[X] Close
JUST IN
 • BREAKING-NEWS தோனி சாதனையை சமன் செய்த கோலி
 • BREAKING-NEWS மேற்கு வங்கம்: வடக்கு 24 பர்கானாஸ் அருகே பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து- 20 பேர் காயம்
 • BREAKING-NEWS பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் ஓட்டுநரின் உதவியாளர் தூங்கியதால் ரயில் தாமதம்
 • BREAKING-NEWS ஜார்க்கண்ட: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8பேர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS ஜோத்பூரில் முத்தலாக் மூலம் போனில் பெண்ணுக்கு விவாகரத்து அளிக்கப்பட்டதாக புகார்
 • BREAKING-NEWS பட்டாசுகள் வாங்க ஆதார், பான் வேண்டும்
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 8,597 கன அடியில் இருந்து 13,281 கன அடியாக அதிகரிப்பு
 • BREAKING-NEWS இன்றைய விலை: பெட்ரோல் ரூ.72.99; டீசல் ரூ.61.85
 • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி
 • BREAKING-NEWS லிபியா: ஐ.எஸ்.பயங்கரவாத முகாம் மீது அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலில் 17பேர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி- 5 பேர் பலி
 • BREAKING-NEWS நாகை: மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் மகா புஷ்கரம் விழா கொடி இறக்கத்துடன் நிறைவு
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: ஜெ.தீபா
 • BREAKING-NEWS தூத்துக்குடி: கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு ஆய்வு
சிறப்புக் கட்டுரைகள் 06 Jun, 2017 02:39 PM

‘மனிதன் ஓர் அரசியல் விலங்கு’ நானும் அப்படிப்பட்டவன் தான்!

tribute-to-era-chezhian

 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 95. வேலூரில் தனியார் கல்லூரி ஒன்றில் தங்கியிருந்த அவருக்கு முதுமை காரணமாக திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் 1923 ஆம் ஆண்டு பிறந்த இவர்,  நெடுஞ்செழியனின் இளைய சகோதரர்.

மாணவர் பருவத்திலேயே திராவிடர் இயக்கத்தில் சேர்ந்த இரா.செழியன், திமுக ஆரம்பிக்கப்பட்டபோது அண்ணாவுடன் இணைந்து செயலாற்றினார். அதன்பிறகு அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி, ஜனதா கட்சியில் சேர்ந்து ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் இணைந்து செயல்பட்டார். இந்திரா காந்தி நெருக்கடி நிலை அறிவித்த காலத்தில் அதை எதிர்த்து கடுமையாக போராடினார். ஜனதா கட்சி, ஜனதா தளமாக மாறியபோது முக்கியப் பொறுப்புகளில் பதவி வகித்தார். ராமகிருஷ்ண ஹெக்டே, ஜனதா தளத்திலிருந்து நீக்கப்பட்ட பின்னர் துவங்கிய லோக் தளம் கட்சியின் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தார். ஊழலுக்கு எதிரான முயற்சிகளிலும் இரா.செழியன் ஈடுபட்டார். அரசுப் பதவிகளில் நாட்டமில்லாது, இறுதி வரை கட்சிப் பணிகளிலேயே தீவிரமாக இருந்தார். மக்களவையிலும், மாநிலங்களவையிலும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.பி. பதவியில் இருந்து அப்பழுக்கற்ற அரசியல்வாதி என்ற பெயரைப் பெற்றவர் இரா.செழியன்.

இரா.செழியன் நாடாளுமன்றத்தில் பேசிய அவருடைய உரைகள் தொகுக்கப்பட்டு, 'Parliament for The People' என்ற நூலாக வெளிவந்துள்ளது. நெருக்கடி கால அத்துமீறல்களை ஷா கமிசன் விசாரித்து 525 பக்கங்களில் அறிக்கை அளித்தது. இதை அப்போதைய இந்திய அரசு கிடப்பில் போட, செழியன் அதனை மீட்டெடுத்து, 'Shah Commission Report - Lost and Regained' என்ற நூலாக வெளியிட்டார். அரசியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேவையாற்றிய இரா.செழியன், 2001 ஆம் ஆண்டு ஓய்வுபெற்று வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் கெளரவப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான இரா.செழியன் தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறும்போது இப்படிச் சொன்னார், “எந்த அரசியல் கட்சிக்கும் நான் சொந்தக்காரன் அல்ல. பொது மனிதன். அரசியலில் இல்லை என்றாலும்கூட, மக்கள் சம்பந்தமான பிரச்னைகளில் தொடர்ந்து போராடுவேன்; அவர்களுக்காக நடத்தப்படும் எந்தப் போராட்டத்திலும் முன்வந்து செயல்படுவேன். மனிதனை, 'ஓர் அரசியல் விலங்கு' என்று கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில் வர்ணித்தார். எனவே, நானும் அத்தகைய மனிதனாவும், மனிதநேயம் கொண்ட அரசியல்வாதியாகவும் தொடர்ந்து பாடுபடுவேன். நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close