சின்-டிராவிட் ஜோடி படைத்துள்ளது. இந்த ஜோடி டெஸ்ட் போட்டிகளில் 20 முறை சதமடித்துள்ளது. மேலும், 29 முறை அரைசதம் அடித்துள்ளனர். 

ஷிகர் தவான்: 

அறிமுக போட்டியில் குறைந்த பந்துகளில் சதமடித்தவர் என்ற சாதனைக்கு ஷிகர் தவான் சொந்தக்காரர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொஹாலியில் 2013ம் ஆண்டில் நடைபெற்ற போட்டியில் அறிமுகமான தவான், அந்த போட்டியில் 85 பந்துகளில் சதமடித்தார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் டிவைன் ஸ்மித், தனது அறிமுக போட்டியில் 93 பந்துகளில் சதமடித்திருந்த சாதனையை அவர் முறியடித்தார். 

ராகுல் டிராவிட்

டெஸ்ட் போட்டிகளில் அதிகமுறை ஸ்டம்புகள் சிதற (பவுல்டு) ஆட்டமிழந்தவர் என்ற வேதனையான சாதனையை டிராவிட், தன்வசம் வைத்துள்ளார். இந்திய அணியின் சுவர் என்று புகழப்பட்ட டிராவிட், டெஸ்ட் போட்டிகளில் 54 முறை பவுல்டாகி ஆட்டமிழந்துள்ளார்.

அனில் கும்ப்ளே

கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சாளரே கேட்ச் பிடித்து பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கச் செய்யும் முறை காட் அண்ட் பவுல்டு (Caught & Bowled) என்று அழைக்கப்படுகிறது. இந்த முறையில் அதிகமுறை விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனையை அனில் கும்ப்ளே படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 132 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள கும்ப்ளே, 35 வீரர்களை காட் அண்ட் பவுல்டு முறையில் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். 
 
ஜவஹல் ஸ்ரீநாத்

ஒரு அணி தோல்வியடைந்த போட்டியில் சிறப்பான பந்துவீச்சைப் பதிவு செய்த வீரர்கள் பட்டியலில் ஸ்ரீநாத் முதலிடம் வகிக்கிறார். கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் 1999 பிப்ரவரியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான் டெஸ்ட் போட்டியில் ஸ்ரீநாத் 132 ரன்கள் விட்டுக்கொடுத்து 13 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

நரேந்திர ஹிர்வானி

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக லங்கெஸ்ட் ஸ்பெல் (Longest Spell) எனப்படும் தொடர்ச்சியாக அதிக ஓவர்கள் பந்துவீசியவர் என்ற சாதனையை இந்திய சுழற்பந்துவீச்சாளர் நரேந்திர ஹிர்வானி படைத்தார். லண்டன் ஓவல் மைதானத்தில் 1990ல் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 4ஆவது இன்னிங்ஸில் அவர், 59 ஓவர்கள் தொடர்ச்சியாக பந்துவீசினார். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close