[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

‌மலைக்க வைக்கும் மல்லையாவின் சொத்துப்பட்டியல்... ஸ்காட்லாந்தில் மாளிகைகள், லண்டனில் பண்ணை வீடு,, ஃப்ரான்ஸில் தனியாக ஒரு தீவு

vijay-mallya-assets

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன்கள் இருப்பதாக அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அவர் கடன் வாங்கும் போது பிணையாக வைத்த சொத்துக்களை விற்று அதன் மூலம் கடன் தொகையை நேர் செய்யும் நடவடிக்கையில் வங்கிகள் தற்போது ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் மல்லையாவுக்கு உள்ள சொத்து விவரங்களை இப்போது பார்க்கலாம்

2011ம் ஆண்டு வாக்கில் மல்லையாவின் சொத்து மதிப்பு ‌சுமார் 6 ஆயிரத்து 600 கோடி ரூபாய் என்றும் 2013ல் இது 4 ஆயிரத்து 800 ரூபாயாக குறைந்ததாகவும், உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிடும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை தகவல் தெரிவிக்கிறது. மல்லையாவிடம் ‌உள்ள சொத்துக்களில் மிகவும் மதிப்பு வாய்ந்தது பெங்களூர் ub city ல் உள்ள கிங்ஃபிஷர் டவர்ஸ் அலுவலக கட்டடம். இக்கட்டடத்தின் உரிமையில் 55% பங்குகள் மல்லையா வசம் உள்ளது. 34 அடுக்குகளை கொண்ட இது பெங்களூரின் வெள்ளை மாளிகை எனப்படுகிறது. இது தவிர ஃப்ரான்ஸின் ‌சசாலிடோ என்ற கடலோர நகரத்தில் மாளிகை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பு, தென்னாப்ரிக்காவிலும் ஸ்காட்லாந்திலும் மாளிகைகள் லண்டனி‌ல் பண்ணை வீடு என மல்லையா சொத்துப்பட்டியல் வளர்ந்துகொண்டே செல்கிறது. ஃப்ரான்ஸ் நாட்டின் செய்ன்ட் மர்குரிட் என்ற ஒரு தீவையே மல்லையா தனக்கு சொந்தமா‌க்கியுள்ளார்.

இது தவிர மான்டிகார்லோ தீவிலும் மல்லையாவுக்கு இடம் உள்ளது. இந்தியாவில் சுற்றுலா சொர்க்கமான கோவாவில் ஓ‌ய்வெடுப்பதற்கென்றே 90 கோடி ரூபாயில் கிங்ஃபிஷர் வில்லா, மும்பையில் கிங்ஃபிஷர் ஹவுஸ் என்ற பெயரில் அலுவலக கட்டடம் உள்ளது. இமாலய மலையருகில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களையும் மல்லையா வாங்கிக் குவித்திருப்பதாக தகவல் உள்ளது. மல்லையாவுக்கு வாகனங்கள் என்றால் கொள்ளை பிரியம். ஜெட் விமானங்கள், பிரமாண்டமான சொகுசு படகுகள், ஹெலிகாப்டர்கள், விலை மதிப்பற்ற பழங்கால கார்கள் என மல்லையாவின் வாகன வரிசை நீண்டுகொண்டே செல்கிறது. மல்லையா 5 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய சொத்துக்களை தான் பெற்ற கடனுக்கு பிணையாக வைத்துள்ளார். இந்நிலையில் மல்லையாவின் வெளிநாட்டு சொத்து விவரங்களையும் மத்திய அமலாக்கத் துறை தோண்டித் துருவத் தொடங்கியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close