[X] Close
JUST IN
 • BREAKING-NEWS இன்று சென்னை வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்
 • BREAKING-NEWS தொடர்ந்து வென்று ஃபைனலில் தோற்றது தூத்துக்குடி
 • BREAKING-NEWS அணிகள் இணைப்பு குறித்து இன்று நண்பகல் 12 மணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 • BREAKING-NEWS மழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்கத் தடை
 • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.01 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.01
 • BREAKING-NEWS சென்னை எழும்பூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் நடிகர் விஷால் சந்திப்பு
 • BREAKING-NEWS மதுரையில் ரூ.1 கோடி மதிப்புள்ள பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
 • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
 • BREAKING-NEWS ரஜினிகாந்த் தேர்தலில் வெற்றிபெற்று கோட்டையில் முதலமைச்சராக அமரும் நாள் வரும்: தமிழருவி மணியன்
 • BREAKING-NEWS சென்னையில் பழமையான கார், இருசக்கர வாகனங்களின் கண்காட்சி
 • BREAKING-NEWS அதிமுக அரசு விரைவில் ஜனநாயக ரீதியில் வீழ்த்தப்படும்: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS ஆட்சி நிர்வாகத்தில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்: திருமாவளவன்
 • BREAKING-NEWS தமிழகத்தில் பேரவையை கலைத்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும்: கார்த்தி சிதம்பரம்
 • BREAKING-NEWS ராமநாதபுரம்: முதுகுளத்தூர் - கடலாடி காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு
சிறப்புக் கட்டுரைகள் 29 May, 2017 06:50 PM

திராவிட நாடு என்பதே ஒரு மாயை

dravida-nadu-trending-social-media-maniyarasan

(திராவிட நாடு என்ற வார்த்தை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.  இந்த சந்தர்ப்பத்தில் தமிழர் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தனது கருத்துக்களை இங்கே முன்வைக்கிறார்)

திராவிட என்ற சொல் ஆரியர்களால் உருவாக்கப்பட்டது. ஆரிய இலக்கியங்களான மனுதர்ம சாஸ்திரம் மற்றும் சில புராணங்கள் ஆகியவற்றில்தான் திராவிட என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பிராமணர்களையும் சேர்த்துத்தான் அவர்கள் திராவிட என்று சொன்னார்கள். விந்திய மலைக்கு வடக்கே இமய மலைக்கு தெற்கே இருந்த பகுதியை அவர்கள் ஆரியவர்த்தம் என்று அழைத்தனர். அந்தப் பகுதியை விட்டு வெளியே போன குறிப்பாக பிராமணர்களை திராவிடர்கள் என்று அவர்கள் அழைத்தனர்.

கர்நாடகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் பெயர் ராகுல் திராவிட். இவரிடம் திராவிட் என்ற பெயரைப் பற்றிக் கேட்ட போது, தனது பூர்வீகம் கும்பகோணத்தைச் சேர்ந்த பிராமண குடும்பம் என்றும் தனது குடும்பப் பெயர் திராவிடம் என்றும் சொன்னார்.

அதே போல் தற்போது மயிலாப்பூர் சமஸ்கிருதக் கல்லூரியில் உள்ள பேராசிரியர் ஒருவரின் பெயர் மணி திராவிட்.  அவரது முன்னோர்கள் மும்பையில் இருந்தவர்கள். அவர் தனது குடும்பப் பெயர் திராவிட் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் தமிழர்கள் தங்களை திராவிடர்கள் என்று ஒருபோதும் சொல்லிக் கொண்டதில்லை. சங்க இலக்கியங்களில், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பிய ங்களில் தேவாரம் திருவாசகம் போன்ற ஆன்மீக இலக்கியங்களில் எங்குமே திராவிடம் என்ற வார்த்தை இல்லை. அதைத் தமிழர்கள் விரும்பவுமில்லை.

ஆரியர் வருகையின் போது புழக்கத்தில் வந்த திராவிடம் என்ற சொல்லுக்கு பின்னர் மறைந்து போய், ஆங்கிலேயர்கள் காலத்தில் மீண்டும் மறு உருவம் கொடுக்கப்பட்டது.

மொழியியல் அறிஞர் கால்டுவெல் தமிழும் சமஸ்கிருதமும் படித்தவர். அவர் மொழியியல் குறித்து ஆய்வு செய்த போது தமிழ் மொழி தனித்து இயங்கக் கூடியது என்றும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் தமிழில் இருந்து பிரிந்தவை என்றும் கூறினார். இந்த மொழிக் குடும்பத்திற்கு அவர் திராவிட மொழிக் குடும்பம் என்று பெயர் வைத்தார்.

வடக்கே  மராத்தி, வங்காளி, குஜராத்தி ஆகிய மொழிகள் சமஸ்கிருத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று  மாக்ஸ் முல்லர் போன்ற  மொழி அறிஞர்கள் கூறியிருக்கின்றனர். அதே போல கால்டுவெல் தென்னிந்திய மொழிகளுக்கு திராவிட மொழிக்குடும்பம் என்று பெயர் வைத்தார்.

அதன்பிறகு தமிழக அரசியலில் வலுவாக திராவிடத்தை நிறுவ விரும்பியவர்கள் பெரியாரும் அண்ணாவும். தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளி  எனும் அனைவருக்குமான பொதுச் சொல் திராவிடம் என்று பெரியார் சொன்னார்.

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 1939ல் பெரியார் வசம் ஒப்படைக்கப்பட்டு, 1944ல் நடந்த மாநாட்டில் அதற்கு திராவிடர் கழகம் என்ற பெயரைச் சூட்டுகிறார்கள்.

பெரியாரும் அண்ணாவும்தான் திராவிடம் என்ற சொல்லை வலிந்து திணித்தனர். உண்மையில் அவர்கள் சொன்னதைப் போல தெலுங்கர்களோ மலையாளிகளோ கன்னடர்களோ தங்களைத் திராவிடர்கள் என்ற சொல்லிக் கொள்ளவில்லை. தமிழகத்தைப் போல திராவிடர் கழகம் என்ற அமைப்பு அங்கெல்லாம் இல்லை.

திராவிடர் கழகம் என்பது உண்மையில் தமிழர்களைக் கொண்ட அமைப்பாகத்தான் இருந்ததே தவிர, நடைமுறையில் தென்னிந்தியர்களை ஒன்று படுத்தும் அமைப்பாக இல்லை.

திராவிடம் என்ற பெயரில் ஒரு நாடோ, ஒரு இனமோ, மொழியோ  இருந்ததில்லை.

திராவிடம் என்ற சொல்லை மற்ற தென்னிந்தியர்கள் யாரும் ஏற்றதில்லை. தமிழிலில் இருந்து தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற மொழிகள் பிரிந்தன என்பதைக் கூட அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

எம்ஜிஆர்  ஆட்சிக்காலத்தில் மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடந்த போது, தென்மாநில முதலமைச்சர்களை அழைத்திருந்தார்.  மாநாட்டில் லெமூரியா கண்டம் குறித்த கண்காட்சியை கேரள முதலமைச்சர் ஈகே நாயனார் திறந்து வைத்தார்.  அந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய போது, தமிழும் மலையாளமும் அக்காவும் தங்கையும் போல என்று பேசினார்.  அதே மேடையில் பேசிய எம்ஜிஆர்  தமிழும் மலையாளமும் அக்காளும் தங்கையும் அல்ல. தாயும் மகளும் போல என்று சொன்னார்.

தற்போது கேரளாவில் இருந்து திராவிட நாடு என்ற சொல்லை சிலர் சொல்கிறார்கள் என்றால், அதற்குப் பின்னால் ஆரிய சூழ்ச்சி இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்ற இயல்பான இயற்கையான தேசிய இனங்களை அழிப்பதற்கு இந்துத்துவா சக்திகள் இப்படி ஒரு மாயையான ஒரு கருத்தாக்கத்தைப் பரப்புகிறார்களோ என்ற ஐயம் எழுகிறது.

இதை அறியாமல், இந்துத்துவாவை எதிர்ப்பதற்குக் கிடைத்த ஒரு கருவியாக இளைஞர்கள் சிலர் திராவிட நாடு என்ற சொல்லைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அவர்களை அறியாமல் இந்துத்துவா சூழ்ச்சிக்குப் பலியாகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆர்எஸ்எஸ்சின் கைவேலையாக இருக்கும் அனுகூலச் சத்ரு கூட இருந்து அழிப்பதற்கான ஆரியக் கலாச்சாரம் மனுதர்ம கலாச்சாரம்தான்.

பெ.மணியரசன், தலைவர் தமிழ் தேசிய பேரியக்கம்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close