[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

காடுகளின் அதிசயம் அமேசான்..

amazon-rainforest

தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள ஒரு பெரிய மழைக்காடு அமேசான். அமேசானியா அல்லது அமேசான் படுகை என்றழைக்கப்படும் இதன் பரப்பளவு ஏழு மில்லியன் சதுர கிலோமீட்டர்கள். இதில் காடு மட்டும் 5.5 மில்லியன் சதுர கி.மீ.

இந்தக்காடு பிரேசில், கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்வெடார், கயானா, பொலிவியா, சுரிநாம், பிரெஞ்சு, ஆகிய ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது.

உலகின் மொத்த ஆக்சிஜன் தயாரிப்பில் 20 சதவிகிதம் அமேசான் மழைக்காடுகளில் இருக்கும் மரங்களின் மூலமாக தான் வெளிவருகிறது.

முன்னொரு காலத்தில், இப்போது ஓடிக் கொண்டிருக்கும் திசைக்கு நேர் மாறாக கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி ஓடிக் கொண்டிருந்ததாம் அமேசான் நதி. உலகில் உள்ள மழைக்காடுகளில் பாதி அளவுக்கு மேல் அமேசான் மழைக் காடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசானிய வண்ணத்துப்பூச்சிகள் ஆமைகளின் கண்ணீரை குடிக்கின்ற பழக்கம் கொண்டிருக்கின்றன. பிரேசிலில் அமேசான் நதிக்கு கீழே ஒரு நதி நான்கு கிலோமீட்டர் தூரம் ஓடுகிறது. இதில் ஆச்சரியம் என்னவெனில், இது நூறுமடங்கு அகலமானது.

கடந்த 2008-ம் ஆண்டு நார்வே ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை, அமேசான் மழைக் காடுகளை பாதுகாக்க கொடுத்தது. உலகின் மற்ற நதிகளை விட ஐந்து மடங்கு அதிகமான அளவு நீரை வெளியேற்றுகிறது அமேசான் நதி.

பெருவில் இருக்கும் இக்விடோஸ் தான் உலகிலேயே பெரிய நகரம். சாலைகளால் இந்த நகரை தொடர்பு கொள்வது இயலாத காரியம். இது அடர்ந்த அமேசான் மழைக் காட்டுக்குள் இருக்கிறது. இங்கு நான்கு லட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். அமேசான் நதிக்கு இடையே ஒரு பாலம் கூட இல்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close