[X] Close
JUST IN
 • BREAKING-NEWS தீபாவளியையொட்டி பட்டாசு வெடிப்பதால் சென்னை நகரம் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது
 • BREAKING-NEWS சென்னை : பட்டாசு வெடித்து தீக்காயமடைந்த 10 பேருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
 • BREAKING-NEWS 68சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேசத்தில் நவ.8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது
 • BREAKING-NEWS இமாச்சலபிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்கு 68 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக
 • BREAKING-NEWS சங்கரன் கோவிலில் பிவிசி பைப் கிடங்கில் தீ விபத்து; தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்
 • BREAKING-NEWS தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிப்பு
 • BREAKING-NEWS சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை நிலவேம்பு விநியோகத்தில் ரசிகர்கள் ஈடுபட வேண்டாம்: கமல்
 • BREAKING-NEWS ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து
 • BREAKING-NEWS ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து 13,000 கனஅடியில் இருந்து 12,000 கனஅடியாக குறைந்தது #HogenakkalFalls
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,667 கன அடியில் இருந்து 8,554 கன அடியாக குறைந்துள்ளது
 • BREAKING-NEWS தமிழகத்தில் 15 நாட்களில் டெங்கு இல்லாத நிலை உருவாக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS புதுச்சேரியில் நகர பேருந்துகளில் ஆரம்பநிலை கட்டணம் ரூ.5இல் இருந்து ரூ.7ஆக உயர்த்தி மாநில அரசு அறிவிப்பு வெளியீடு
 • BREAKING-NEWS கடந்த ஓராண்டில் எல்லை பாதுகாப்புப் படையினரின் திறமையை நாடே அறிந்துள்ளது: ராஜ்நாத் சிங்
 • BREAKING-NEWS ஆட்சியை கலைத்து விட்டு முதல்வர் ஆவதே ஸ்டாலினின் கொள்கையாக உள்ளது: அமைச்சர் வேலுமணி
சிறப்புக் கட்டுரைகள் 25 May, 2017 03:07 PM

நீட் தேர்வு........ நீடிக்கிறது சிக்கல்

national-eligibility-and-entrance-test

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா எந்த முடிவும் தெரியாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் நீட் தேர்வை எதிர்த்து வந்த நிலையில் கடந்த மே 7ம் தேதியன்று நீட் தேர்வு நடந்தது. தமிழகத்தில் 85 ஆயிரம் பேர் எழுதினர். அந்தத் தேர்விலும் மாணவர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியில் நடைபெற்ற அந்தத் தேர்வின் முடிவை வெளியிட மதுரை உயர்நீதிமன்றக் கிளை தற்போது இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தற்போது தேர்வு எழுதிய மாணவர்கள் அடுத்து என்ன நடக்கும் எனத் தெரியாமல் தவிக்கின்றனர்.

ஜெயலலிதா இருந்தபோதே நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் மறைவுக்கு பிறகு, ஓ.பி.எஸ். தலைமையிலான அரசு நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்டமசோதா ஒன்றை கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி சட்டமன்றத்தில் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால் தமிழக அரசு நிறைவேற்றிய மசோதா, குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு வந்து சேரவில்லை என்று கூறப்பட்டது. 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் அம்மசோதாவின் நிலை என்ன என்று தெரியவில்லை. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா, குடியரசு தலைவர் நிராகரிக்கும்வரை காலாவதியாகாது என்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவி ஏற்றுக் கொண்ட பிறகு நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு கடிதம் மூலமாகவும், பிரதமரை நேரில் சந்தித்தும் கோரிக்கை வைத்தார்.

கடந்த மே 7ம் தேதி நீட் தேர்வை எழுதிய மாணவ மாணவிகள் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், நீட் தேர்வில் வினாத்தாள்கள் ஒரே மாதிரியாக இல்லை. ஆங்கிலத்தில் இருந்த வினாத்தாளுக்கும் தமிழில் இருந்த வினாத்தாளுக்கும் இடையே பெரிய வேறுபாடுகள் இருந்தன. இதனால் இந்தத் தேர்வை செல்லாது என்று அறிவித்து, அதேசமயம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடவும் தடை விதிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன், மாணவ மாணவிகளின் மனுவை ஏற்று, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்தார். மேலும் இதுகுறித்து முடிவு செய்ய கால அவகாசம் தேவைப்படுவதால் வழக்கை ஜூன் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனிடையே நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்வது தொடர்பான வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றமும் இன்று மறுப்பு தெரிவித்துவிட்டது. நீட் தேர்வு முடிவை வெளியிட ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளதைக் குறிப்பிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், அவசர வழக்கு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த இளைஞர் இயக்கம் என்ற அமைப்பின் நிறுவனர் மருத்துவர் எழிலன், “மத்திய அரசு மாநில சுயாட்சிக்கு எதிரான நிலைப்பாடில் உள்ளது என்பதோடு, உச்சநீதிமன்றமும் அதே நிலைப்பாட்டில் உள்ளது. மாநில அரசுக்கு எதிராக இருக்கிறது என்பதைக் காட்டிலும், மாநிலங்களில் இயங்கும் உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளுக்கும், நிலைப்பாடுகளுக்குமே எதிராக உள்ளது. பொதுவான தேர்வு என்று சொல்லி விட்டு, குஜராத்தில் எளிமையான வினாத்தாள், மேற்கு வங்கம், தமிழகத்தில் கடினமான வினாத்தாள் என பாகுபாடு காட்டுவதும், எய்ம்ஸ், ஜிப்மர், பி.ஜி.ஐ சண்டிகர் போன்ற நிறுவனங்களை நீட் தேர்வு முறைக்குள் கொண்டுவராமல் விலக்கு அளிப்பதும் என்ன நியாயம்?” என்று கேள்வி எழுப்புகிறார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 17 ஆம் தேதி தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டு, ஜூன் 20 ஆம் தேதி முதல் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புக்கான ஒற்றைச்சாரள முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு நீட் தேர்வால் ஏற்பட்ட குழப்பங்களின் விளைவாக, மாணவர் சேர்க்கை குறித்து எந்த தெளிவான முடிவும் தெரியவில்லை. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 85 ஆயிரம் பேர் முடிவு என்ன வரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். மற்றொரு புறம் நீட் தேர்வு எழுதாத பிளஸ் டூ முடித்த முதல் குரூப் எடுத்துப் படித்த மாணவர்கள், ஒரு வேளை நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்து தங்களின் மருத்துவப் படிப்புக் கனவு நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close