[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதுச்சேரியில் நகர பேருந்துகளில் ஆரம்பநிலை கட்டணம் ரூ.5இல் இருந்து ரூ.7ஆக உயர்த்தி மாநில அரசு அறிவிப்பு வெளியீடு
  • BREAKING-NEWS கடந்த ஓராண்டில் எல்லை பாதுகாப்புப் படையினரின் திறமையை நாடே அறிந்துள்ளது: ராஜ்நாத் சிங்
  • BREAKING-NEWS ஆட்சியை கலைத்து விட்டு முதல்வர் ஆவதே ஸ்டாலினின் கொள்கையாக உள்ளது: அமைச்சர் வேலுமணி
  • BREAKING-NEWS இன்று தமிழகத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழந்தனர்
  • BREAKING-NEWS ஐஃபோன் 7 வாங்க ரூ.7,777 முதல் தவணை: ஏர்டெல் ஆஃபர்!
  • BREAKING-NEWS வரும் 25 ஆம் தேதிக்கு பிறகுதான் வடகிழக்கு பருவமழை தொடங்கும்:வானிலை மையம்
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைகள் டெங்கு உயிரிழப்பு பற்றிய சான்றை தரக்கூடாது என மிரட்டல் விடுக்கப்படுகிறது: ஸ்டாலின்
  • BREAKING-NEWS இன்று தமிழகத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்தனர்
  • BREAKING-NEWS தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மக்களுக்கு வாழ்த்து
  • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 23,327 கன அடியில் இருந்து 15,667 கன அடியாக குறைவு
  • BREAKING-NEWS உலகின் இளம் பிரதமருக்கு தலைவர்கள் வாழ்த்து
  • BREAKING-NEWS எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் கைது
  • BREAKING-NEWS ஊத்தங்கரை அடுத்த நாகனூரில் வைரஸ் காய்ச்சலுக்கு ராஜா என்பவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் 2 ஆவது தளத்தில் உள்ள அறை எண் 242 இல் தீ விபத்து
சிறப்புக் கட்டுரைகள் 07 Jun, 2017 08:47 PM

இப்படித்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார் குடியரசுத் தலைவர்!

president-election-process

நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் முறை குறித்து பார்க்கலாம். 

13ஆவது குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி நாட்டின் 14ஆவது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாமல் மறைமுக வாக்கெடுப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 

யாருக்கு வாக்குரிமை?: 

மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் 
நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் 

எம்எல்ஏக்கள் ஓட்டு மதிப்பு கணக்கிடும் முறை:

மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் ஓட்டின் மதிப்பானது, குறிப்பிட்ட மாநிலத்தின் மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். தமிழக எம்எல்ஏவின் ஓட்டின் மதிப்பும், உத்தரப்பிரதேச மாநில எம்எல்ஏவின் ஓட்டின் மதிப்பும் மாறுபடும். ஒரு எம்எல்ஏவின் ஓட்டின் மதிப்பானது மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கையை, மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்து, அதனை ஆயிரத்தால் பெருக்கிக் கிடைக்கும் தொகையே ஓட்டின் மதிப்பாகக் கருதப்படும். 

ஒரு எம்எல்ஏவின் ஓட்டு மதிப்பு = மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை/ மாநிலத்தின் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை * 1000 
உதாரணமாக, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 4,11,99,16 (1971ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி). மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 234. இதன்படி தமிழகத்தில் ஒரு எம்எல்ஏவின் ஓட்டு மதிப்பு கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகிறது.

ஒரு எம்எல்ஏவின் ஓட்டு மதிப்பு - 4,11,99,168/234*1000=176.06. 

தமிழக எம்எல்ஏக்களின் ஓட்டுகள் மொத்த மதிப்பு 176.06 * 234 = 41,198 (41198.04).

எம்எல்ஏக்கள் ஓட்டு அடிப்படையில் நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேச மாநில எம்எல்ஏக்களின் ஓட்டு மதிப்பு அதிகமாகும். குறைந்த அளவு மக்கள் தொகை கொண்ட சிக்கிம் மாநில எம்எல்ஏக்களின் ஓட்டு மதிப்பு நாட்டிலேயே குறைவானது.  

எம்பிக்களின் ஓட்டு மதிப்பு கணக்கிடும் முறை: 

மாநில எம்எல்ஏக்களின் ஒட்டுமொத்த ஓட்டுமதிப்பினை, மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்து கிடைக்கும் எண்ணிக்கையே ஒரு எம்பியின் ஓட்டு மதிப்பாகும். மக்களவை மற்றும் மாநிலங்களைவையை சேர்த்து மொத்த எம்பிக்களின் எண்ணிக்கை 776 ஆகும். நாட்டிலுள்ள மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 4,120 ஆகும். இவர்களின் மொத்த ஓட்டு மதிப்பு 5,49,474. அதன்படி கணக்கிட்டால் ஒரு எம்பியின் வாக்கு மதிப்பு 708 ஆகும். 

குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறை: 

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வாக்குப்பதிவு தேசிய தலைநகர் மற்றும் மாநில தலைநகரங்களில் நடைபெறும். குடியரசுத் தலைவர் தேர்தலில் 2 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடும் நிலையில், வாக்காளர்களின் முதல் தேர்வு அடிப்படையில் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவர். வேட்பாளர்களின் எண்ணிக்கை இரண்டைத் தாண்டும்பொழுது வாக்காளர்களின் முதல் தேர்வு அடிப்படையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். தேர்தலில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என மொத்தம் 4,896 பேர் வாக்களிப்பர். இவர்களின் ஒட்டுமொத்த வாக்கு மதிப்பு 10,98,882 ஆகும். குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் தேவை. அதாவது, 5,49,442 வாக்குகள் பெற்றால் வெற்றிபெற்று விடலாம். 

கட்சிகளின் நிலை:

தற்போது ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு 5,32,03‌7 வாக்குகள், அதாவது 48.64 சதவீத வாக்குகள் உள்ளன. குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற ‌அந்தக் கட்சிக்கு தேவைப்படுவது 14,40‌5 வாக்குகள் மட்டும்தான். அதேபோல எதிர்கட்சியான காங்கிரஸ் தலைமையில் கூடும் மதச்சார்பற்ற அணிக்கு 35.07 சதவீத வாக்குகள் உள்ளன. மாநில கட்சிகளான அதிமுக (தமிழகம்), பிஜேடி (ஒடிசா), டிஆர்எஸ் (தெலங்கானா), ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (ஆந்திரா), ஆம்ஆத்மி (டெல்லி மற்றும் பஞ்சாப்), ஐஎன்எல்டி (ஹரியானா) ஆகிய 6 கட்சிகளுக்கு ஒட்டுமொத்தமாக 13.06 சதவீத வாக்குகள் உள்ளன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இந்த 6 கட்சிகளின் ஆதரவைப் பெறும் நிலையில், அந்த கூட்டணியின் வாக்குகள் சதவீதம் 48.53ஆக மாறும். இது பாஜக கூட்டணியை விட 0.09 சதவீதம் மட்டுமே குறைவாகும். அதனால், குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்த கட்சிகள் முக்கிய பங்காற்றும் என்று கணிக்கப்படுகிறது. 
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close