[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

அம்மா நடிகைகளுக்குள் ஓர் அடடா போட்டி!

competition-between-mother-actresses

 


தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டருக்கு எப்போதுமே முக்கியத்துவம் உண்டு. எம்.ஜி.ஆர் படங்களில் இருந்து சமீபத்தில் வெளியான ’பிச்சைக்காரன்’ வரை அம்மா சென்டிமென்ட் படங்களுக்கும் தனி மவுசுதான். சில வருடங்களுக்கு முன்பு வரை அம்மாவாக நடிக்கவென்றே தனியாக நடிகைகள் இருப்பார்கள். ’அம்மா கேரக்டரா, கூப்பிடுப்பா அந்த நடிகையை’ என்று சொல்லுமளவுக்குச் சொற்பமான அளவிலேயே இருந்தார்கள். அம்மா நடிகையாகவே அறிமுகமானவர்களில், லட்சுமி ராமகிருஷ்ணன், மீரா கிருஷ்ணன், கம்பம் மீனா, மதுரை சுஜாதா குறிப்பிடத்தக்கவர்கள். 
இது கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த லெவலுக்கு சென்று முன்னாள் ஹீரோயின்கள் அம்மாவாக களமிறங்கினர். அதாவது பிரெஷ் ஃபேஸ் வேண்டும் என்று தேடிய இயக்குனர்கள், முன்னாள் ஹீரோயின்களை அம்மாவாக நடிக்க வைக்க முடிவெடுத்தனர். அப்படி நடிக்க வைத்தால் படத்துக்கு நட்சத்திர அந்தஸ்தும் கிடைக்கும் என்று நினைத்தனர். அதன்படி, ஹீரோயினாக நடித்து பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த அல்லது தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு செட்டிலான நடிகைகளைத் தேடிப் பிடித்து படங்களில் அம்மாவாக்கினர். 

இந்த லிஸ்டில், ராதிகா, சரண்யா பொன்வண்ணன், சுகாசினி, ரேவதி, சீதா, சுகன்யா பானுப்ரியா, நதியா உட்பட பல நடிகைகள் இருக்கின்றனர். இதுபோன்ற ஸ்டார் அம்மா நடிகைகளுக்கு மற்ற அம்மா நடிகைகளை விட சம்பளமும் அதிகமாக இருப்பதால் டாப் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்கப் பெரும்போட்டி.

இதுபற்றி ’பிச்சைக்காரன்’ படத்தில் அம்மாவாக நடித்த தீபா ராமானுஜத்திடம் கேட்டபோது, ‘போட்டி இருப்பது உண்மைதான். ஹீரோ, ஹீரோயின்களுக்கு போட்டி இருப்பது போல அம்மா நடிகைக்கும் இருக்கிறது. நான் ’ரஜினி முருகன்’ படத்தில் சிவகார்த்திக்கேயனுக்கும் ‘இது நம்ம ஆளு’ -வில் நயன்தாராவுக்கும் அம்மாவாக நடித்தேன். ’பிச்சைக்காரன்’  ஹிட்டானதால் கவனிக்கப்பட்டேன். நான் நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவள். சினிமாவில் அம்மா கேரக்டர்களுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை. நடிக்கவும் அவர்களுக்கு பெரிதாக வாய்ப்பு வழங்குவதில்லை. இருந்தாலும் போட்டி அதிகமாகத்தான் இருக்கிறது’ என்றார். இவர் இப்போது முருகதாஸ் இயக்கும் ஸ்பைடர், மலையாளத்தில் பிருத்விராஜ் நடிக்கும் என பிசி.

இப்போது இதற்கு அடுத்த கட்டமாக, சமீபத்திய ஹீரோயின்களை அம்மாவாக நடிக்க வைக்கும் முயற்சியில் சில இயக்குனர்கள் களமிறங்கியுள்ளனர்.


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close