[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்குடி மீனாட்சிபுரத்தில் பழைய மரப்பொருட்கள் விற்பனை கடையில் தீ விபத்து
  • BREAKING-NEWS சிறுமிகளை வன்கொடுமை செய்தால் தூக்கு- குடியரசுத்தலைவர் ஒப்புதல்
  • BREAKING-NEWS கிருஷ்ணகிரி சாந்தி நகரில் வீட்டில் ஏசி வெடித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியை அஞ்சலாமேரி உயிரிழப்பு
  • BREAKING-NEWS விருதுநகர்: சாத்தூர் அருகே சல்வார்பட்டியில் குடும்பப் பிரச்னையால் 2 குழந்தைகள் கழுத்தறுத்துக்கொலை
  • BREAKING-NEWS வேலைக்குச் செல்லும் பெண்கள் பத்திரமாக வீடு திரும்ப முடியாத நிலை உள்ளது - கனிமொழி
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் தமிழக உரிமை நிலைநாட்டப்படும் - அமைச்சர் உதயகுமார்
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்துக்கான மத்திய சுற்றுச் சூழல்துறை அனுமதியை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் மனு தாக்கல்

வீட்டிற்குப் பக்கத்தில் கடலைக் கொண்டு வந்தார்....பிரமிக்க வைக்கும் பில்கேட்ஸ்சின் வசிப்பிடம்

facts-about-bill-gates-house

உலகின் பணக்கார மனிதரான மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் வசித்துவரும் வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் தண்ணீருக்கு அடியில் இருந்தும் இசையைக் கேட்கலாம்... இப்படி எண்ணற்ற அதிசயங்களை உடையது அவரின் ஆடம்பர வீடு.

•பில்கேட்ஸ் வசித்துவரும் வாஷிங்டன் வீட்டின் மதிப்பு 2014ம் ஆண்டின்படி  123.54 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறப்படுகிறது. அவர் ஆண்டுதோறும் பத்து லட்சம் அமெரிக்க டாலர்களை சொத்து வரியாகச் செலுத்துகிறாராம்.

•அவரது வீட்டில் மாட்டப்பட்டிருக்கும் ஓவியங்களை ஒரு ஸ்விட்ச் மூலம் மாற்றும் வகையிலான வசதி செய்யப்பட்டுள்ளது.

•3,900 சதுர அடி கொண்ட அவரது வீட்டில் 60 அடி நீளத்தில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நீச்சல் குளத்தில் தண்ணீருக்கு அடியிலும் இசையை ரசிக்கலாம். 

•புத்தகங்களின் காதலரான பில்கேட்ஸ், நூல்களுக்காக 2,100 சதுர அடியிலான பிரமாண்ட நூலகத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். லியார்னாடோ டாவின்சி 16ம் நூற்றாண்டில் தனது கைப்பட எழுதிய கோடெக்ஸ் லீசெஸ்டர் எனும் நூல்களின் தொகுப்பையும் அவர் வைத்துள்ளார். 1994ம் ஆண்டு நடந்த ஏலம் ஒன்றில் 30.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் விலை கொடுத்து இந்த நூல்களை பில்கேட்ஸ் வாங்கினார். 

•20 பேர் வரை அமர்ந்து பார்க்கும் வகையிலான திரையரங்கு ஒன்றும் பில்கேட்ஸ் வீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. உயர்தர இருக்கைகளுடன் கூடிய அந்த திரையரங்கில் பாப்கார்ன் இயந்திரமும் இருக்கிறது. 

•பில்கேட்ஸின் வீட்டுக்கு அருகில் செயற்கையாக ஒரு கடற்கரையே உருவாக்கப்பட்டுள்ளது. ஓய்வு நேரங்களில் இந்த பகுதியில் உலவுவதை பில்கேட்ஸ் வழக்கமாகக் கொண்டுள்ளார். செயிண்ட்.லூசியா கடற்கரையிலிருந்து பல ட்ரக்குகளில் கடற்கரை மணலை ஆண்டு தோறும் இங்கு வந்து கொட்டுகிறார்கள்.

•உலகப் புகழ்பெற்ற பல ஓவியங்கள் பில்கேட்ஸ் வீட்டின் வரவேற்பு அறையை அலங்கரிக்கின்றன. புகழ்பெற்ற ஓவியர் வின்ஸ்லோ ஹோமரின் ’லாஸ்ட் ஆன் தி பேங்க்ஸ்’ (Lost on the Grand Banks) என்ற ஓவியமும், ஜார்ஜ் பெல்லோஸின் போலோ க்ரவுட் (Polo Crowd) ஓவியமும் அவரது கலெக்ஷனில் இருக்கிறது. இந்த ஓவியங்களின் மொத்த மதிப்பு 74 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். 

•போர்ஃப்ஸ் பத்திரிகையின் 2017ம் ஆண்டின் மதிப்பீட்டின் படி பில்கேட்ஸின் சொத்து மதிப்பு 86 பில்லியன் அமெரிக்க டாலர்கள். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close