[X] Close
JUST IN
 • BREAKING-NEWS இலங்கைக்கு படகில் கடத்தப்படவிருந்த ரூ.75 லட்சம் கஞ்சா ராமேஸ்வரம் அருகே பறிமுதல்
 • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர்: பாரமுல்லா பகுதியில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
 • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் தொடரில் வெண்கலம் வென்றது இந்திய அணி
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அலுவலராக பிரவீன்நாயர் பொறுப்பேற்றுக்கொண்டார்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், ஆலோசனை
 • BREAKING-NEWS நாகையில் 2ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவ மக்களுடன் அமைச்சர் ஓ.எஸ் மணியன் பேச்சு
 • BREAKING-NEWS தமிழும் தமிழ் நாடும் என் மனதுக்கு நெருக்கமான ஒன்று - வெங்கய்ய நாயுடு
 • BREAKING-NEWS தோல்வி பயம் காரணமாகவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய கோருகிறது பாஜக- டிடிவி
 • BREAKING-NEWS நாகை நம்பியார் நகர் சமுதாய கூடத்தில் 2 ஆவது நாளாக மீனவர்கள் காத்திருப்பு போராட்டம்
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,602 கனஅடியில் இருந்து 2,815 கனஅடியாக குறைந்தது
 • BREAKING-NEWS குற்றாலத்தில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி
 • BREAKING-NEWS பிள்ளையார்குப்பத்தில் ஆய்வுக்கு சென்ற ஆளுநர் கிரண்பேடியை முற்றுகையிட மக்கள் முயற்சி
 • BREAKING-NEWS புயல் சின்னம் காரணமாக நாகை மாவட்ட மீனவர்கள் 14 ஆவது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை
 • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து நீர்திறப்பு விநாடிக்கு 2,860 கன அடியில் இருந்து 3,580 கன அடியாக அதிகரிப்பு
சிறப்புக் கட்டுரைகள் 07 Jul, 2017 08:13 PM

இருளர் சமூகத்தின் இருள் அகற்ற வந்தவர்

puthiyathalaimurai-tamilan-award-2017-social-service

சேவையை வாழ்வாக கொண்டு, மனிதம் போற்றும் மகத்தான பணிகளில் ஈடுபட்டு வருபவர் பேராசிரியர் பிரபா கல்விமணி. இவருக்கு புதிய தலைமுறை, சமூக சேவைப் பிரிவில் தமிழன் விருதை வழங்கியுள்ளது.

கல்விமணி திண்டிவனத்தைச் சேர்ந்தவர். ஓய்வுபெற்ற பேராசிரியர். மனித உரிமை செயற்பாட்டாளர். தற்போது தமிழ் வழிப்பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட இருளர் சமுதாய குழந்தைகளுக்கு கல்வி அளித்து அவர்களது வாழ்வில் ஒளியேற்றி வருகிறார். இருளர் சமூகத்து மக்களால் நடத்தப்படும் இந்தப் பள்ளி வெளிப்படைத்தன்மையும், ஜனநாயகமும் நிறைந்து காணப்படுகிறது. பட்டியல் சாதி மக்களுக்கு எதிரான வன்கொடுமைச் சம்பவங்கள் குறித்து, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடுப்பதுடன் அவர்களது உரிமை காக்க தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் என்னும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் செயலாற்றி வருகிறார். ஒரு கல்வியாளராக, வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்தும், அதை நடைமுறையில் செயல்படுத்த வேண்டிய வழிகள் குறித்தும் பல கருத்தரங்குகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறார் பேராசிரியர் கல்விமணி.

பரமக்குடி துப்பாக்கிச் சூடு உட்பட பல்வேறு பொது வழக்குகளில் பங்கேற்றவர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் கிராமத்தில் 4 இருளர் இனப் பெண்கள் போலீசாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை முன்னெடுத்து சென்றவர். பல போராட்டங்களுக்குப் பிறகு, 4 இருளர் பெண்கள் போலீசாரால் வன்கொடுமைக்குள்ளான சம்பவத்திற்கு நீதி விசாரணை நடத்தப்பட்டது. 1989, வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி, வழக்குகள் பதியப்பட்டது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கு 5 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டது. அந்த வழக்கில் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், தலைமை காவலர் மற்றும் இரு காவலர்கள் ஆகியோரை இடைநீக்கம் செய்ய காரணமாய் இருந்தவர் கல்விமணி. 2000-ஆம் ஆண்டு வீரப்பன் பிடியிலிருந்த கன்னட திரைப்பட நடிகர் ராஜ்குமாரை மீட்க அமைக்கப்பட்ட மீட்பு குழுவில் ஒருவராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டவர்.

கல்வி மேம்பாடு, இருளர் இனமக்களின் நலம், மேம்பாடு சார்ந்து இதுவரை ஆறு நூல்களை எழுதியுள்ளார். பத்துக்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புகளின் விருதுகளைப் பெற்றுள்ளார் பேராசிரியர் கல்விமணி. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close