[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து
 • BREAKING-NEWS ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து 13,000 கனஅடியில் இருந்து 12,000 கனஅடியாக குறைந்தது #HogenakkalFalls
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,667 கன அடியில் இருந்து 8,554 கன அடியாக குறைந்துள்ளது
 • BREAKING-NEWS தமிழகத்தில் 15 நாட்களில் டெங்கு இல்லாத நிலை உருவாக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS புதுச்சேரியில் நகர பேருந்துகளில் ஆரம்பநிலை கட்டணம் ரூ.5இல் இருந்து ரூ.7ஆக உயர்த்தி மாநில அரசு அறிவிப்பு வெளியீடு
 • BREAKING-NEWS கடந்த ஓராண்டில் எல்லை பாதுகாப்புப் படையினரின் திறமையை நாடே அறிந்துள்ளது: ராஜ்நாத் சிங்
 • BREAKING-NEWS ஆட்சியை கலைத்து விட்டு முதல்வர் ஆவதே ஸ்டாலினின் கொள்கையாக உள்ளது: அமைச்சர் வேலுமணி
 • BREAKING-NEWS இன்று தமிழகத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழந்தனர்
 • BREAKING-NEWS ஐஃபோன் 7 வாங்க ரூ.7,777 முதல் தவணை: ஏர்டெல் ஆஃபர்!
 • BREAKING-NEWS வரும் 25 ஆம் தேதிக்கு பிறகுதான் வடகிழக்கு பருவமழை தொடங்கும்:வானிலை மையம்
 • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைகள் டெங்கு உயிரிழப்பு பற்றிய சான்றை தரக்கூடாது என மிரட்டல் விடுக்கப்படுகிறது: ஸ்டாலின்
 • BREAKING-NEWS இன்று தமிழகத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்தனர்
 • BREAKING-NEWS தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மக்களுக்கு வாழ்த்து
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 23,327 கன அடியில் இருந்து 15,667 கன அடியாக குறைவு
சிறப்புக் கட்டுரைகள் 17 Jul, 2017 07:04 PM

உயிருக்கு உத்தரவாதமில்லாத அபாயகரமான சாலைகள்

most-dangerous-roads-in-the-world

உலகின் அபாயகரமான சாலைகளாக அறியப்படும் டாப் 5 சாலைகள் இவை:

1.ஓல்டு யங்காஸ் சாலை – பொலிவியா (OLD YUNGAS ROAD- BOLIVIA):

மரணச் சாலை என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் ஓல்டு யங்காஸ் சாலையை உலகின் அபாயகரமான சாலை என்று உலக வளர்ச்சி வங்கி, கடந்த 1995ல் அறிவித்தது. இந்த சாலையில் பயணிக்கும் ஆயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். பொலிவியாவின் லா பாஸ் நகரில் இருந்து கோரோய்கோ நகரை இணைக்கும் 56 கி.மீ. சாலையான இது, செங்குத்தான மலைப் பகுதியில் அமைந்துள்ளது. 

2. அட்லாண்டிக் சாலை – நார்வே (ATLANTIC ROAD- NORWAY):


நார்வேயில் உள்ள அட்லாண்டிக் சாலையானது, முதலில் ரயில்வே பாதை அமைப்பதற்காகத் திட்டமிடப்பட்டது. பின்னர் அது சாலையாக உருவெடுத்தது. ஐரோப்பிய கண்டத்தின் அபாயகரமான சாலையாக இது அறியப்படுகிறது. வளைவுகள் நிறைந்த இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்கள், காற்றில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றன. அட்லாண்டிக் கடலோரத்தில் போடப்பட்டுள்ள இந்த சாலையில் காற்று பலமாக வீசும்போது பயணிக்க வேண்டாம் என்று நார்வே அரசு அறிவுறுத்துகிறது. இல்லையேல் காற்றில் உங்கள் வாகனம் தூக்கி எறியப்படலாம் என்றும் எச்சரிக்கப்படுகிறது. நார்வேயின் முக்கிய நகரங்களான எய்ட் (Eide) மற்றும் ஏவிரோய் (Averoy) ஆகியவற்றை இணைக்கும் இந்த சாலை 8.3 கிலோமீட்டர் நீளம் கொண்டது. 

3. ஜேம்ஸ் டால்டன் நெடுஞ்சாலை – அலாஸ்கா (JAMES DALTON HIGHWAY- ALASKA):

  
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள ட்ரான்ஸ் - அலாஸ்கா சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு செல்வதற்காகக் போடப்பட்டது. 666 கிலோமீட்டர் நீளம் கொண்டது. உலகின் தனிமைப்படுத்தப்பட்ட சாலைகளில் ஒன்றாக அறியப்படும் இந்தச் சாலையில் மொத்தமே 3 நகரங்கள் மட்டுமே இருக்கின்றன. குளிர்காலங்களில் பனிபடர்ந்து காணப்படும் இந்த சாலையில் எந்தவொரு வாகன ஓட்டியும் தனியாக பயணிப்பதில்லை. 

4.ட்ரான்ஸ் செர்பியன் நெடுஞ்சாலை – ரஷ்யா (Trans-Serbian Highway - Russia):


உலகின் நீளமான சாலைகளில் ஒன்றாக ட்ரான்ஸ் செர்பியன் நெடுஞ்சாலை கருதப்படுகிறது. சுமார் 10,094 கி.மீ.க்கும் அதிகமான நீளம் கொண்ட இந்தச் சாலை ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரிலிருந்து விளாவ்டியோஸ்டாக் நகர் வரை நீள்கிறது. மலைகள், அடர்ந்த வனப்பகுதிகள், பாலைவனங்கள் என நீளும் இந்தச் சாலை உலகின் அபாயகரமான சாலைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. மழைக் காலங்கள் மற்றும் வெயில் காலங்களில் இந்த சாலையில் வாகனப் போக்குவரத்து குறைவாகவே காணப்படுகிறது. 

5.பான் அமெரிக்கன் நெடுஞ்சாலை: அலாஸ்கா – அர்ஜெண்டினா (PAN-AMERICAN HIGHWAY- ALASKA TO ARGENTINA):


உலகின் மிகநீளமான நெடுஞ்சாலையாகக் கருதப்படும் இந்த சாலை 48,000 கி.மீ. நீளம்கொண்டது. அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் தொடங்கி கனடா, மெக்சிகோ, கவுதமாலா, அர்ஜெண்டினா என மொத்தம் 14 நாடுகள் வழியாக இந்த பாதை பயணிக்கிறது. அடர்ந்த காடுகள், பனிசூழ்ந்த மலைச்சிகரங்கள் என இந்த பாதை அபாயம் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. இந்த சாலை உலகின் பெரும்பாலான சீதோஷ்ண நிலையை கடந்து செல்வதாகக் கணிக்கப்படுகிறது. 

உலகின் அபாயகரமான சாலைகள் பட்டியலில் இன்னும் எத்தனையோ சாலைகள் இருந்தாலும் டாப் 5 சாலைகள் மட்டுமே இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close