[X] Close
JUST IN
 • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யலாம்: உச்சநீதிமன்றம்
 • BREAKING-NEWS நீட் விவகாரத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் மத்திய சுகாதார அமைச்சகம் மீண்டும் கருத்துக் கேட்பு
 • BREAKING-NEWS ஓ. பன்னீர்செல்வத்துடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி ஆகியோர் சந்திப்பு
 • BREAKING-NEWS ஷக்தி, ஜூலியை கார்னர் செய்யாதீர்கள்: ரசிகர்களுக்கு ஓவியா ரிக்வெஸ்ட்..!
 • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக போதிய ஆதாரம் இருந்தால் கைது செய்யலாம்: உச்சநீதிமன்றம்
 • BREAKING-NEWS டெல்லியில் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு
 • BREAKING-NEWS அரியலூர்: தத்தனூரில் இரு கிராம மக்களிடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ் தடியடி
 • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் 23 ஆம் தேதி சிபிஐ முன் ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு உத்தரவு
 • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்
 • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து விலக்குகோரி புதுச்சேரி விமான நிலையத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம்
 • BREAKING-NEWS தமிழகத்திற்கு நீட் தேர்வு விவகாரத்தில் நிரந்தர விலக்கு மட்டுமே தேவை: முத்தரசன்
 • BREAKING-NEWS இதுதான் ஜெயலலிதாவின் வேதா நிலையம் சீக்ரெட்!
 • BREAKING-NEWS சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கில் ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
 • BREAKING-NEWS அடுத்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்துடன் திமுகவை சந்திப்பதே எங்கள் நோக்கம்: செல்லூர் ராஜூ
சிறப்புக் கட்டுரைகள் 20 Jun, 2017 06:00 PM

ராம்நாத் கோவிந்த் தேர்வு ஏன்? நச்சுன்னு நாலு காரணம்

why-was-ramnath-kovind-selected-as-bjp-candidate

பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பாஜகவின் துணை அமைப்பான தலித் மோர்ச்சாவின் தலைவராக இருந்தவர். பாஜக வேட்பாளராக சுஷ்மா ஸ்வராஜ், சுமித்ரா மஹாஜன், ட்ராபடி முர்மு, தவார் சந்த் கெஹ்லாட், நெஜ்மா ஹெப்துல்லா போன்ற மூத்த தலைவர்களின் பெயர்கள் அடிபட்டுவந்த நிலையில் அக்கட்சியின் தேசியத் தலைமை ராம்நாத் கோவிந்தை தேர்வு செய்தது ஏன்?  இதற்கு நான்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஒன்று....தலித் அஜெண்டா
மாட்டிறைச்சி விவகாரத்தில் தலித் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு எதிராக பாஜகசெயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையை அனைத்து மக்களிடமும் கொண்டுபோய் சேர்த்துள்ளன. கேரளா, புதுச்சேரி, மேகாலயா போன்ற பாஜக அல்லாத மாநில அரசுகள் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. இதற்கிடையில் குஜராத்தில் தாழ்த்தப்பட்டோர் உரிமைக்கான போராட்டங்கள் வலுத்துவருகின்றன. குஜராத்தில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வர இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் மாநில அரசுக்கு எதிரான தாழ்த்தப்பட்டோர் உரிமைப் போராட்டம் பாஜகவின் வாக்குகளை கணிசமாக குறைக்கும். ஒருவேளை குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சியை இழக்கும் சூழல் ஏற்பட்டால் அது 2019 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கை ஓங்குவதற்கு வழி வகுத்துவிடும். ஆகவே ஒரு தலித் வேட்பாளரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்தால் தனக்கு ஏற்பட்டுள்ள நெகட்டிவ் இமேஜை சரிசெய்வதோடு, தலித் மக்களை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவுக்குள் கொண்டு வர முடியும் என்று அக்கட்சி கருதுகிறது.

இரண்டு....மூத்த தலைவர்களுக்கு முற்றுப்புள்ளி

2013 ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பாஜகவில் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்களுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. தற்போது அத்வானியும், ஜோஷியும் பாபர் மசூதி இடிப்பு வழக்கை சந்தித்து வருகின்றனர். ஆரம்பத்தில் அத்வானியின் ஆதரவாளர்களாக இருந்த மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுஹான், நிதின் கட்கரி போன்ற தலைவர்கள் கூட நிலைமை கைமீறி போனதை உணர்ந்து மோடி பக்கம் சாய்ந்துவிட்டனர். எனவே மீண்டும் பிரபலமான, மூத்த தலைவர்களை குடியரசுத் தலைவராக்குவது தேவையில்லாத தலைவலியாகிவிடும் என்று மோடியும், அமித்ஷாவும் எண்ணி இருக்கக்கூடும். அதனால்தான் ராம்நாத் கோவிந்த் தேர்வு என்கிறார்கள்.

மூன்று.... எதிர்க்கட்சிகள் பலத்தை குறைத்தல்
உத்தரப் பிரதேச மாநிலத்தின் அபார வெற்றிக்கு பிறகு, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும், சிவசேனா போன்ற கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஆளும் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் பிரிந்தால் அது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிடும். எதிர்க்கட்சிகள் சார்பாக காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி போன்ற வேட்பாளர்கள் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிகிறது. எனவே பாஜக அறிவிக்கும் வேட்பாளர் கூட்டணிக் கட்சிகளை சிதறவிட்டுவிடக் கூடாது. அதேசமயம் எதிர்கட்சிகளையும் கொஞ்சம் நிலைகுலைய வைக்க வேண்டும்என்று பாஜக கருதியது. அதனால் ஒரு தலித் தலைவரை அறிவித்தால் ஒரு நன்மதிப்பு ஏற்படும் என்று கருதியுள்ளது. அவர்கள் போட்ட கணக்குப்படி, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, தெலுங்கு தேசம், பிஜு ஜனதாதளம் போன்ற கட்சிகள் இப்போதே ஆதரவைத் தெரிவித்து விட்டன. ஐக்கிய ஜனதாதளம், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை ஒரு நிர்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளன. 

நான்கு.....உத்தரப்பிரதேசத்தை தக்க வைப்பது

இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் இருந்துதான் அதிகமான எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். எனவே அவர்களுடைய வாக்கும், சட்டமன்ற, நாடாளுமன்ற பிரதிநிதித்துவமும் மிகவும் முக்கியமானது. 2014 நாடாளுமன்ற தேர்தலில், 80 மக்களவை தொகுதிகளில் 73-இல் பாஜக வென்றது. 2017 சட்டமன்றத் தேர்தலில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பாஜக கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. இந்த பலம் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு மட்டுமல்ல; மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மசோதாவை வெற்றி பெறச் செய்யப் பயன்படும். எனவே உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை குடியரசுத் தலைவர் ஆக்குவது, உ.பி. மாநில பாஜகவை மேலும் பலப்படுத்தும் என்று பாஜக கருதியது. தன்னைச் சந்திக்க வரும் தலித்துகள் சோப்புப் போட்டுக் குளிக்க வேண்டும் என்று கூறினார் என்ற விமர்சனத்திற்கு ஆளான உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தே கூட மண்ணின் மைந்தரை வெற்றி பெறச் செய்யுங்கள் என்ற கோரிக்கையை வைத்துள்ளார். ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவரானால் அப்பதவியில் அமரும் முதல் உ.பி. மாநிலத்தவர் என்ற பெருமையும் அவருக்கு கிடைக்கும். இதன் மூலம் கிடைத்த உத்தரப் பிரதேசத்தைத் தக்க வைப்பது மட்டுமல்ல பாஜகவை மேலும் அங்கு வேரூன்றச் செய்து விடலாம் எனக் கருதுகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close